Dirty Harry [English ~ 1971] - இது தாண்டா போலீஸ் !!!

     
         எழுபதுகள்ல வடக்கு கலிஃபோர்னியாவுல ஒருத்தன் வரிசையா கொலை பண்ணிட்டு இருந்தானாம். கொலை பண்ணதோட மட்டும் இல்லாம முடிஞ்சா புடிச்சு பாருங்கிற கணக்கா போலீசுக்கு விலாவாரியா லெட்டர் அனுப்பிட்டு இருந்தான். போலீசும் கண்ணுல வெளக்கெண்ணை, நல்லெண்ணை இன்னப்பிற எண்ணைகளை ஊத்தி தேடியும் அவனுக்கு "Zodiac Killer"-ன்னு பேர் மட்டும் தான் வைக்க முடிஞ்சது கடைசி வரைக்கும் பிடிக்கவே முடியல. இப்போ வரைக்கும் அவன் யாருன்னு கண்டுபிடிக்காம கேஸ் ஓபனாவே இருக்கு. இந்த கொலைகளையும் போலிஸ் விசாரணையையும் பத்தி Zodiac அப்டின்னு ஒரு அருமையான படத்தை David Fincher எடுத்து இருக்கார் நிறைய பேர் பார்த்து இருப்பிங்க பாக்காதவுங்க கண்டிப்பா பாத்துடுங்க . நாம எப்படி பிரேமானந்தா,  டாக்டர் பிரகாஷ், நித்தியானந்தா, சஹானா பத்தியெல்லாம் பரபரப்பா பேசுறோமோ அது மாதிரியே அமெரிக்க மக்களும் இந்த கொலைகள் பத்தி பரபரப்பா பேசிட்டு இருந்து இருக்காங்க. இந்த பரபரப்பை பணமாக்க விரும்பிய வார்னர் பிதர்ஸ் இது மாதிரியே ஒரு தொடர் கொலைகளை பற்றி கிளிண்ட் ஈஸ்ட்வூட்டை போலீஸ் ஹீரோவா வைச்சு ஒரு படமெடுத்தாங்க. படம் பயங்கர ஹிட் ஆனதோட இல்லாம ஈஸ்ட்வூட்டோட வாழ்க்கையிலையே முக்கியமான கதாப்பாத்திரம் ஆகிட்டு அந்த படத்தின் பெயர் தான் "Dirty Harry".

         நம்ம ஊர்ல இந்த மாதிரி பரபரப்பான விஷயங்களை அடிப்படையா வைச்சு புனையப்பட்ட கதைகளை கொண்ட படங்களை இயக்குநர் ஆர்.கே.செல்வமணி எடுத்து இருக்கார். அட்டோ சங்கரின் கதையை ஒட்டி எடுக்கப்பட்ட புலன் விசாரணை, வீரப்பன் பத்தி வந்த கேப்டன் பிரபாகரன், ராஜீவ் கொலையை பத்தி எடுக்கப்பட்டு15 வருஷம் கழிச்சு வந்த   குற்றப்பத்திரிக்கை அவ்வளவு தான் நியாபகம் வருது வேற எதாவது இருந்தா சொல்லுஙக..,




       எல்லாரும் சுகமா இருக்கிற ஒரு சுபதினத்துல நிச்சல