சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த 8 படங்கள் - 2


                  சென்னை திரைப்பட விழாவில் நான் பார்த்த படங்களுள் சிறந்த எட்டு படங்களை பட்டியலிட போன பதிவில் தொடங்கி இந்த பதிவில் முடிக்கிறேன். சென்ற பதிவில் நான்கு படங்களை அறிமுகப்படுத்தி விட்டதால் மிச்சமிருக்கும் நான்கு படங்களை சிறந்த நான்கு படங்களாகவும் கொள்ளலாம்.

சென்ற பதிவை படிக்க இங்கே கிளிக்கவும்..,

4. Departures:

             மரணத்தை சூழ்ந்திருக்கும் மர்மமே அதன் மீதான பெரும் பயத்தை ஏற்படுத்துகிறது. அந்த பயமே மரணத்தை சார்ந்து இருப்பவர்கள் மீதான அசூசையும் வெறுப்பையும் இயல்பாகவே உருவாக்கி விடுகிறது. அப்படி மரணத்தை சார்ந்த ஒரு வேலையை தேர்ந்தெடுக்கும் ஒரு இசை கலைஞன் மீதான வெறுப்பும் அசூசையும் அன்பாக மாறும் அற்புதம் தான் "Departures". செல்லோ (பெரிய வயலின்) கலைஞனான நாயகனின் இசை குழு கலைக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடியின் காரணமாக இறந்தவர்களுக்கு மேக்கப் செய்யும் நிறுவனம் ஒன்றில் வேண்டா வெறுப்புடன் வேலைக்கு சேர்கிறான். இறந்த வீடுகளில் கிடைக்கும் அனுபவங்களின் மூலம் அந்த வேலையை வெறுத்த அவனும் மற்றவர்களும் அந்த வேலை மூலம் கிடைக்கும் ஆத்ம திருப்தியை உணர்வது தான் கதை.


       மொத்த படமுமே மரணத்தை சுற்றியே நடக்கிறது ஆனாலும் நம் கண்ணுக்கு க்ளிசெரின் ஊற்ற முயற்சிக்காமல் ஒரு உன்னதமான அனுபவத்தை கொடுக்க முயற்சித்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். தெளிவான தேவையற்ற காட்சிகளற்ற திரைக்கதை, அற்புதமான இசை, பலமான உரையாடல்கள் எனக் குறிப்பிட்டு சொல்லும் அளவு குறைகள் ஏதும் இல்லாத அற்புதமான படம். இந்த படம் 2008-ம் ஆண்டிற்க்கான சிறந்த வெளிநாட்டு படத்திற்க்கான ஆஸ்கர் விருதை பெற்றது.

3. Final Cut - Ladies and Gentlemen :

              முதலில் இது ஒரு திரைப்படம் அல்ல, 450-க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களின் காட்சி துணுக்குகளின் தொகுப்பு. என்ன தான் எண்ணற்ற திரைப்படங்களின் கதம்ப மாலை என்றாலும் அவற்றின் துணையோடு ஒரு சின்ன கதையையும் சொல்லி இது வரை இருந்த கதை சொல்லும் பாணியை எல்லாம் அனாயசயமாக தாண்டி இருக்கிறார்கள். பஸ்டர் கீடன் தொடங்கி ராம் சரண் தேஜா வரை, Birth of the Nation தொடங்கி ஓம் ஷாந்தி ஓம் வரை, 2001 தொடங்கி அவதார், Pulp Fiction தொடங்கி Paprika வரை உலகின் அத்தனை கிளாசிக்கிலும் அத்தனை முக்கியமான படங்களையும் தொட்டு செல்கிறது.


              நமக்கு ரொம்ப பிடித்த படத்தின் ஒரு காட்சி எதோ ஒரு படத்தில் வந்தாலே உற்சாகமாய் இருக்குமல்லவா இந்த படத்தில் உங்களுக்கு பிடித்த அனைத்து படங்களில் இருந்தும் ஒரு துணுக்கு வந்து விடுவதால் மனதிற்க்குள் ஒரு மாதிரி இதமான உணர்வு ஏற்படுகிறது. படம் மட்டுமல்ல படம் முடிந்த பின்னர் அனைத்து படங்களின் பெயரையும் காட்சிகளின் வரிசையிலையே போடுகின்றனர் பெரும்பாலனவர்கள் அனைத்தையும் நின்று பார்த்துவிட்டு சென்றனர். திரைப்பட காதலர்கள் அனைவரும் நிச்சயம் தவறாமல் பார்க்க வேண்டிய திரைப்படம்.

2. Holy Motors:

                பார்ப்பவர்களின் கண்களுக்கும் மூளைக்கும் இடையில் கண்ணாமூச்சு விளையாடும் வித்தியாசமான சர்ரியலிஸ திரைப்படம். ஒரு நடிகனுக்கு ஒரு நாளில் ஒன்பது இடங்களில் நடிப்பதற்க்கான பட்டியல் ஒன்று தரப்படுகிறது. நடிப்பென்றால் நாடகத்திலோ திரைப்படத்திலோ அல்ல நிஜ வாழ்க்கையில் அதாவது கூடு விட்டு கூடு பாய்வது போல் ஒரு வாழ்க்கையில் இருந்து இன்னொரு வாழ்க்கைக்கு செல்ல வேண்டும். எது நிஜ வாழ்க்கை ?? எது நடிப்பு என்றெல்லாம் பிரிக்க முடியாத படி அங்காங்கே சில வட்டங்களின் முனைகளை இணைத்து சென்று இருக்கிறார்கள்.


                அரசியல்வாதி, பிச்சைகாரன், சினிமாவில் மோஷன் கேப்சர் ஆர்டிஸ்ட், பைத்தியம், கொலை செய்பவன், கொலை செய்யப்படுபவன், இசை கலைஞர், சாக காத்திருக்கும் கிழவர், குடும்ப தலைவர் என ஏகப்பட்ட கதாப்பாத்திரங்களை எந்த பிழையும் செய்து இருக்கிறார் நாயகன் Denis Lavant. எந்த தர்க்கத்துக்குள்ளும் அடங்காத கதையாக இருந்தாலும் படம் ஓடும் 100 நிமிடங்களும் தலையை திருப்பாமல் பார்க்க வைக்கின்றனர். படத்தில் ரொம்ப பிடிச்ச இன்னொரு விஷயம் இசை அதிலும் குறிப்பாக அந்த தீம் மியூசிக். நல்ல சவுண்ட் சிஸ்டம்ல கேட்டு பாருங்க இரத்ததில் ஏதோ ஒரு திரவம் கலந்து இருக்கையில் இருந்து சில மில்லி மீட்டர்கள் மேலே செல்வதை உணர்வீர்கள்.


1. Amour:

              இந்த வருட திரைப்பட விழாவில் நான் பார்த்த முதல் திரைப்படம் சந்தேகமே இல்லாமல் நான் பார்த்த சிறந்த படமும் இதுவே. வாழ்க்கையில் சுகமான முடிவு என்று ஒன்று கிடையவே கிடையாது நமது எல்லா பயணங்களும் ஒரு தோல்வியை நோக்கி ஒரு சூன்யத்தை நோக்கி அல்லது ஒரு மரணத்தை நோக்கியே இருக்கிறது.  வயதான தம்பதிகளான ஜார்ஜ் மற்று ஆன்னி பெரிய வீட்டில் தனியா வசிக்கின்றனர். வயதானாலும் அன்யோன்யமும் காதலும் குறையாமல் இருக்கிறது அதிலும் ஜார்ஜ் எப்போதும் ஆன்னியை விட்டு எப்போதும் விட்டு விலகாமலே இருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆன்னி தீவிரமாக உடல்நிலை மோசமாகி கொஞ்சம் கொஞ்சமாக செத்து கொண்டிருக்கிறார். அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இடையில் ஏற்படும் பிரிவின் துயரமும் காதலின் கடைசி அத்தியாயமும் தான் படத்தின் களம்.


               படத்தின் தொடக்க காட்சியிலேயே படத்தின் முடிவை யூகித்து விடலாம் ஆனால் படத்தின் பலம் முடிவு ஏற்படுத்தும் அதிர்ச்சி அல்ல அதை நோக்கிய பயணம் ஏற்படுத்து வலியே. படத்தை இயக்கி இருப்பது உலகின் முக்கியமான இயக்குநர்களுள் ஒருவரான Micheal Hanake கதாப்பாத்திரங்கள் உணரும் வலியை பார்வையாளர்களுக்கு கணமான காட்சிகளின் மூலம் கட்த்தி இருக்கிறார். படம் பார்த்த பின் ஏற்படும் பாதிப்பு நீங்க நிச்சயம் கொஞ்ச காலமாவது பிடிக்கும். இந்த படம் குறித்து கொஞ்சம் விரிவாக தனி பதிவா எழுதிட விருப்பம். விருப்பத்தை சோம்பேரித்தனம் வென்று விடாமல் இருப்பின் கண்டிப்பாக எழுதுவேன்..


           இந்த படங்கள் தவிர உங்கள் அனைவருக்கும் நன்கு பரிட்சியமான இரண்டு மிக மிக முக்கியமான படங்களை பார்த்தேன் ஒன்று சத்யஜித் ரேவின் "பதேர் பாஞ்சலி"   மற்றொன்று தியாகராஜன் குமாரராஜாவின் "ஆரண்ய காண்டம்". இரண்டு படங்களை பற்றியும் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை இருந்தாலும் ஆரண்ய காண்டம் திரையிடப்பட்ட சூழல் குறித்து சொல்ல விரும்புகிறேன்.

           முதலில் புதன்கிழமை மதியம் 12 மணிக்கு ராணி சீதை ஹாலில் திரையிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 300 - 400 இருக்கைகள் கொண்ட ராணி சீதை ஹால் வாசலில் கிட்ட தட்ட 1000 பேர் நின்றனர் எப்படியோ அடித்து பிடித்து உட்கார்ந்தால் படச்சுருள் வராததால் திரையிடல் இல்லை என அறிவித்தனர். பின்னர் 8 மணிக்கு சின்ன அரங்கான Woodlands Symphony-ல் திரையிடப்படுவதாய் அறிவிக்கப்பட்டு பின்னர் கூட்டம் காரணமாக 1400 இருக்கைகள் கொண்ட Woodlands அரங்கில் திரையிடப்பட்டது. அரங்கு நிறைய கூட்டத்தோடு ஒவ்வொரு வசனத்திற்க்கும் ஒவ்வொரு தீம் இசைக்கும் கைதட்டலால் விருது கொடுத்து கொண்டிருந்தனர்.  தமிழ் சினிமா பற்றி தெரியாத யாரிடமாவது இந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்த படம் என்று சூடம் அணைத்து சொன்னால் கூட நம்பி இருக்க மாட்டார்கள். சில அலைச்சல்கள் சில ஏமாற்றங்கள் இருந்தாலும் மொத்தமாக ஒரு நல்ல அனுபவத்துடன் திரைப்பட விழா இனிதாய் நிறைவடைந்தது.

     
[ Read More ]

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த 8 படங்கள் - 1

             13-ம் தேதி தொடங்கி எட்டு நாட்களாக நடைப்பெற்று வந்த சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்தது. எல்லா நாட்களும் செல்ல முடியவில்லை என்றாலும் அப்படி இப்படி என 21 படங்கள் பார்த்தாகி விட்டது.  எதிர்ப்பார்த்திருந்த படங்களுள் பார்த்த வரையில் எல்லாம் திருப்தியாக இருந்தது எதிர்ப்பார்க்காத சில படங்கள் ஆச்சர்யப்படுத்தியது மற்ற படங்கள் மொக்கை போடும் பணியை சிரத்தையுடன் செய்து முடித்தன.

            எதிர்ப்பார்த்திருந்த படங்களுள் பாதுகாப்பு காரணங்களுக்காக  "Rust and Bone", ஆரண்ய காண்டத்திற்க்காக "Once Upon a Time in Anatolia", காரணம் எதுவும் சொல்லாமல் "Antiviral", "Not One Less" ஆகிய படங்கள் திரையிடப்படவில்லை. பார்த்த படங்களுள் சிறந்த படங்களாக நான் கருதும் எட்டு படங்களை பற்றிய சிறு குறிப்பு உங்களுக்காக :)


8. In Another Country:

           ஹோட்டலில் அம்மாவுடன் தங்கி இருக்கும் பெண் கொரியாவுக்கு வரும் மூன்று ஃப்ரஞ்ச் பெண்களை பற்றிய கதை ஒன்றை எழுத தொடங்குகிறார்.  மூன்று கதையிலும் அதே நடிகர்கள் அந்த பெண்ணை தவிர அனைவருக்கும் அதே கதாப்பாத்திரங்கள் சொல்லப்போனால் அந்த பெண்ணுக்கு கூட ஒரே பெயர் தான் ஆனால்  ஃப்ரஞ்ச் இயக்குநர், கணவனுக்கு தெரியாமல் காதலனை பார்க்க வரும் பெண், விவாகரத்தான மனைவி என அவருக்கு மட்டும் வெவ்வேறு கதாப்பாத்திரகள்.



      ஒரே மாதிரியான உரையாடல் அல்லது காட்சிகள் அதே கதாப்பாத்திரங்களுக்குக்கோ அல்லது வேறு கதாப்பாத்திரங்களுக்கோ இடையில் வருவது ரசிக்கும் படி இருக்கிறது. சில சமயங்களில் முதல் கதைகள் விட்டு சென்ற எதோ ஒரு மிச்சத்தை அடுத்த கதைகள் தொடர்வது அல்லது அதற்கு முன்னதாக வந்திருப்பது போல் சில பொருட்களை காட்டுவது சில சமயங்களில் இரண்டும் என சுவாரசியத்திற்க்கு குறைவில்லை. அந்த ஃப்ரஞ்ச் பெண்ணாக நடித்திருப்பவர் பிரபல ஃப்ரஞ்ச் நடிகை Isabelle Huppert பியானோ டீச்சர் ஞாபகம் இருக்குல்ல. படத்தை மொத்தமாக பார்க்கும் போது இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக எடுத்திருக்கலாமோ என்ற எண்ணம் வராமலில்லை என்றாலும் படம் முடிந்தும் படம் பற்றியே நம்மை யோசிக்க வைப்பது தான் அதன் வெற்றி.

7. Pieta:
 
         இருக்கைகள் யாவும் நிறைந்து, நடைப்பாதைகள் யாவும் நிறைந்து,  கதவை கூட சாத்த விடாமல் நின்று கொண்டிருக்கும் கூட்டதிற்க்காக வணிக அம்சங்கள் ஏதுமற்ற கலைப்படம் ஒன்று சென்னையில் திரையிடப்பட்டதென்றால் நம்புவீர்களா ? நம்பாவிட்டாலும் Pieta விற்கு அது தான் நடந்தது கிம்-கி-டுக்கிற்க்கு நம்ம ஊரில் இருக்கும் செல்வாக்கு அப்படி. கொடூரமான முறையில் கடன் வசூலிக்கும் ஒருவனின் வாழ்க்கையில் அம்மா என்று சொல்லி கொண்டு வரும் பெண்ணினால் வரும் மாற்றங்கள் தான் கதை.

       கடன் தாராதவர்களை கை அல்லது கால்களை உடைத்து முடமாக்கும் கொடூரமான காட்சிகளுடன் தொடங்குகிறது படம். நாயகனுடைய அம்மா வந்த பிறகு கொஞ்சம் நல்லவராக மாறி பாசத்துக்கு அடிமையாகும் காட்சிகள் எல்லாம் கிம்-கி-டுக்கை எந்த பிக்காலி பயலோ தமிழ் படம் நிறைய பாக்க வைச்சுட்டானோன்னு நினைக்க வைக்குது அவ்வளவு க்ளேஷேவான காட்சிகள். வந்த பெண் அம்மா தானான்னு கண்டுபிடிக்க வைக்கிற டெஸ்ட்லாம் கொடூரம். இதை கிம்மின் சிறந்த படமென்றெல்லாம் சொல்ல முடியாது என்றாலும் சில காட்சிகளில் மனசை தொடுகிறார் குறிப்பாய் அந்த கடைசி சில நிமிடங்கள். உங்களுக்கு அவரை பிடிக்குமெனில் கண்டிப்பாக இதுவும் பிடிக்கும் இல்லையெனில் மதில் மேல் பூனை தான்.

6. Everybody in Our Family:

                 ஒரு பட்டன் ஸைஸ் கதை வைத்துக்கொண்டு சும்மா பின்னி எடுத்திருக்கும் ரோமனிய திரைப்படம் தான் Everybody in our family. விவாகரத்தான தன் மனைவியிடம் வாழும் தன் ஐந்து வயது மகளை கடற்கரைக்கு கூட்டி செல்வதற்க்காக காலையில் சாதரணமாக  கிளம்பும் மாரியோஸ் எவ்வளவு மாற்றமடைகிறார் என்பது தான் கதை. அப்பாவிடம் கார் வாங்க செல்லும் போது வாக்குவாதம் அதிகமாகி சண்டை வருகிறது. முன்னாள் மனைவியின் வீட்டிற்க்கு அவர் இல்லாத போது செல்கிறார் அங்கே இருக்கும் முன்னாள் மனைவியின் இன்னாள் காதலர் குழந்தையை அழைத்து செல்ல அனுமதி மறுக்கிறார் அவரிடமும் சண்டை போடுகிறார். அப்போது அங்கே வரும் அவர் மனைவி போலிஸுக்கு ஃபோன் செய்ய பெரிதாகிறது சண்டை.  அவ்வளவு தான் படமே ஆனால் அட்டகாசமாய் இருக்கிறது.


                  நாகரிகத்தின் போர்வையில் நம்முள் மறைந்திருக்கும் மிருகம் வெளிவருதற்க்கு அதிக நேரம் பிடிக்காது என்பதை உணர்த்தும் படம். இதை படிச்சதும் எதோ ஹாரர் படம்ன்னு நினைச்சுடாதிங்க கண்ணுல தண்ணி வரும் அளவுக்கு சிரிக்க வைக்கிற காமெடி படம். ஆனா என்ன தான் சிரிச்சாலும் கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் இதுக்கு போய் சிரிச்சோமான்னு உங்களையே ஃபீல் பண்ண வைக்கும் ரகம் அதான் இந்த Dark Comedy-ன்னு சொல்லுவாங்களே அதான். பெரும்பாலான காட்சிகள் ஒரு வீட்டுக்குள்ளயே எடுத்து இருந்தாலும் ஒரு நாடகதன்மை இல்லாம படு இயல்பா படம் இருக்கு அதற்கு முக்கிய காரணம் கேமரா நாயகன் கூடவே ட்ராவல் ஆகுது. அடுத்த காரணம் நடிப்பு முக்கியமாக ஹீரோ மற்றும் அந்த குழந்தை ரொம்ப க்ளேஷேவா சொல்லனும்ன்னா அவங்க முன்னால கேமரா இருக்கிறா மாதியே இல்ல அதுலையும் அந்த குழந்தை சான்ஸே இல்ல. நண்பர்கள் யாரும் தவறவே விடக்கூடாத படம்.
                


5.Kuma:

       படத்தின் தொடக்கத்தில் துருக்கிய கிராமம் ஒன்றில் ஆயிஷாவுக்கும் ஹசனுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்க்கு செல்வதற்க்காக வியன்னா நோக்கி புறப்படுகிறாள். வியன்னா வந்ததும் நடந்தது ஒரு பொம்மை திருமணம் என்பது நமக்கு தெரிகிறது உண்மையில் அயிஷாவுக்கு ஹசனுடன் நடந்த திருமணம் ஊருக்காக செய்யப்பட்டது ஆனால் அவள் வாழப்போவது ஹசனின் தந்தை முஸ்தஃபாவுக்கும் இரண்டாம் மனைவியாக இப்படி ஒரு அதிர்ச்சியான தொடக்கத்துடன் துவங்குகிறது படம்.


         ஒரு கட்டத்தில் முஸ்தஃபா இரந்து விட குடும்ப பாரம் ஆயிஷா மேல் விழுகிறது. குடும்பத்தை தாங்கும் காதலுக்கு ஏங்கும் இளம்தாய் ஆயிஷாவின் கதை தான் படம். Kuma என்றால் இரண்டாம் மனைவி என்று அர்த்தமாம். மெதுவாக நகரும் குழப்பமான திரைக்கதையில் சின்ன சின்ன ட்விஸ்ட்கள், சில சுவாரசியங்கள், கொஞ்சம் அழகியல் என நம்மை சோர்வடைய வைக்காமல் கடைசி வரை அழைத்து செல்கின்றனர். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் அந்த ஆயிஷாவா நடிச்சு இருக்கிற பொண்ணு செம அழகு :). இந்த படத்தை குடும்ப அமைப்புனால் பெண்களுக்கு எற்படும் பிரச்சனைகளை பற்றியதாகவும் எடுத்து கொள்ளலாம் அல்லது விட்டு கொடுத்து வாழ்ந்த குடும்பத்தின் கதையாகவும் கொள்ளலாம் எப்படி எடுத்து கொண்டாலும் பரவாயில்லை தவறாமல் படத்தை பாருங்கள்.

                                                                                                                       (தொடரும்..,)




[ Read More ]

சென்னை சர்வதேச திரைப்பட விழா - ஒரு முன்னோட்டம்

                    வருகின்ற 13-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை எட்டு நாட்கள் சென்னையில் 10-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது அனைவருக்கும் தெரிந்து இருக்கும். 57 நாடுகளை சேர்ந்த 175 படங்கள் திரையிடப்பட இருக்கிறது என்றாலும் எவ்வளவு முயன்றாலும் இதில் பாதி படத்தை கூட பார்க்கமுடியாது அதிகபட்சம் ஒரு நாளைக்கு 5 படம் வீதமாக 40 படங்கள் பார்க்கலாம் அதுவும் எட்டு நாட்களும் விடுப்பு எடுத்தால் மட்டுமே சாத்தியம்.

Ciff 2012 Poster

                சென்ற வருடம் தான் முதல்முறையாக பெரும் எதிர்ப்பார்ப்புடன் முதல்முறையாக திரைப்பட விழாவுக்கு சென்றேன் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியானதா என்றால் இல்லை என்பதே பதிலாகும். நான் பார்த்த படங்களுள் பாதி படங்கள் வெகு சுமாரான அல்லது மொக்கை படங்கள். வூட்லண்ட்ஸ் தியேட்டரில் தான் பெரும்பாலான படங்களை பார்த்தேன் அங்கே பகலில் படம் பார்க்கும் போது நிறைய இடைஞ்சல்கள் இருந்தது. சராசரியாக 5 நிமிடத்திற்க்கு ஒரு முறை கதவு திறக்கப்பட்டு கொண்டே இருந்தது யாராவது வந்து கொண்டோ போய் கொண்டோ இருந்தார்கள் மாலை மற்றும் இரவு காட்சிகளில் இந்த பிரச்சனைகள் அவ்வளவாக இல்லை. சத்யம்,ஐநாக்ஸ் போன்ற திரையரங்குகளில் இந்த பிரச்சனைகள் இல்லை என்றாலும் அங்கு சீட் கிடைப்பது குதிரை கொம்பாகவே இருக்கும். இவ்வளவு இருந்தாலும் ரொம்ப பிடித்த திரைப்படமொன்றை பெரிய திரையில் காணும் போது கிடைக்கிற அனுபவத்திற்க்காவே கலந்து கொள்ள வேண்டும். சென்ற வருடம் A Separation திரைப்படத்தை விழாவில் பார்த்த போது ஏற்பட்ட உணர்வுகள் இன்னமும் நினைவிருக்கிறது அப்படி ஒரு அனுபவத்தை எதிர்ப்பார்த்தே இவ்வருடமும் செல்கிறேன். சென்ற வருடத்தை விட இந்த வருட திரைப்பட பட்டியலில் பெயர் தெரிந்த பார்க்க விரும்பிய படங்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது அந்த படங்களுள் முக்கியமான படங்கள் சிலவற்றை பற்றிய சின்ன அறிமுகம்..,

Amour :

          தற்கால இயக்குநர்களுள் மிக முக்கியமானவரான Micheal Hanke-ன் சமீபத்திய திரைப்படம். உலகின் மிக பிரபலமான திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அங்கு சிறந்த திரைப்படத்திற்க்கான தங்கப்பனை விருதையும் பெற்று இருக்கிறது. இதுவே இந்த படத்தை பெரும்பாலன ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் படமாக மாற்றி இருக்கிறது.  Micheal Hanke-ன் முந்தைய படமான The White Ribbon படமும் தங்கப்பனை விருது பெற்றது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.

Pieta :

           தமிழ் இணைய உலகில் மிக பிரபலான இயக்குநரான கிந்கி-டுக்கின் சமீபத்திய திரைப்படம். உலகம் முழுதும் நிறைய ரசிகர்கள் இருந்தாலும் பெரிய அளவில் அங்கிகாரம் எதுவும் கிடைக்காததால் பெரும்பாலும் சர்ச்சைகுரிய இயக்குநராய் மட்டுமே அடையாளப் படுத்தபட்டார். இப்போது முக்கியமான திரைப்பட விழாவான வெனிஸில் சிறந்த படத்துக்கான விருதை பெற்றதின் மூலம் மிக பெரிய அங்கிகாரத்தை பெற்றுள்ளார். இந்த விழாவில் நிறைய ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பதர்க்கான காரணம் இந்த விருதல்ல அவரின் பெயர் மட்டுமே.

CIFF 2012 Films


Not One Less :
               
           சீனாவின் அழகியலையும் கலாச்சார பின்னணியையும் கலந்து அற்புதமான படங்களை எடுக்கும் Zhang Yimou  1999-ல் எடுத்த படம். சீன அரசு 90-களில் கல்வியை கட்டாயமாகி மிக தீவிரமாக அமல் படுத்தியது ஆனாலும் கிராமப்புற பள்ளிகள் ஒற்றை ஆசிரியரை வைத்து கொண்டு மாண்வர்களின் எண்ணிக்கை குறையாமல் இருப்பது பெரும் சவாலாக இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் ஒரு மாதக்காலம் பயிற்சி ஆசியராய் வரும் 13 வயது பெண்ணின் கதை தான் படம். பார்ப்பவர்களின் ஆன்மாவை தொடும் அற்புதமான படம். இந்த படத்தை பார்க்காத நண்பர்கள் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய படம்.

Holy Motors :

           ஒரு பத்து நாளைக்கு முன்பு வரை இப்படி ஒரு படம் வந்து இருப்பதே தெரியாது. பிரபலமான ஃப்ரஞ்ச் சினிமா பத்திரிக்கையான Cahiers Du Cinema இந்த படத்தை இந்த வருடத்தின் சிறந்த படமாக தேர்ந்தெடுத்ததும் ஒரு மாதிரி ஆர்வம் தொற்றிக்கொண்டது. த்ருபோ, கோதார் போன்ற ஃப்ரஞ்ச் புதிய அலையின் ஆளுமைகள் எல்லாம் இந்த பத்திரிக்கையில் தான் ஆரம்ப காலத்தில் விமர்சனம் எழுதி கொண்டிருந்தார்கள். படத்தின் டிரைலரை  படித்ததும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று முடிவு பண்ணிட்டேன். திரைப்பட விழாவில் தவறாமல் பாக்கனும் மிஸ் பண்ணுனா டவுன்லோடு தான் :).

Pather Panchali :

             இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் பங்கெடுக்கும் விதமாக இந்த விழாவிலும் சில முக்கியமான இந்திய படங்கள் திரையிடப்பட இருக்கிறது அதிலும் முக்கியமாக இந்தியாவின் ஆக சிறந்த படங்களுள் ஒன்றாக கருதப்படும் பதேர் பாஞ்சலி திரையிட இருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும். ஏற்கனவே பார்த்து இருந்தாலும் திரையரங்கில் பார்க்க விருப்பமாக இருக்கிறது அதுவும் விடுமுறையன்று திரையிட இருப்பதால் கண்டிப்பாக பார்த்து விடுவேன் என்றே நினைக்கிறேன். மலையாள சினிமாவின் மிகப்பெரிய ஆளுமையான ஜி.அரவிந்தனின் “வசுந்தரா”-வும் திரையிட இருக்கிறார்கள்.
       
Like Someone in Love:

             பிரபலமான ஈரானிய இயக்குநர்  Abbas Kiarostami இயக்கி இருக்கும் ஜப்பானிய மொழி திரைப்படம். பெரிய அளவில் நல்ல விமர்சனங்களையோ பெரிய விருதுகளையோ வாங்கவில்லை என்றாலும்  Abbas Kiarostami-ன் பெயருக்காகவே பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

              இவற்றுடன்  Melancholia ( இயக்கம் : Lars von Trier), Cosmopolis ( இயக்கம் :David Cronenberg ), Zorba the Greek, Departures  ( 2009 சிறந்த வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கர் விருது), Antiviral, Beasts of the Southern Wild , Once Upon a Time in Anatolia  ஆகிய படங்களையும் தவறவிடாமல் பார்த்து விட விருப்பம். நண்பர்களுக்கும் தங்கள் அட்டவணையில் இந்த படங்களை சேர்த்து கொள்ளுமாறு பரிந்துரை செய்கிறேன்.  இந்த பட்டியலில் உள்ள பெரும்பாலான படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள முதல் நான்கு நாட்களுக்கான அட்டவணையில் இடம் பெறவில்லை ஆகையால் முக்கியமான படங்கள் யாவும் கடைசி நான்கு நாட்களில் தான் திரையிடுவார்கள்  என நினைக்கிறேன் அதனால் இரண்டு அல்லது மூன்று நாள் மட்டுமே விடுப்பு எடுக்க முடிந்தவர்கள்  அடுத்த வாரத்தில் விடுப்பு எடுத்தால் நிறைய நல்ல படங்கள் பார்க்கலாம் :).

பின் இணைப்புகள்:

  •  விழாவில் திரையிட இருக்கும் மொத்த படங்களின் பட்டியலுக்கு இங்கே க்ளிக்கவும்.

  • முதல் நான்கு நாட்களுக்கான பட்டியலை இங்கே க்ளிக்கி பார்க்கலாம். 

  •  பெங்களூர் உலக திரைப்பட விழாவில் திரையிட இருக்கும் படங்களின் பட்டியலை காண நேர்ந்தது. சென்னை விழாவை விட ஏகப்பட்ட நல்ல படங்கள், பிரபலமான படங்கள் என்று அசத்துகின்றனர். இங்கே க்ளிக்கி அந்த பட்டியலை பார்த்து கொஞ்சமாய் பொறாமைப்பட்டு கொள்ளுங்கள்.


[ Read More ]

Moonrise Kingdom [English ~ 2012] - அற்புதத்தின் சாளரம்


          குழந்தைகள் மற்றும் குழந்தை பருவம் குறித்தான திரைப்படங்கள் பெரும்பாலும் அவர்கள் குறித்தான  பெரியவர்களின் பகற்கனவுகளாக தான் இருக்கிறது. குழந்தைகளை அதிக பிரசங்கிகளாக, காதலுக்கு புத்தி சொல்பவர்களாக அல்லது தூது செல்பவர்களாக, தேசிய கீதத்திற்க்கு எழுந்து நிற்ப்பவர்களாக, எதிர்ப்பாலினம் மேலான ஈர்ப்போ சந்தேகமோ இல்லாதவர்களாக என நமக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ நாம் என்னவெல்லாம் எதிர்ப்பார்க்கிறோமோ அதெல்லாம் எடுத்து குழந்தைகள் படம் என்கிறோம். குழந்தைகள் இதை தான் செய்வார்கள் என சௌகரியமாக முடிவெடுத்து கொள்கிறோம் ஆனால் அவர்கள் அப்படி தான் இருக்கிறார்களா என்ன அதுமட்டுமில்லாமல் குழந்தைதனம் என்று நீங்கள் நினைக்கும் அவர்களுக்கு சீரியஸான விஷயம் என்பதயும் யாரும் நினைப்பதில்லை. குழந்தைகளுக்கென ஒரு உலகம் இருக்கிறது இத்தனை ஆண்டு ஓட்டத்தில் நாம் மறந்துவிட்ட உலகம் அவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ள கூடிய அவர்களால் மட்டுமே சிருஷ்டிக்க கூடிய அற்புத உலகம். எந்த கோட்பாடுகளும் தர்க்கங்களும் இல்லாமல்  அவர்கள் சொல்லும் கதைகள் மட்டுமே அவ்வுலகங்களின் சாளரங்களை நமக்கு திறக்கின்றன. அத்தகைய கதைகளை அந்த குழந்தைகளே சொல்வது போல் படமெடுப்பது சாத்தியமென்று இதற்க்கு முன்னால் நினைத்ததேயில்லை இந்த படத்தை பார்க்கும் வரை. பிரபல இயக்குநர் Wes Anderson இயக்கத்தில் வெளியான சமீபத்திய படமான "Moonrise Kingdom" குறித்து தான் சொல்லிகொண்டிருக்கிறேன்.

           1965-ம் ஆண்டு நியூ இங்லாந்தின் ஒரு பகுதியாக சொல்லப்படும் New Penzance தீவு ஒரு சூறாவளிக்காக காத்திருக்கிறது. 12 வயதான சாம் அவன் இருக்கும் சாரணர் இயக்கத்தில் இருந்து "ராஜினாமா" கடிதம் எழுதிவைத்து விட்டு தப்பித்து  போகிறான். அதே நேரத்தில் அந்த தீவில் வாழும் வழக்கறிஞரின் மகளான சூசியும் மிகப்பெரிய புத்தக பெட்டியுடன் தப்பித்து போகிறாள். போலிஸ் விசாரணையில் சாம் ஒரு அனாதை என்ற விஷயம் மறைக்கப்பட்டு சாரணர் இயக்கத்தில் சேர்த்திருப்பது தெரிய வருகிறது. சாமும் சூசியும் சந்தித்து கொள்கின்றனர் அவர்கள் இருவருக்கும் இருக்கும் நட்பும் இருவரும் சேர்ந்தே திட்டம் போட்டு ஓடி வந்திருப்பதும் நமக்கு ஃப்ளாஷ்பேக்கில் தெரிகிறது. இருவரும் மூன்ரைஸ் கிங்டம் என்று அவர்கள் பெயர் வைத்த மலைகுகை ஒன்றில் சேர்ந்து வாழ முடிவெடுத்து காட்டுக்குள் பயணப்படுகின்றனர். போலீஸ் கேப்டன் ஷார்ப் (ப்ரூஸ் வில்லிஸ்) மற்றும் ஸ்கவுட் மாஸ்டர் (எட்வர்ட் நார்டன்) இருவரும் அளுக்கொரு புறம் தேட தொடங்குகின்றனர். அதன் பின்னால் நடக்கும் கூத்துக்களை எல்லாம் நீங்களே பார்த்து என்ஸாய் பண்ணுங்க..,

        படத்தின கதையை படிக்கும் போது பால்யத்தின்  வாயிலில் இருக்கும் மாணவர்களின் அகம் சார்ந்த பிரச்சனைகளை கூறும் படு சீரியஸான படமென்று நினைத்தால் நீங்க நவம்பர் ஃபூல் தான் :). படம் முழுவதும் குழந்தை தனம் நிரம்பி இருக்கிறது வெஸ் ஆண்டர்சன்னின் மேல் 12 வயது ஆவி பிடித்து கொண்டதோ என சந்தேகப்படும் அளவுக்கு படத்தின் எந்த முனையிலும் பெரிய மனுஷத்தனமே இல்லை. 12 வயது குழந்தைகள் கத்தியால் குத்தி கொள்வதையும் , உதட்டில் முத்தமிட்டு கொள்வதையும், திருமணம் செய்து கொள்வதையும் கூட மெல்லிய புன்னகையோடு ரசிக்க முடியுமளவுக்கு எடுத்திருக்கிறார். அந்த காட்சிகள் மட்டுமல்ல படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஒரு புன்னகை இல்லாமல் கடக்க முடியாது.

 
     படம் முழுவதும் மஞ்சள் நிறம் ஒரு கதாப்பாத்திரம் போலவே வருகிறது. அதுவும் அவர்கள் ஓடிப்போகும் காடு ஏதோ ஒரு கனவு பிரதேசம் போலவே இருக்கிறது. பிடித்த பெண்ணுடன் பிடித்த நிறங்கொண்ட பிரதேசத்தில் தொந்தரவுகளற்ற நீண்டதொரு பயணம் யாருக்கு தான் இப்படி ஒரு கனவு இல்லாமல் இருக்கும்.


      எட்வர்ட் நார்டன் , ப்ரூஸ் வில்லிஸ் போன்ற நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கு அத்தனை முக்கியத்துவம் இல்லை. அவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களின் உறவுகள் குறித்து அத்தனை ஆழமாக போகாமல் மேலோட்டமாகவே சொல்லி இருக்கிறார்கள் அதுவும் கூட திட்டமிட்டு செய்யப்பட்டதாகவே தோன்றுகிறது. நாம் குழந்தைகளாக இருந்த போது நாம் பெரியவர்களை பற்றியோ அவர்களின் உறவு சிக்கல்களை பற்றியோ அத்தனை யோசித்தோமா என்ன ??.

        தொண்ணூறுகளின் இறுதியில் அறிமுகமான Christopher Nolan, Darren Aronofsky, Wes Anderson, Guy Ritche  போன்றவர்கள்  தொடர்ச்சியான சிறந்த படங்களின் மூலம் ஹாலிவூட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தனர். மூளையை திருகும் காட்சிகள், ரத்தம் தெறிக்கும் வன்முறை, நெஞ்சை உலுக்கும் காட்சிகள், கெட்ட வார்த்தைகள் மிகுந்த அட்டகாசமான வசனங்கள் என அடுத்தவர்கள் சென்று கொண்டிருக்க Wes Anderson ஒரு தனித்துவமான பாதையை தேர்ந்தெடுத்தார். ஆண்டர்சென்னின் படங்கள் ஹாலிவூட் அதிகம் விரும்பாத மனிதர்களின் (sometimes மிருகங்கள்)  அகத்தை மையமாய் கொண்டே எடுக்கப்படுகிறது.மிக பெரிய வசூல் சாதனைகளையோ பெரிய விருதுகளையோ வென்றதில்லை என்றாலும் விமர்சகர்களின் செல்லக் குழந்தையாகவும் சிறிய அளவில் என்றாலும் பலமான Fan Base-ம் இருக்கிறது அதற்க்கான காரணம் அவர் எந்த காலத்திலும் சமரசம் செய்து கொள்ளாத அந்த தனித்துவம் மட்டுமே.

    
        "Wes Anderson flirts with Surrealism" அப்படின்னு ஒரு தளத்தின் விமர்சனத்தில் எழுதி இருந்தார்கள். நான் இவ்வளவு நேரம் டைப் பண்ணிட்டு இருக்கிறத ஒரே லைன்ல அசால்ட்ட சொல்லிட்டு போய்ட்டாங்க :(. படம் ஒரு முழுமையான எதார்த்த தளத்திலும் இல்லாமல் சர்ரியலிஸ தன்மையிலும் இல்லாமலும் இரண்டுக்கும் இடையிலான நூலிழையில் மொத்த படத்தையும் எடுத்து சென்று இருக்கிறார். ஆண்டர்சன் தன்னுடைய முந்தைய படங்களில் கூட இத்தகயை தன்மைகளை பயன்படுத்தி இருந்தாலும் இதில் அசால்ட்டாக அதன் உச்சத்தை தொட்டிருக்கிறார். நிச்சயமாக இந்த வருடத்தின் மிக சிறந்த படங்களுள் ஒன்றாக சொல்லலாம்.

       குழந்தைகளை விரும்புவர்களுக்கு, பயணங்களை நேசிப்பவர்களுக்கு, மஞ்சளை காதலிப்பவர்களுக்கு மற்றும் இந்த வரிசையில் வராதவர்களும் தவறாமல் பார்க்க வேண்டிய படம்.

எக்ஸ்ட்ரா பிட்டு :
       12 வயது பையனுக்கும் நீண்ட காலமாக 12 வயதாகும் Vampire பொண்ணுக்கும் இடையேயான உறவை சித்தரிக்கும் ஸ்வீடன் நாட்டு படமான "Let the Right One In" திரைப்படத்தையும் அப்ப்டியே சேர்த்து பார்த்து விடுங்கள். ரத்தமும், காதலும், குழந்தைத்தனமும் கலந்து எடுக்கப்பட்ட அற்புதமான படம். Twilight Series போன்ற மொக்கையான Vampire படங்களை நினைத்து கொண்டு ஒதுக்கிடாதீங்க இது செமையா இருக்கும்.









[ Read More ]

Dirty Harry [English ~ 1971] - இது தாண்டா போலீஸ் !!!

     
         எழுபதுகள்ல வடக்கு கலிஃபோர்னியாவுல ஒருத்தன் வரிசையா கொலை பண்ணிட்டு இருந்தானாம். கொலை பண்ணதோட மட்டும் இல்லாம முடிஞ்சா புடிச்சு பாருங்கிற கணக்கா போலீசுக்கு விலாவாரியா லெட்டர் அனுப்பிட்டு இருந்தான். போலீசும் கண்ணுல வெளக்கெண்ணை, நல்லெண்ணை இன்னப்பிற எண்ணைகளை ஊத்தி தேடியும் அவனுக்கு "Zodiac Killer"-ன்னு பேர் மட்டும் தான் வைக்க முடிஞ்சது கடைசி வரைக்கும் பிடிக்கவே முடியல. இப்போ வரைக்கும் அவன் யாருன்னு கண்டுபிடிக்காம கேஸ் ஓபனாவே இருக்கு. இந்த கொலைகளையும் போலிஸ் விசாரணையையும் பத்தி Zodiac அப்டின்னு ஒரு அருமையான படத்தை David Fincher எடுத்து இருக்கார் நிறைய பேர் பார்த்து இருப்பிங்க பாக்காதவுங்க கண்டிப்பா பாத்துடுங்க . நாம எப்படி பிரேமானந்தா,  டாக்டர் பிரகாஷ், நித்தியானந்தா, சஹானா பத்தியெல்லாம் பரபரப்பா பேசுறோமோ அது மாதிரியே அமெரிக்க மக்களும் இந்த கொலைகள் பத்தி பரபரப்பா பேசிட்டு இருந்து இருக்காங்க. இந்த பரபரப்பை பணமாக்க விரும்பிய வார்னர் பிதர்ஸ் இது மாதிரியே ஒரு தொடர் கொலைகளை பற்றி கிளிண்ட் ஈஸ்ட்வூட்டை போலீஸ் ஹீரோவா வைச்சு ஒரு படமெடுத்தாங்க. படம் பயங்கர ஹிட் ஆனதோட இல்லாம ஈஸ்ட்வூட்டோட வாழ்க்கையிலையே முக்கியமான கதாப்பாத்திரம் ஆகிட்டு அந்த படத்தின் பெயர் தான் "Dirty Harry".

         நம்ம ஊர்ல இந்த மாதிரி பரபரப்பான விஷயங்களை அடிப்படையா வைச்சு புனையப்பட்ட கதைகளை கொண்ட படங்களை இயக்குநர் ஆர்.கே.செல்வமணி எடுத்து இருக்கார். அட்டோ சங்கரின் கதையை ஒட்டி எடுக்கப்பட்ட புலன் விசாரணை, வீரப்பன் பத்தி வந்த கேப்டன் பிரபாகரன், ராஜீவ் கொலையை பத்தி எடுக்கப்பட்டு15 வருஷம் கழிச்சு வந்த   குற்றப்பத்திரிக்கை அவ்வளவு தான் நியாபகம் வருது வேற எதாவது இருந்தா சொல்லுஙக..,




       எல்லாரும் சுகமா இருக்கிற ஒரு சுபதினத்துல நிச்சல் குளத்துல குளிக்கிற ஒரு பொண்ணுக்கு ஒரு புல்லட்டையும் மேயருக்கு ஒரு லெட்டரையும் ஒருத்தன் அனுப்புறான் ஒரு சைக்கோ கொலைக்காரன். அந்த லெட்டரில் தனக்கு ஒரு லட்சம் டாலர் கொடுக்கணும் இல்லைன்னா தினமும் ஒருத்தரை கொன்னுடுவேன்னு மிரட்டுறான். இந்த கேஸ் பாக்குற கிளிண்ட்  முதல்ல அவனை பிடிக்க சில பல பொறிகளை வைக்குறார் ஆனா அதுலலாம் சிக்காம தப்பிக்கிறதோட அவன் சொன்ன மாதிரியே தினமும் ஒருத்தர்ன்னு ரெண்டு பேர கொலை பண்ணிடுறான் அதுல ஒருததர் கறுப்பின சிறுவன் இன்னொருத்தர் பாதிரியார். நிலைமை சீரியஸாவதை உணர்ந்த மேயர் பணம் கொடுக்குறதா முடிவு பண்ணி அந்த பணத்தை  நம்ம கிளிண்ட் கைலையே கொடுத்து அனுப்பறார்.

     பணம் கொடுக்க போன நம்ம கிளிண்ட பணத்த கொடுத்தோமா பக்கோடா சாப்பிட்டோமான்னு இல்லாம அவனை பிடிக்க ட்ரை பண்றார் ஆனா அவன் அப்போ கால்ல ஒரு கத்திய வாங்குனதோட தப்பிச்சிடுறான். மறுபடியும் தேடி அவனை பிடிச்சிட்டு வரும் ஈஸ்ட்வூட் சும்மா அடி பின்னிடுறார். ஆனாலும் சாட்சி இல்லைன்னு அவன் எஸ்கேப் ஆகிடுறான். அதுக்கப்புறம் அவனை மறுபடியும் பிடிச்சாரா இல்லையா என்பதையெல்லாம் டவுன்டலோட் பண்ணி பாத்துக்கோங்க..,
      
      எங்கு தப்பு நடந்தாலும் சட்டத்தின் துணை தேடாமல் மனசாட்சியின் படி தட்டி கேட்க்கும் அல்லது தண்டிக்கும் மூக்கு மேல் கோபம் வருகின்ற Rough and Tough போலீஸ் கதாப்பாத்திரம் தான் Harry Callahan என்கிற Dirty Harry.  இது ஒன்று நமக்கு ரொம்ப அந்நியமான கதாப்பாத்திரம் கிடையாது சாமி, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ஏகப்பட்ட படங்களில் விஜயகாந்த் மற்றும் அர்ஜுன் என தமிழ் மட்டுமில்லாம இது தாண்டா போலீஸ், அக்னி I.P.S, வைஜெயந்தி  I.P.S என்று தெலுங்கு வாலாக்கலாலும் நீண்ட நாளாக காட்டி வருவது தான். எனினும் இந்த மாதிரி கதாப்பாத்திரங்களுக்கெல்லாம் Dirty Harry தான் தொடக்கம் என்று சொல்கிறார்கள். இந்த கதாப்பாத்திரத்தில் வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியாதவாறு அட்டகாசமாய் இருக்கிறார் ஈஸ்ட்வூட் அப்படி ஒரு கம்பீரம், மேன்லினெஸ். இந்த படத்தில் அந்த ட்ரெட்மார்க் .44 Magnum துப்பாக்கியோடு அவர் இருக்கும் ஸ்டில் ரொம்ப பிரபலம் நிறைய பேர் டிசர்ட்டில் அந்த படத்தோட சுத்துவதை பார்த்து இருக்கலாம்.



       கிளிண்ட் ஈஸ்ட்வுட் கொஞ்சம் முரட்டு தனமான இளைஞன் (இப்பவெல்லாம் வயசான இளைஞன்) அல்லது ரொம்ப முரட்டுதனமான இளைஞன் என பல வித்தியாசமான வேடங்களில் நடித்தவர் :). என்ன தான் ஒரே மாதிரியான கதாப்பாத்திரமாக இருந்தாலும் அவரோட ஸ்கிரீன் பிரஸென்ஸ அடிச்சுக்கவே முடியாது கிட்டதட்ட நம்ம ஊரு ரஜினி மாதிரி மாஸான ஆளு.நாயகனாக தன் காலம் முடிய தொடங்கியதை உணர்ந்து நடிப்பதை குறைத்து இயக்குநராக மாறி சில ஆஸ்கர்கள் வாங்கும் அளவுக்கு அதிலும் நிருப்பித்தவர் இதுக்காகவே ரொம்ப பிடிக்கும்.

           எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் இவர் பஞ்ச் டயலாக் பேசும் ஸ்டைல் "My mistake. Four coffins... " என்று 34 வயதில் (A Fistful of Dollars - 1964) சொல்லும் போதும் சரி  "I'll blow a hole in your face then go inside and sleep like a baby."  என்று 78 வயதில் (Gran Torino - 2008) பஞ்சடிக்கும் போதும் போதும் சரி கொஞ்சம் கூட “கெத்து” குறையாமல் இருக்கும். இந்த படத்திலும் இவர் சொல்லும் வசனங்கள் எல்லாம் இன்னமும் செம பிரபலம்..,

 I know what you're thinking. "Did he fire six shots or only five?" Well, to tell you the truth, in all this excitement I kind of lost track myself. But being as this is a .44 Magnum, the most powerful handgun in the world, and would blow your head clean off, you've got to ask yourself one question: Do I feel lucky? Well, do ya, punk?

இது படத்தின் மிக பிரபலமான வசனம். இதை படிக்கும் போது அந்த ஃபீலிங் வருமான்னு தெரில ஆனா படம் பாக்கும் போது செமையா இருக்கும். இது மட்டுமில்லாம மத்த வசனங்களும் புல்லட் ஷார்ப் தான்..

Harry Callahan: Well, when an adult male is chasing a female with intent to commit rape, I shoot the bastard. That's my policy. 
The Mayor: Intent? How did you establish that? 
Harry Callahan: When a naked man is chasing a woman through an alley with a butcher's knife and a hard-on, I figure he isn't out collecting for the Red Cross! 
----------------------------
Harry Callahan: And who says that? 
District Attorney Rothko: It's the law. 
Harry Callahan: Well, then the law is crazy. 

        இந்த படத்தின் தொழில்நுட்ப குழுவினர் குறித்தோ மற்ற விஷயங்கள் குறித்தோ எழுத எதுவும் தோன்றவில்லை. படம் பார்த்து ஒரு வாரமாக போகுது ஆனா எப்போ இந்த படத்த பத்தி நினைச்சாலும் மூணு விஷயம் தான் நியாபகம் வருது Clint Eastwood, Harry Callahan மற்றும் Dirty Harry.

      உங்களுக்கு எண்பதுகளில் வந்த ரஜினி படம் பிடிக்குமா அதுவும் ஹீரோயின் பாட்டெல்லாம் இல்லாமல் ஆக்சன் மட்டும் உள்ள ரஜினி படம் என்றால் ??. ஆம் என்றால் இது நீங்கள் கண்டிப்பாக தவறவிடக்கூடாத படம்.

Dirty Harry - A .44 Magnum Opus ..,

[ Read More ]

சோளகர் தொட்டி [ச.பாலமுருகன்] ~ அதிகாரத்தின் பெருங்காதல்கள்

           சந்தன கடத்தல் வீரப்பனை யாரும் இன்னும் மறந்து இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். வீரப்பன் மட்டுமல்ல அவருடைய பெரிய மீசையையும் அவரை பிடிப்பதற்க்காக தமிழக கர்நாடக போலீஸார்  மேற்கொண்ட மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ட  தேடல் வேட்டையும் இந்திய அளவில் ரொம்ப பிரபலம். வீரப்பன் கொல்லப்பட்ட செய்தியை அரை பக்க செய்தியாக சீன பத்திரிக்கையில் வந்ததாக தினதந்தியில் படித்தது நியாபகம் இருக்கிறது. ஆனால் அந்த தேடுதல் வேட்டையின் போது அந்த காடுகளில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த மக்களின் மீது  கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் மனித உரிமை மீறல்களும் ஏனோ அத்தனை பிரபலம் இல்லை. நமது அமைதிப்படையை போல் அண்டை நாட்டுக்கு போகும் வசதி இல்லாததால் சொந்த மண்ணிலேயே அதிரடிப்படையினரால் நிகழ்த்தப்பட்ட அத்தகைய கொடுமைகளுக்கு இலக்கிய சாட்சியாய் நிற்கிறது "சோளகர் தொட்டி".

           சோளகர் தொட்டி எனப்படும் பழங்குடி இன கிராமத்தின் கதை தான் இரண்டு பாகங்களாக பிரித்து இந்த புத்தகத்தில் சொல்லப்படுகிறது. முதல் பாகத்தில்  அவர்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள், கடவுள்கள், விழாக்கள் என அவர்களின் கலாச்சாரம் பெருங்கவனத்துடன் சொல்லப்படுகிறது. இரண்டாம் பாகத்தில் வீரப்பன் தேடுதல் வேட்டையால் ஏற்படும் பதற்றம், அவர்களின் அரம்பக்கட்ட விசாரணை ஏற்படுத்தும் பிரச்சனைகள், அதன் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் வன்முறை வெறியாட்டங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்துகிறது.

      கொத்தல்லி, மாதி, பேதன், ஜோகம்மாள், கெம்பப்பாள், ஈரம்மா, புட்டன், மண்ணன், சிக்குமாதா,  கோல்காரன், ஜணையன், சித்தி என பரிச்சியமில்லாத பெயர் கொண்டவர்களை பரிச்சியமாகுவதில் முதல் பாகம் வெற்றி பெறுகிறது. சோளகர் தொட்டியின் இயல்பான காலத்தை தான் முதல் பாகத்தில் சொல்லி இருக்கிறார்கள் என்றாலும் அதுவும் அத்தனை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. குடியானவர்களால் சுரண்டப்படுகின்றனர் , பரம்பரையாக இருந்த நிலத்தில் இருந்து அநியாயமாய் துரத்தப்படுகின்றனர். கொல்ல வந்த கரடியை கொன்று தின்றதற்க்காக சிக்குமாதா நிர்வாணமாய் வைத்து அடிக்கப்படுகிறான் மற்றும் அவனை விடுவிப்பதற்க்காக தொட்டியே கடனாளி ஆகிறது. இத்தனை சுரண்டல்களும் இன்னல்களும் இருந்தாலும் வாழ்க்கையை ஆடல், பாடல், கஞ்சா என கொண்டாட்டத்துடனே வாழ்கின்றனர்.

            இரண்டாம் பாகத்தின் ஆரம்பம் முதலே வீரப்பன் வேட்டையின் பெயரால் நிகழ்த்தப்பட்ட வன்முறை வெறியாட்டம் தொடங்கி விடுகிறது. முதலில் மன ரீதியாக டார்ச்சர் கொடுக்க தொடங்குகின்றனர். காவலர்களை பொறுத்த வரை வனத்தில் இருக்கும் எல்லா ஆண்களும் வீரப்பனுக்கு உதவுபவர்கள், எல்லா பெண்களும் வீரப்பன் கூட படுத்தவர்கள், எல்லா குழந்தைகளும் வீரப்பனுக்கு பிறந்தவர்கள். சித்ரவதைகளின் போது வலிக்குது என்று சொல்பவர்களிடம் எல்லாம்  "வீரப்பன் கூட படுக்கும் போது மட்டும் சுகமா இருந்துச்சோ " என்ற கேள்வி மறக்காமல் கேட்கப்படுகிறது. காவல்துறையினர் தங்கி இருக்கும் முகாம்களின் சித்ரவதை படுத்துவதற்க்கென்றே "வொர்க் ஷாப்" ஒன்று இருக்கிறது அதில் சாதாரண சிதரவதை போக புது வகையான சித்ரவதைகளும் செய்கின்றனர்.

      கணவன் கண்முன்னே மனைவி கற்பழிக்க படுகிறாள் வேண்டாமென்று கெஞ்சும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அடி விழுகிறது, தந்தையை மகனும் மகனை தந்தையும் செருப்பால் அடிக்க வேண்டும் இல்லையெனில் இருவருக்கும் காட்டுதனமான அடி கிடைக்கும், கட்டைவிரலை மடக்கி வைத்து மணிக்கட்டுடன் சேர்த்து கட்டி வைப்பார்கள் அப்படி செய்தால் அவர்களால் வாழ்க்கை முழுவதும் கட்டை விரலால் எதையும் தூக்க முடியாது, எட்டு மாத கர்ப்பிணியை நான்கு பேர் கொடுரமான முறையில் கற்ப்பழிக்கின்றனர், காவலர்கள் அனுமதித்தால் மட்டுமே யாரக இருந்தாலும் உடை அணிந்து கொள்ளவேண்டும் அதுவும் விசாரணையின் போது ஆண் பெண் பேதமில்லாமல் அனைவரும் நிர்வாணம் தான், காது மடல்கள், மார்பு காம்புகள், பிறப்புறுப்பு என கிளிப்புகள் மாட்டப்பட்டு மின்சாரம் செலுத்தப்படுகிறது, மின்சாரம் செலுத்தும் போது பீதியினால் மலம் கழிப்பவர்களின் வாயில் அந்த மலம் திணிக்கப்படுகிறது, பகலெல்லாம் இப்படி விசாரணை செய்யப்படும் பெண்கள் இரவுகளில் ஆறேழு பேரால் வண்புணர்ச்சி செய்யப்படுகின்றனர், "என்னை என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோங்க எம்மகளை விட்டுறுங்க" எனக் கதறும் தாயின் மகளை எல்லாரும் இருக்கும் அறையில் நிர்வாணமாக கட்டி வைத்து அனைவரையும் பார்க்க சொல்கின்றனர் பார்க்காதவர்களுக்கு அடி விழுகிறது அதே நிலையில் அந்த பெண் வண்புணர்ச்சி செய்யப்படுகிறார். இவை யாவும் நடந்தது நாஜி முகாம்களில் அல்ல செய்தவர்கள் சிங்களர்களோ வேறு இனத்தவர்களோ அல்ல நீங்களும் நானும் பேசும் மொழியை பேசுபவர்கள் வணங்கும் கொடியை வணங்குபவர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

 
       
                "1999 தொடங்கி 2002 வரை சதாசிவம் கமிஷன் முன்பு சாட்சியம் சொல்வதற்காக பழங்குடி மக்களை அழைத்து வந்தோம். அந்த மக்கள் ஒவ்வொருவரும் விவரித்த சித்ரவதைகள் எல்லோரையும் குலை நடுங்க வைத்தன. காவல் துறையால் அடித்து உதைத்து முட மாக்கப்பட்டவர்கள், பாலியல் வல்லுறவுக்கு உள்ளானவர்கள், வீடுகள் எரிக்கப்பட்டு ஊரைவிட்டுத் துரத்தப் பட்டவர்கள் என அவர்களின் வாழ்க்கையே சிதைக்கப் பட்டு இருந்தது. போலீஸ் சித்ரவதையால் பல பேர் பைத்தியங்களாகத் திரிந்தார்கள். அரச வன்முறையின் கோரமான முகத்தை ஆவணமாகப் பாதுகாக்க வேண் டிய தேவையும் இருந்தது. 'சோளகர் தொட்டி' என்ற நாவல் இப்படித்தான் உருவானது"  என்ற தனக்கு ஏற்ப்பட்ட அதிர்வை சொல்கிறார் வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான  ச.பாலமுருகன். நாவலின் இரண்டு பாகத்திலும் வழக்கமாக கதை சொல்வத்ற்க்கான அழகியலை தவித்து இருப்பதால் ரொம்பவே ஆவணத்தன்மையுடன் சொல்லப்பட்டு இருக்கிறது. சொல்லப்படும் கதைகள் எல்லாம் கதைகளாக உணராமல் உண்மை சம்பவங்களை போல் உணர்வதற்க்காக திட்டமிட்டே ஆவணத்தண்மையுடன் சொல்லப்பட்டிருப்பதாகவும் தோன்றுகிறது. என்னை ரொம்ப ஆச்சர்யப்படுத்திய விஷயம் நாவலின் முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருக்கும் சோளகர்களின் வாழ்க்கை முறை. இத்தனை நுணுக்கமாக சொல்வதற்க்கு குறைந்தது சில வருஷங்களாவது  அவர்களுடன் நெருக்கமாக வாழ்ந்து இருக்க வேண்டும்.

         இந்த புத்தகம் வீரப்பனுக்கு ஆதரவாக எழுதப்பட்டது என்று ஒரு விமர்சனம் இணையத்தில் உலாவுகிறது ஆனால் அது உண்மை அல்ல. விரப்பனுக்கும் அரசுக்கும் இடையே சிக்கி சிதைந்து போன மக்களின் வாழ்க்கையை மட்டுமே இந்த புத்தகம் சொல்கிறது.

       வீரப்பனை கொன்றாகிவிட்டது, பாராட்டு விழா முடிந்தாகி விட்டது, பதக்கங்களும் வீட்டு மனைகளும் கொடுத்தாகிவிட்டது ஆனாலும் கதை இன்னும் முடியவில்லை :(.

பதிப்பகம் : எதிர் வெளியீடு
விலை      : 120 ரூபாய்

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக்கவும்..,
        
[ Read More ]

மேலும் சில கிறுக்கல்கள்


உனக்காக எல்லா காலங்களிலும்
காத்துக்கொண்டிருக்கிறேன்...
மழை நாளில் குடையோடும்
வெயில் நாளில் கொஞ்சம் மழையோடும்...

 --------------------------------------- ************* ---------------------------------------- 

Being Alone is always
Better than being All Alone...,

 --------------------------------------- ************* ---------------------------------------- 

எவ்வளவு காலம் தான்
காத்திருப்பது
நேற்று முடியாத
நாளை தொடங்காத
நாளுக்காக..,

  --------------------------------------- ************* ---------------------------------------- 

Not only Wound heals
Also Scar fades..,


பத்து நாளாக ஏன் எதுவும் எழுதவில்லை என்று ஃபோனிலும் ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும ரேடியோவிலும் டிவியிலும் கேட்ட வாசகர்களுக்காக :) :) :).



[ Read More ]

The Dark Kight Rises - எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா கிரிஸ்டோபர் நோலன் !!

         ஃபேஸ்புக்கிலோ பதிவுலகிலோ எங்கு திரும்பினாலும் எங்கும் பேட்மேன் பற்றிய பேச்சு தான். பேட்மேன் காமிக்ஸ் குறித்தோ, கேரக்டர்கள் குறித்தோ, பேட்மேனின் சைக்காலஜி குறித்தோ, முந்தைய படங்கள் குறித்தோ ப்ளாக் வைத்திருக்கும் அனைவரும் எழுதி தீர்க்கின்றனர். ப்ளாக் இல்லாதவர்கள் தங்கள் Profile Picture ஆகவும் Cover Photo ஆகவும் பேட்மேனையும் கிரிஸ்டோஃபர் நோலனையும் வைத்து ஹைப் ஏற்றுகின்றனர். இந்த அளவுக்கு வேறு எந்த ஆங்கில படத்திற்க்காகவும் தமிழ் இணைய உலகிம் தீப்பற்றி எரிந்ததாக நினைவில்லை. நம்ம ஊர்ல தான் இப்புடின்னா அமெரிக்கால இன்னும் ஓவரா போறாங்க படம் நல்லா இல்லன்னு விமர்சனம் எழுதுன ஒரு வெப்சைட் சர்வரையே ரசிகர்கள் டவுன் பண்ணிடாங்களாம். நெகடிவ் விமர்சனங்கள் வந்தால் ரசிகர்கள் கொலைவெறியாவதை கண்டு Rotten Tomatoes விமர்சன பகுதியையே  படம் வரும் வரை மூடிவிட்டது. நேற்றிரவு IMDB தளத்தில் 9.6 மதிப்பெண்கள் இருந்தது இன்னிக்கு பாத்தா மொத்தம் 5 ரேட்டிங் தேவைன்னு போர்டு மாட்டி இருக்காங்க ஆனா 52 பேர் விமர்சனம் எழுதி இருக்காங்க :))) .


        எல்லாரும் எழுதும் போது நானும் எழுத வேன்டுமா என யோசித்து கொண்டிருக்கும் போது என்னுடைய வாசகர் கிரிஸ்டோபர் நோலன் டிவிட்டரில் போன் செய்து எழுத சொன்னதால் மட்டுமே இந்த உலக மகா பதிவை எழுதுகிறேன் என்பதை மனதில் நிறுத்தி தொடர்ந்து படிக்கவும்  :))). படத்துக்கு இந்த அளவுக்கு ஹைப் ஏற முக்கியமான மூன்று காரணங்கள் கிரிஸ்டோபர் நோலன்,  ஜோக்கராக Heath Ledger மற்றும் மார்கெட்டிங்.

        நோலன் ஒரு மோசமான படமென்ன சுமாரான படம் கூட இன்னும் எடுக்காதவர். படம் பார்க்கும் ரசிகனின் முளைக்கு தொடர்ச்சியாய் வேலை கொடுக்கும் மிக சிறந்த திரைக்கதை ஆசிரியர். மிக பெரிய ரசிக கூட்டத்தை சம்பாதித்து வைத்து இருப்பவர் இந்த படத்திற்க்கு மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் இவரின் பெயரே ஏதோ மந்திரம் போல ரசிகர்களை தன் வசம் இழுக்க போகிறது. இந்த படத்தை மட்டும் இவரை தவிர வேறு யாரேனும் இயக்கி இருந்தால் யாரும் இப்படி கண்ணில் விளக்கெண்ணை விட்டுகொண்டு எதிர்ப்பார்க்கமாட்டார்கள்.


       அடுத்ததாக ஜோக்கர்.., என்ன பெர்ஃபாமென்ஸ்டா அது !!. நான் டிம் பர்டனின் பேட் மேன் இன்னும் பார்க்கவில்லை ஆனாலும் ஆளானப்பட்ட ஜாக் நிக்கல்ஸனால் கூட இந்த மாதிரி ஒரு வெறிதனமான நடிப்பை கொடுத்திருக்க முடியாது. The Dark Knight வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்னமும் பலரும் ஃபேஸ்புக்கிலும், லேப்டாப்களிலும், மொபைலிலும் வால்பேப்பராகவும் ப்ரொஃபைல் பிக்சராகவும் வைத்துள்ளனர். சினிமா வரலாற்றின் மிக சிறப்பாக நடிக்கப்பட்ட கதாபாத்திரங்களை பட்டியலிட்டால் ஜோக்கராய் வாழ்ந்த Heath Ledger-ஐ யாராலும் மிஸ் செய்யமுடியாது.

      
     கடைசியாக வார்னர் பிரதர்ஸின் வைரல் மார்கெட்டிங்.., படம் தொடங்கிய நாள் முதலே உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் எதிப்பார்க்க தொடங்கிவிட்டாலும் ஊரில் உள்ள அனைவருக்கும் பேட்மேன் ஜூரம் வருமளவிற்க்கு ஹைப் ஏற்றிவிட்டது என்னவோ இவர்களின் மார்கெடிங் தான். ஆரம்பத்தில் ஒரு சின்ன டீசர் அப்புறம் சின்ன இடைவெளிக்கு பிறகு ஒரு டிரைலர் அதன் பிறகு மற்றுமொரு டிரைலர் என எதிர்பார்ப்புகளை எகிற செய்தது அதுவும் டிரைலர் என்றால் ஆக்சன் காட்சிகளின் தொகுப்பாக இல்லாமல் சிறு சிறு கேள்விகள் எழுமாறு செய்து ரசிகர்களிடையே விவாதங்களை கிளப்பிவிட்டது முக்கியமாக பேட்மேன் இறுதியில் இறந்துவிடுவாரா இல்லையா என்ற விவாதம். ட்ரைலர் குறித்த கருந்தேளின் விரிவான அலசலை படிக்க இங்கே கிளிக்கவும். இந்த டிரைலர்களோடு Nokia, Cadburys என பல விளம்பரங்களிலும் படத்துக்கான விளம்பரமும் சேர்ந்தே வருகிறது அதிலும் Nokia விளம்பரம் செம..,

        நோலன் இந்த படத்தில் The Dark Knight படத்தை மிஞ்ச வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாகும் ஆனால் Dark Knight-ல் தொட்ட உச்சத்தை இதில் தொட்டாலே எல்லோரும் தலையில் வைத்து கொண்டாடுவார்கள் எனபது உறுதி. இரண்டு படங்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் படத்தின் வில்லன்கள் ஜோக்கரின் மிகப்பெரிய ஆளுமையை பேனால் ஈடுசெய்யமுடியுமா என்பதே இப்போது 250 மில்லியன் டாலர் கேள்வி. எப்பவும் பரபரப்பாக இயங்கும், மக்களை விளையாட்டு பொம்மைகளாக நினைக்கும், தனக்கு சமமான போட்டியை எதிர்பார்க்கும் ஜீனியஸான ஜோக்கர் ஏற்படுத்தும் மனரீதியான நெருக்கடிகளும் அதை பேட்மேன் எதிர்கொள்ளும் விதமுமே டார்க் நைட்டின் பரபரப்பான திரைக்கதைக்கு காரணமாகும். இத்தகைய பரபரப்பை மிருகபலம் கொண்ட பேனை வைத்து உருவாக்க எத்தகைய காட்சிகளை நோலன் உருவாக்கி இருக்கிறார் என்பது படம் பார்த்தால் மட்டுமே தெரியும். இதில் கொஞ்சம் பிசகி இருந்தாலும் ரசிகர்களை திருப்திபடுத்துவது பிரச்சனையாகி விடும்.

          படத்தின் மீதிருக்கும் அதீத எதிர்பார்ப்பு வசூலுக்கு எந்த அளவுக்கு துணை செய்கிறது அந்த அளவுக்கு படம் திருப்தி தராமல் போக வாய்ப்புள்ளது. ஏற்கனவே ரசிகர்கள் இந்த வருடத்தின் சிறந்த படம் இது தான் என்றும் வாழ்கையிலே இப்படி ஒரு இனி வரபோவதில்லை என்றும் பேச தொடங்கிவிட்டனர். அவதாரை முந்த போகிறது Avengers-ஐ தான்ண்ட போகிறது என்று  ஃபோட்டோ எல்லாம் ஃபேஸ்புக்கில் போட ஆரம்பித்துவிட்டார்கள். இவ்வளவு எதிர்பார்ப்புடன் வரும் ரசிகர்களை திருப்திபடுத்துவது எந்த இயக்குநருக்கும் நோலனுக்கு கூட சுலபமானதல்ல.

            ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டாலும் கூட படம் வசூலில் சாதனை செய்யதான் போகிறது ஆனால் நோலனிடம் எதிர்பார்ப்பது வெறும் வசூல் சாதனையல்ல..., சனிக்கிழமை படம் பார்க்க போகிறேன் அத்தனை எதிர்பார்ப்புகளையும் நோலன் பூர்த்தி செய்வார் என நம்புவோமாக !!
[ Read More ]

நான் ஈ மற்றும் The Immortals of Meluha...,

நான் ஈ:


        பொங்கலப்போ வந்து ஹேப்பி நியூ இயர் சொல்லுற மாதிரி இப்போ என்னடா நான் ஈ பத்தின்னு கேட்டிங்கன்னா ஆன்ஸ்ர் இஸ் வெரி சிம்பிள் இப்போ தான் நா பாத்தேன் :) :).  எல்லா ஃபேண்டஸி கதைகளும் பார்ப்பவனை  எல்லா நொடிகளும் ஏமாற்ற வேண்டும் அதே வேளையில் ஒரு கணம் கூட பார்வையாளன் தான் ஏமாற்றப்படுகிறோன் என்பதை உணர விடவும் கூடாது. இதில் கொஞ்சம் பிசகினாலும் படம் காமெடி ஆகிவிடும் (Remember ஏழாம் அறிவு). இதை மிக சரியாக பின்பற்றி தேவையில்லாம் எந்தவொரு காட்சியையோ பாடலையோ நுழைக்காமல் காட்ட நினைத்த விஷயத்தை ஒரு நிமிஷம் கூட போரடிக்காமல் எடுத்து இருக்கிறார்கள்.

.

        ஈ சண்டை போடுமான்னு யோசிக்க விடாமல் காட்சிகள் நகர்ந்தால் அதற்கு இணையாக சி.ஜி செய்யப்பட்டுள்ளது. ஈ வெள்ளத்தில் இருந்து தப்பிக்கும் காட்சி தவிர அனைத்து காட்சிகளிலும் "நீட்" ஆக இருக்கிறது சி.ஜி வேலைகள். திரைக்கதை மற்றும் சி.ஜிக்கு அடுத்த படி படத்தின் மிக பெரிய பலம் வில்லனாக நடித்துள்ள சுதீப் பலவகையான ரியாக்ஸன்கள் கொடுத்து பயங்கரமாக இம்ப்ரஸ் செய்கிறார். தமிழில் வெளிவந்த So Called பிரமாண்ட படங்களின் பட்ஜெட்டில் பாதிக்கும் குறைவான செலவில் தாயாரிக்கப்பட்ட படம் தரத்தில் அந்த படங்களை விட பல மடங்கு உயர்ந்து நிற்கிறது.  ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்ய போவதாக சொல்லி இருக்கிறார்கள் எதில் வந்தாலும் வெற்றி பெறுவதற்க்கான சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கின்றது. நான் பார்த்தவரையில் இந்திய அளவில் இத்தனை சிறப்பாக கையாளப்பட்ட ஃபேண்டஸி கதையை பார்த்ததாக நியாபகம் இல்லை.

நான் ஈ - நீண்ட நாட்களுக்கு பிறகு திருப்தி தரும் பொழுதுபோக்கு திரைப்படம்.


The Immortals of Meluha :
           
                  5 லட்சம் புத்தகங்கள், விற்றுவிட்டனர், சேதன் பகத்தை பின்னுக்கு தள்ளிவிட்டார்,  புராண கதைகளின் மிக புத்திசாலிதனமான வடிவம், இந்தியாவின் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் என்றெல்லாம் அதீத விளம்பரங்களை கேட்டு ரொம்பவே எதிர்பார்ப்போடு தான் The Shiva Trilogy-ன் முதல் புத்தகமான இதை வாங்கி படிக்க தொடங்கினேன்.  சாதாரண மனிதனாக இருந்த சிவன் எப்படி கடவுள்களின் கடவுளாக (மகாதேவ்) மாறுகிறாரென்பது தான் Shiva Trilogy-ன் கதை சுருக்கம்.  இந்த மூன்றில் இரண்டு வெளியாகிவிட்டது கடைசி புத்தகம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகிறது.


             கைலாச மலையில் வாழும் சிறு மலைவாழ் குழுவுக்கு தலைவனாக இருக்கும் சிவாவுக்கு சூரிய வம்சத்தவர்கள் ஆட்சி செய்யும் மெஹூலாவிற்க்கு வருமாறு நந்தி மூலமாக அழைப்பு வருகிறது. கைலாச மலையில் உள்ள பிரச்சனைகள் காரணமாக அங்கே தன் மக்களுடன் குடிபெயர்கிறார். மருத்துவம், கட்டிட கலை,  நெசவு என பல துறைகளிலும் உச்சத்தை தொட்டு இருக்கும் அங்கு அனைவரும் சட்டத்தை மதித்து நடப்பதால் அது ஒரு சொர்க்கபுரியாக இருக்கிறது. அங்கு 200 வயதானவர்கள் கூட மிக இளமையுடன் தெரியுமளவுக்கு மருத்துவ வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள். சிவாவின் நீல கழுத்தை பார்க்கும் வீரர்கள் இவர் தான் தாங்கள் தேடிவரும் நீலகண்ட் என்றும் அவரால் தான் தங்கள் பிரச்சனையை தீர்க்க முடியும் என்றும், அவருக்காக பல நூற்றாண்டுகளாக காத்திருந்ததாகவும் கூறுகின்றனர். சொர்க்கபுரியாக திகழும் அவர்களுக்கு என்ன பிரச்சனை , சிவன் எப்படி அவற்றில் இருந்து மக்களை காத்தார் என்பதையெல்லாம் நாவல் படித்து தெரிந்து கொள்ளவும்..,

                 நாவலின் ஆசிரியர் அமிஷ் திரிபாதி IIM-ல படித்து இன்வெஸ்ட்மெண்ட் பேங்கராக வேலை பார்த்தவர் சேதன் பகத் போலவே. சேதன் பகத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு IIT மற்றும் IIM ல் படித்தவர்கள், படிப்பவர்கள் எல்லாம் ஏதோ செமஸ்டர் பேப்பர் போல ஒரு நாவலாவது எழுதி விடுகின்றனர் சொல்லி வைத்தாற்ப்போல் அனைத்தும் காதல் கதைகள். அவற்றில் ஏதேனும் ஒன்று உங்கள் கையில் கிடைத்தால் தயவு செய்து படித்து விடாதிர்கள் அவை எல்லாம் படைப்பாளி இறந்துவிடுகிறான் என்ற பின்நவீனத்துவ விதியை பொய்யாக்கி படிப்பவனையே கொல்லும் வல்லமை பெற்றவை. இந்த புத்தகம் அது போல் இல்லாமல் தொடர்ச்சியாக படிக்க வைக்கிறது என்பதே நமக்கு ஆறுதலாக உள்ளது.


            நாவலின் முக்கிய ப்ளஸ் கதை சொல்லப்பட்டிருக்கும் வேகம் பிற்காலத்தில் பாலிவூட் படமாக்கும் எண்ணத்தை மனதில் வைத்தே எழுதி இருப்பார் போல. இந்து மத புராணங்களில் உள்ள கதாபாத்திரங்கள் எல்லாம் மனிதர்களாக அவர்களின் சக்தியாக சொல்லப்பட்ட விஷயங்கள் கதாபாத்திரங்களாகவும் இருப்பது படிப்பதற்க்கு நன்றாக இருக்கிறது. ரொம்பவே எளிமையான ஆங்கிலம் சிலருக்கு நிறையாகவும் சிலருக்கு குறையாகவும் தோன்றலாம்.
           
          சமகால மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் உரையாடல்களும் அப்படியே இருப்பது பல நேரங்களில் கடுப்பை கிளப்புகிறது. பல்லாயிரகணக்கான வருடங்களுக்கு முந்தைய கதையில் Damn it, Shit, Okay, Hello, "What the Hell" போன்ற வசனங்கள் நிரம்பி இருக்கின்றன. விதவையான சதியை  (பார்வதி) சிவன் திருமணம் செய்து கொள்வதை போல் கதை சொல்லப்படுகிறது அதுவும் எந்த ஆட்சேபனையும் இன்றி ஏற்றுகொள்ளப்படுகிறது. பண்டைய இந்தியாவில் விதவை திருமணம் வழக்கத்தில் இருந்த்தாக கேள்விப்பட்டதில்லை அதுவும் பார்வதியின் இரண்டாம் கணவர் சிவன் என்பதையும் எங்கும் கேள்விப்பட்டதில்லை. இன்றைய சாதிப்பிரிவுகளுக்கு அடிப்படையான வர்ணாசிரம பிரிவுகள் பிறப்பின் அடிப்படையில் இல்லாமல் திறமையின் அடிப்படையில் இருப்பதாக சொல்லப்படுவது ஏற்கக்கூடியதாய் இல்லை. மொத்த நாவலுமே கிளஷேக்கள் நிறைந்த்தாய் இருக்கிறது கொஞ்சம் படங்கள் பார்த்தவராகவோ புத்தகங்கள் படித்தவராகவோ இருந்தால் நாவலில் வரும் எதிர்பாராத திருப்பங்களை கூட சுலபமாக கண்டுபிடித்துவிடலாம்.
          
         மொத்ததில் முதல் பத்தியில் சொன்ன பில்டப்புகளை நிறைவேற்றியதா என்றால் இல்லை என்பதே பதிலாகும் ஆனாலும் ஒரு ஹிந்தி படம் பார்த்த உணர்வை தருகிறது நாவல் சீக்கிரத்திலே படமாக வரும் வாய்ப்பும் அதிகம் :).
[ Read More ]

மிஷ்கினின் "முகமூடி" அல்லது சோடா மூடி : ஒரு புரட்சியின் தொடக்கம்

 உலகில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தை கண்டு மனம் 
கொதித்து பதிவோ ஸ்டேடஸோ டிவிட்டோ போட்டால் நீயும் எனக்கு நண்பனே..,
 - பிரபல பதிவர் ..,

        எல்லாருக்குமே சூப்பர் ஹீரோ ஆகணும்ன்னு ஒரு கனவு, லட்சியம், வெறி எல்லாம் உண்டு  ஆனால் அதற்க்கான வாய்ப்புகள் யாருக்கும் அமைவதில்லை. மனைவியிடம் செல்போனை கொடுக்கும் அரை நொடி நேரத்தில் ஆபிஸ் ஃபிகர் அனுப்பிய மெஸேஜை டெலீட் செய்வது, மேனேஜர் திரும்பும் கணப்பொழுதில் ஃபேஸ்புக்கில் வந்திருக்கும் தோழியின் சாட்க்கு பதில் சொல்வது என சிறு சிறு சாகசங்களோடு சூப்பர் ஹீரோ கனவு நீர்த்துவிடுகிறது. நாம தான் சூப்பர் ஹீரோ ஆக முடியல சூப்பர் ஹூரோ படம் பார்த்தாவது அந்த வெறிய தீத்துக்கலாம்ன்னு பாத்தா அதுவும் முழு திருப்தி கொடுக்கல.  இது வரைக்கும் உள்ள எல்லா சூப்பர் ஹீரோக்களும் நியூ யார்க் , வாஷிங்டென் மாதிரி ஊர தான் காப்பாத்துறாங்க நம்ம சென்னை , மதுரை பக்கம் எட்டி கூட பாக்க மாட்டானுங்க அட அத கூட பொறுத்துக்கலாம் ஆனா அவுனுங்க டாவடிக்கிற பொண்ணுங்ககெல்லாம் ஆண்டியாவே இருக்காங்க என்ன கொடுமைடா !!!. இப்படி ஒரு சூப்பர் ஹீரோவுக்கு கூட வெள்ளையனை பார்த்து ஏங்குவது தமிழனை பிடித்த சாபமன்றி வேறொன்றுமில்லை.

         636 பேரை தனியா நின்னு சாமாளிக்கிற நம்ம ஹீரோல்லாம் என்ன சாதாவா சூப்பர் ஹீரோ இல்லையான்னு சில விஷமிகள் கேள்வி எழுப்பலாம். தமிழன் முன்னேறுவதில் எரிச்சலடையும் எத்தர்களின் முகமூடி விரைவில் கிழியும் என்பதை மனதில் நிறுத்தி அவர்கள் சொல்வதற்க்கு செவிமடுக்காமல் மேற்கொண்டு படிக்கவும். தமிழனின் இன்னலை உணர்ந்து சென்னையை காப்பற்ற, தாமிரபரணியை உறைய வைக்க, இருபது வயது ஃபிகரை டாவடிக்க நமக்கே நமக்கென ஒரு சூப்பர் ஹீரோவை உருவாக்க வேண்டும் என நினைப்பவர்கள் பதிவின் ஆரம்ப வரிகளை படித்துவிட்டு தொடரவும். சூப்பர் ஹீரோ படமெடுப்பது ஒண்ணும் அத்தனை சுலபமான வேலை கிடையாது பல தகுடுதனங்கள் செய்ய வேண்டி உள்ளது. முதலில் போஸ்டர் தயாரிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் மற்ற ஈரவெங்காயங்களை பின்னால் உரிக்கலாம்.

         முதலில் ஒரு படத்தை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். உதாரணமாக உங்களுக்கு பேட்மேன் ரொம்ப பிடித்து இருந்தால் அவரையே வைச்சுக்கலாம் ஆனால் அப்படியே பயன்படுத்தினால் ஹாலிவூட்காரன் கண்டுபிடிச்சான்னா டவுசர கழட்டிருவான் சோ யூ மஸ்ட் பீ வெரி கேர்ஃபுல் இன் தீஸ் ஸுட்டிவேஷன்ஸ் அதாவது சூதானமா இருக்கனும் மாமே.., அது நாமே புதுசா கண்டுபிடிச்ச சூப்பர் ஹீரோன்னு டகில் விடுற அளவுக்கு மாற்றங்கள் செய்ய வேண்டும் அதுக்காக முளைய ஓவரா கசக்க வேண்டியதெல்லாம் இல்ல உத்து பாத்து யாராவது கண்டுபிடிச்சிட்டாலும் பேசி சமாளிக்க தெரியனும் அது தான் ரொம்ப முக்கியம் . கறுப்பு கலர்ல சட்டை போட்டா காத்து கறுப்பு எதாவது அடிக்கும்ன்னு சொல்லி பேட்மேன் காஸ்ட்யூம் மொத்ததையும் ஊதா கலருக்கும் மாத்தனும். அதுக்கப்புறம் பேட்மேனின் தலைக்கு மேல் கொம்பு போலிருக்கும் காதுகள் எதுக்கு தேவையில்லாம இது போல ஹீரோக்களை உருவாக்கும் நமக்கு ஏற்க்கனவே தலைக்கு மேல் கொம்பு உள்ளதால் அந்த கொம்புகளை வெட்டி வீசவும் அவ்வளவு தான் சூப்பர் ஹீரோ தயார்.

     அடுத்து போஸ்டர் தான். புது சூப்பர் ஹீரோவுக்கு பேட்மேனை தேர்ந்தெடுத்திருந்தால் போஸ்ட்ருக்கும் அதையே தேர்ந்தேடுப்பது தான் புத்திசாலிதனம் சந்தேகமிருந்தால் பிரபல பதிவர்களிடம் விசாரித்து கொள்ளவும்.

       இது தான் நீங்கள் தேர்தெடுத்த ஒரிஜினல் போஸ்டர் என்றால் பின்வரும் மாற்றங்களை வரிசையாக செய்யவும்..,

1) போன பத்தியில் சொன்னது போல் பேட்மேனின் உடையின் கலரையும் தலையில் உள்ள கொம்பு காதையும் நீக்கி விடவும்..,

2) இடதுபுறமாக பார்த்தபடி இருக்கும் ஹீரோவை அபவ்டர்ன் சொல்லி வலதுபுறமாக திருப்பவும்..,

3) மஞ்சள் கலரில் இருக்கும் பேக்கிரவுண்ட் வானத்தையும் ஊதா கலருக்கு மாற்றி கொள்ளவும்..,

4)  பேட்மேனுக்கு கீழ் இருக்கும் வவ்வால்களை துரத்தி விடவும்..,

5) ஹீரோவின் முகத்திற்க்கு ஜூம் போகவும்..,

6) ஒரிஜினல் படத்தின் பெயரை அழித்து விட்டு உங்கள் படத்தின் பெயரையும் அந்த இயக்குநர் பேரை அழித்துவிட்டு உங்கள் பெயரையும் எழுதி கொள்ளவும்..,

அவ்வளவு தான் முடிந்தது உங்களுக்கான சூப்பர் ஹீரோ கிடைத்து விட்டார் :))


எச்சரிக்கை : இது போஸ்டர் உருவாக்குவது எப்படி என்பதை விளக்கும் டெக்னிக்கல் பதிவு மட்டுமே நீங்களாக எதாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு கம்பேனி பொறுப்பாகாது..,

Courtesy :  சமீபத்தில் திரு,மிஷ்கின் அவர்கள் கொடுத்த பேட்டி ஒன்றில் இருந்து பதிவின் தலைப்பு எடுத்தாளப்பட்டுள்ளது.
                  
தேவைப்பட்டால் தொடரும்...,
      
[ Read More ]

5 Centimeters Per Second [ Japanese/2007 ] - நிரம்பி வழியும் காதல்..,

         யாரோ ஒருவருடன் பேசுவதற்க்காக மட்டுமே பள்ளிகூடத்திற்க்கோ கல்லூரிக்கோ போவதாக உணர்ந்து இருக்கிறீர்களா ? யாரோ கொடுத்த சாக்லேட்டின் ரேப்பர்களை பத்திரப்படுத்தி இருக்கிறீர்களா ?  ஷாப்பிங் மாலிலோ ரயில்வே ஸ்டேஷனிலோ யாரையேனும் எதிர்பார்க்கமல் சந்திக்க எதிர்பார்த்து இருக்கிறீர்களா? தூரத்தில் நடக்கும் ஒரு பெண் அவள் போல் இருக்க ஆசையுடன் அருகில் போய் ஏமாந்து இருக்கிறீர்களா ? வாழ்க்கையில் ஒருமுறையேனும் காதலித்து இருக்கிறீர்களா ?
            இந்த கேள்விகளுக்கு ஏதேனும் ஒன்றுக்கு உங்கள் பதில் ஆம்  எனில இது உங்களுக்கான படம்...,


        இது எப்படிப்பட்ட படம் என்று மேலே இருக்கும் பத்தியை படிக்கும் போதே ஒருவாறாக கற்பனை செய்து இருப்பிர்கள் ஆனால் இது ஒரு அனிமேஷன் படமாக இருக்கும் என எதிர்ப்பார்த்தீர்களா.., Yes it is :) . 5 Centimeters Per Second என்ற படத்தின் தலைப்பு செர்ரி பூக்களின் இதழ்கள் உதிர்ந்து விழும் வேகமாகும். இந்த தலைப்பு மனித வாழ்க்கையின் மந்த தன்மையையும் ஒன்றாய் இருக்கும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் விலக தத்தம் வாழ்க்கைகாய் விலகி செல்வதின் குறியீடு அப்புடின்னு நா ஒண்ணும் கண்டுபிடிக்கல விக்கிபீடியா சொல்லுது :).  62 நிமிடங்கள் மட்டுமே ஓட கூடிய மிக சிறிய படமான இது மொத்தம் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது..,

Episode I : Chasing Cherry Blossoms

     மத்திய தொண்ணூறுகளில் படத்தின் முதல் பகுதி நடக்கிறது. ஆரம்ப பள்ளியின் இறுதி நாளில் நெருங்கிய நண்பர்களான டகாகி மற்றும் அகாரி பள்ளி முடிந்து வருகின்றனர். அகாரியின் பெற்றோர் வேறு ஊருக்கு மாற்றலாகி செல்வதால் இனி பார்க்க முடியாது என்றாலும் அடுத்த வருடம் இதே காலத்தில் அவனுடன் இருக்க விரும்புவதாகவும் கூறி செல்கிறாள் அதன் பிறகு  இருவரும் கடிதம் மூலமே உரையாடி கொள்கின்றனர். ஒரு வருடம் கழித்து அவளை பார்ப்பதற்க்காக டகாகி ரயிலில் அகாரி ஊரை நோக்கி செல்கிறான். அன்று இரவு 7 மணிக்கு சந்திப்பதாக அகாரியை சந்திப்பதாக போட்ட ப்ளான் கடும் பனி பொழிவினால் ரொம்பவே சொதப்பி விடுகிறது. 8.30 மணிக்கு பாதி தூரம் மட்டுமே சென்று இருக்கிறான். இருவரும் சந்தித்தார்களா இல்லையா என்ற சஸ்பென்ஸை உடைக்க விரும்பவில்லை நீங்களே பாருங்கள்.

Episode II :Cosmonaut

          செல் ஃபோனும் இன்டர்நெட்டும் அறிமுகமாகிவிட்ட இருபதாம் நூற்றாண்டின் தொடக்க வருடங்களில் படத்தின் இரண்டாம் பகுதி நடக்கிறது. காலப்போக்கில் அகாரி உடனான தொடர்பை முற்றிலுமாக இழந்துவிட்ட டகாகி புதிய பள்ளியில் யாருடனும் ஒட்டாமல் தனியாகவே இருக்கிறார். அதே பள்ளியில் படிக்கும் சுமேடா டகாகியை பார்த்த நாள் முதலே காதலிக்க தொடங்கிவிடுகிறார் ஆனாலும் தன் காதலை வெளிப்படுத்த தைரியமின்றி இருக்கிறாள். கொஞ்ச காலத்தில் இருவருக்கும் ஒரு மெல்லிய நட்பு உருவாகிறது ஆனாலும் அதற்கு மேல் அவளால் நெருங்க முடியவில்லை. இருவரும் தனியாக இருக்கும் சமயத்தில் தன் காதலை வெளிப்படுத்த முயற்சி செய்து தோற்று போகிறாள்.



Episode III : 5 Centimeters Per Second

          சில வருடங்களுக்கு பிறகு., டகாகி கம்ப்யூட்டர் ப்ரோகிராமராக டோக்கியோவில் வேலை பார்த்து கொண்டிருக்கிறார். சுமேடா இன்னும் உன்னை காதலிக்கிறேன் என டகாகிக்கு மின்னஞ்சல் அனுப்பி கொண்டிருக்கிறார்.  திருமணத்திற்க்கும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் வேலை காரணமாக டோக்கியோவுக்கு பயணமாகிறார் அகாரி. ஒரு முறை ரெயில்வே கிராஸிங்கை தாண்டி செல்லும் போது எதிரில் வந்த பெண் அகாரியாக இருக்குமோ என திரும்பும் போது சரியாக அதே நொடியில் ஒரு ரெயில் வந்து பார்க்க விடாமல் செய்கிறது. அப்போது ரொம்ப ரொம்ப அழகான பாடல் வருகிறது. அப்பாடல் முடிந்ததும் அந்த பெண் அகாரியா ? இருவரும் இணைந்தார்களா ?  போன்ற விஷயங்களை எல்லாம் திரையில் காண்க..,

     இந்த கதையை படிக்கும் போது இது ரொம்பவும் சாதாரணமாக இருப்பதாக நீங்கள் உணரலாம் ஆனால் திரையில் இந்த படம் ஏற்படுத்தும் பாதிப்புகள் ரொம்பவே அதிகம். காதலை பிரிந்ததால் ஏற்படும் தனிமையையும் , பழைய காதலை நினைக்கும் போது ஏற்படும் துக்கமும் மகிழ்ச்சியும் நிறைந்த கலைவையான உணர்ச்சியையும் அழகான காட்சிகளின் மூலம் வெகுசுலபமாக பார்வையாளனுக்கு கடத்தி விடுகிறது. சிறுவயதில்  நெருக்கமாய் இருந்தவர்கள் செல்ஃபோனும் இணையமும் இல்லாமல் கால ஓட்டத்தில் காணாமல் போனதை எந்தவிதமான மிகையும் இல்லாமல் காட்டுகிறது. படத்தில் உரையாடல்கள் மிகவும் குறைவு முக்கிய பாத்திரங்கள் மூவரும் அவர்கள் மனதுக்குள் நினைப்பதே வசனங்களாக வருகிறது. பெரும்பாலான வசனங்கள் க்யூட்டான கவிதையாக இருக்கின்றன.


          படம் முழுவதுமே நட்பு, பிரிவு, தனிமை,  ஏக்கம், காதலை நோக்கி பயனித்தல், காதலுக்காக காத்திருத்தல் என காதலின் அத்தனை உணர்வுகளையும் கொண்டு காட்சிகளை நிரப்பி படம் முழுவதுமே படுரொமாண்டிக்காக இருக்கிறது. இது எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்ததை போல் வருகிறது அந்த கிளைமேக்ஸ் பாடல் அதுவரை படம் ஏற்படுத்திய உணர்வுகளை இன்னொரு லெவலுக்கு இந்த பாடல் எடுத்து செல்கிறது அதிலும் அந்த பாடல் வரிகள் அற்புதம் (அந்த மொழி தெரியுமான்னு கேக்க கூடாது எல்லாம் சப்டைட்டில் தான் :) ). முதன்முறையாக என் கம்ப்யூட்டரில் ஒரு ஜப்பானிய பாடல் திரும்ப திரும்ப ஓடி கொண்டிருக்கிறது. அந்த அற்புதமான பாடல் உங்களுக்காக..,


படத்தின் இன்னுமொரு முக்கிய ப்ளஸ் இதில் வரும் அனிமேஷன் அதுவும் ரொம்பவும் அழகாக எடுக்கப்பட்டுள்ளது. ரொம்பவே டெம்ப்ளேட்டாக சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு அனிமேஷன் படம் என்பதையே நாம் மறக்கும் அளவிற்க்கு இருக்கிறது. நான் பார்த்த மிக சிறந்த 2D அனிமேஷன்களில் இந்த படத்தின் அனிமேஷனையும் எந்த யோசனையுமின்றி சேர்த்து கொள்வேன். இந்த படத்தை எழுதி தயாரித்து இயக்கி இருப்பவர் Makoto Shinkai என்ற ஜப்பானிய இயக்குநர். ஜப்பானிய விமர்சகர்கள் இவரை அடுத்த மியாசாகி என்றுழக்கும் அளவிற்க்கு நம்பிக்கை தருபவராக இருக்கிறார்.

    எவ்வளவோ யோசித்தும் குறையென்று எதுவும் சொல்ல தோன்றவில்லை அவ்வளவு பிடித்துவிட்டது. ஏதேனும் ஒரு விடுமுறை நாளில் ஒரு மணிநேரம் மட்டும் செலவு செய்து இந்த படத்தை பாருங்கள் அட்லீஸ்ட் ஒரு நாளுக்காவது அந்த பாதிப்பு இருக்கும் நிச்சயமாக...


     
          
[ Read More ]

சகுனி - 1 Line Review


Only One Line :
          கேக்குறவன் கேணையனா இருந்தா கேப்பையில் இருந்தும் நெய் வடியுமாம்..,

Verdict : போய்டாதிங்ங்ங்ங்ங்ககக....,

கொசுறு :
படத்தின் ஒரே ஆறுதல் ஒன்பதே முக்கா நிமிஷம் வரும் பிரணிதா..,

[ Read More ]

மறுபடி பார்க்க விரும்பாத படங்கள்..,

            ஒரு புத்தகமோ திரைப்படமோ காலங்கள் கடந்தும் நிலைத்து நிற்பதற்க்கு மறுவாசிப்பும் மீள்பார்வைகளும் மிகவும் அவசியமாகின்றன. நமக்கு பிடித்த எல்லா புத்தகத்தையும் திரைப்படத்தையும் இன்னொரு முறை ஸ்பரிசிக்க அத்தனை சுலமபாய் தோன்றிவிடுவதில்லை. பெரும்பாலவானவற்றை மீண்டும் பார்க்க கூடாதென முடிவெடுத்தாலும் வெகுசிலவற்றை தான் "கொய்யால உசுரே போனாலும் பாக்க கூடாதுடா"ன்னு கங்கணம் கட்டிக்குவோம். அந்த அளவுக்கு என்னை உசுப்பேத்திய நான்கு படங்களை பற்றிய சிறு பார்வைதான் இந்த வெட்டி பதிவின் நோக்கம். நான்கு படங்களுமே முற்றிலும் வெவ்வேறு வகையானவை நான்கும் வெவ்வேறு மொழிகள் , வெவ்வேறு Genre, வெவ்வேறு வகையில் என்னை பாதித்தவை வெட்டி பில்டப்புகள் போதும் என நினைக்கிறேன் மேற்கொண்டு படிச்சிட்டு இந்த படங்களை பார்ப்பதா வேண்டாமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க..,

A Serbian Film :
       
          இளகிய மனது உடையவர்கள் , சீக்கிரத்தில் உணர்ச்சி வசப்படுபவர்கள் , கலாச்சார காவலர்கள், 15 வயதுக்கு குறைவானவர்கள், இந்த படத்தின் பேர் கேட்டாலே எரிச்சலடைபவர்கள் அனைவரும் இந்த படத்தையும் அடுத்த படத்தையும் ஸ்கிப் செய்வது அனவருக்கும் நல்லது..,

          ஒரு முன்னால் நீலப்பட நடிகனான நாயகன் ரொம்பவும் பண கஷ்டத்தில் இருக்கிறான் மகனின் பள்ளி செலவுக்கு கூட பாக்கெட்டை தடவும் நிலை. அவனுக்கு ஒரு கலைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வருகிறது அதன் மூலம் அவனுக்கு பெரும் தொகையும் கிடைப்பதால் சம்மதிக்கிறான். உண்மையில் அது கலைப்படம் அல்ல அது ஒரு Snuff Film என தெரிய வருகிறது.அப்புறம் என்ன நடக்கிறது என்பது தன் படத்தின் கதை. அது இன்னாப்பா Snuff Film ன்னு கேக்குறிங்களா ? அது ஒண்ணுயும் இல்ல எல்லா நிலப்படத்தையும் போலவே மேட்டர் நடக்கும் அதுவும் கொடூரமாய் கடைசியாய் இருவருமோ அல்லது ஒருவரோ கொலை செய்யப்படுவார்கள். ஆம், நிஜமாகவே கொலை செய்யப்படுவார்கள். இதற்க்கே அதிர்ச்சி அடைபவர்கள் அடுத்த பத்தி போகாமல் அப்பீட்டாவதே நல்லது..,

         குடும்ப அமைப்பில் வாழ்ந்த எந்தவொரு மனிதனாலும் அத்தனை சுலபத்தில் ஜீரணிக்க இயலாத காட்சிகள் நிறைந்த படமாகும். கர்பமாக இருக்கும் பெண்ணுக்கு ஒரு தடியன் பிரசவம் பார்க்கிறான் அப்போது பிறக்கும் குழந்தையை அதே தடியன் கற்பழிக்கிறான்.., எஸ், புதிதாய் பிறந்த குழந்தையை தான். இன்னொரு காட்சியில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெண்ணை ஒருவன் கற்பழித்த படியே வெட்டி கொள்கிறான், போதை மருந்து அதிகம் செலுத்தப்பட்ட ஹீரோ மயக்கமடைந்து இருக்கும் தன் மகனையே கற்பழிக்கிறான்.., இதெல்லாம் கூட பரவாயில்லை (என்னது பரவாயில்லையா ??) கிளைமேக்ஸில் ஹீரோ , அவனின் மனவி மற்றும் மகன் இறந்து கிடக்க அப்போது ஒரு தடியன் "let's start with the small one" அப்புடின்னு சொல்லுவான் பாருங்க என்ன சொல்றது அப்புடியே உறைஞ்சு போய்ட்டேன்.., இந்த படம் பாருங்கன்னு யாருக்கும் சிபாரிசெல்லாம் பண்ணல இதெல்லாம் படிச்சதுக்கு அப்புறமும் பாக்கனும்ன்னு தோணிச்சுன்னா பாருங்க..,

Audition :

         இந்த படத்தை இந்த லிஸ்ட்டில் சேர்க்க வைத்த காட்சி..,
        " காதலி , செகரக்டரி, மகனின் காதலி, வேலைக்காரி என தனக்கு தெரிந்த அத்தனை பேருடனும் நாயகன் உறவு கொள்வதை போல காட்சிகள் மாறி மாறி சர்ரேலிஸ சாயலுடன் காட்சிகள் ஓடுகின்றன. மயக்கம் தெளிந்து ஓர் புதிய இடத்தில் விழிக்கிறான் பக்கத்து அறையில் அவன் காதலி வாந்தி எடுத்து கொண்டிருப்பது தெரிகிறது. அவன் பார்த்து கொண்டிருக்கும் போதே அவனருகில் இருந்த மூட்டை துள்ளி குதிக்கிறது. அந்த மூட்டையில் இருந்து மனிதனை ஒத்த ஒரு உருவம் வெளிவருகிறது. ஆம் அவன் மனிதன் தான் ஆனால் இரண்டு பாதங்களும் வெட்டப்பட்டு , நாக்கு அறுக்கப்பட்டு ,  கைகளில் முக்கிய மூன்று விரல்கள் வெட்டப்பட்டு மனித உருவமே சிதைக்கப்பட்ட மனிதன். அவன் தன் வெட்டப்படாத விரலை கொண்டு அருவெருப்பான முறையில் நாயகியை அழைக்க அவள் தான் எடுத்த வாந்தியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வருகிறாள். பல நாள் பழைய சோத்தயே பாக்காதவன் பந்திக்கு பாய்வது போல் பாய அவள் அந்த வாந்தியை கிழே வைக்க நாக்கில்லா தன் வாயால் அவன் அதை  வாய் வைத்து உறிந்து குடிக்க..," ஹீரோயின் வாந்தி எடுத்தாங்களோ இல்லையோ எனக்கு கொமட்டிட்டு வந்துடுச்சு..,

           பிரபல ஜப்பானிய இயக்குநர் Takishe Mike இயக்கிய முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று. மேற்கூறிய காட்சிகளை தொடர்ந்து வரும் 10 நிமிட டார்ச்சர் சீன் ரொம்ப ஃபேமஸ். டார்ச்சர் என்றதும் ரத்தம், கொடூரம் என்றெல்லாம் நினைக்க வேண்டாம் வெறும் குண்டூசியை வைத்தே டரியல் காட்டி இருப்பார்கள். அந்த வாந்தி காட்சியை மட்டும் பொறுத்து கொண்டால் ஒரு அட்டகாசமான திரில்லர் பார்க்கலாம்.இங்கே கொடுக்க போகும் லிஸ்ட்டில் நான் சிபாரிசு செய்யும் ஒரே படம் இது தான்.

Seven Pounds : 

        படம் பார்ப்பவனின் சட்டையை கொத்தோடு பிடித்து  திரைக்குள் இழுத்து கண்ணுக்குள் க்ளிசெரின் ஊத்தும் கொடுமையை அனுபவித்தது உண்டா ?. ஒரே ஒரு முறை அனுபவித்து பார்க்க விருப்பமா ? ஆம் எனில் இந்த படத்தை பார்த்தே தீர வேண்டிய பட பட்டியலில் உடனடியாக இணைத்து கொள்ளவும்..,  படத்தோட கதை என்னன்னா கொஞ்ச வருஷத்துக்கு முன்னால முரளி மற்றும் லைலா நடித்து வெளிவந்த "காமராசு" என்ற திரைப்படம் நினைவிருகிறதா இல்லைன்னாலும் ஒரு பிரச்சனையும் இல்லை. ரெண்டுமே கிட்டதட்ட ஒரே கதை தான் காமராசுல விசுவாசத்துக்காக முரளி தன் உடம்புல இருக்குற அத்தனை பாகத்தையும் தானம் குடுத்துட்டு மர்கயா ஆகிடுவார். இந்த படத்துல வில் ஸ்மித் குற்ற உணர்ச்சியால் தானம் குடுத்துட்டு போய் சேர்வார்.

      Persuit of Happyness படத்தின் இணை மறுபடி இணைந்த படமென்பதால் கொஞ்சம் ஆர்வம் இருந்தது. படம் ஆரம்பித்த கணம் முதல் இயக்குநரும் வில் ஸ்மித்தும் நம்மை இம்சிக்க தொடங்கி விடுகின்றனர். செயற்க்கையான காட்சிகள் , மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு, வலிந்து திணிக்கப்பட்ட செண்டிமெண்ட் காட்சிகள், ஒரு பாடாவதி ட்விஸ்ட் என சகிக்கவே முடியாத படமாக இருக்கிறது. டி.வி சீரியல்களை அழுது கொண்டே பார்க்கும் வழக்கம் உள்ளவர் எனில் தவறாமல் பார்க்க வேண்டிய கண்ணீர் காவியம்.

மனம் கொத்தி பறவை :


           ராஜா, அமுதே, தீபாவளி போன்ற கொடூர மொக்கை படங்களின் இயக்குநர் எழிலின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்திருக்கும் படம் என நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. நகைச்சுவை படம் என்ற விளம்பரம் பார்த்து ஏதேவொரு குருட்டு தைரியத்தில் படத்துக்கு போன என்னை கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் கதற கதற மொக்கை போட்டனர்.

       படத்தில் வரும் ஜோக்குகெல்லாம் இயக்குநருக்கே சிரிப்பு வந்து இருந்தால் ஆச்சர்யம். படம் தான் மொக்கை ஹீரோயினையாவது சைட் அடிக்கலாம்ன்னு பாத்தா ஏதோவொரு ஆண்டி ஹீரோயினாய் போட்டு கடுப்பேற்றி விட்டனர் பட்ஜெட் ப்ராப்ளம் போல. சீரியஸான காட்சியா நகைச்சுவை காட்சியா என நடித்தவர்களுக்கே தெரியாத காரணத்தால் பார்க்கும் நமக்கு புரிவதற்க்கான நியாயம் கிடையாது. சமீபகாலத்தில் இப்படி ஒரு கேனத்தனமான படத்தை பார்த்ததில்லைன்னு பொய்லாம் சொல்ல மாட்டேன் அடிக்கடி பாத்துட்டு தான் இருக்கேன். நெஞ்சுல தெடமும் திராணியும் இருப்பவர்கள் மட்டும் பார்க்கவும்..,
[ Read More ]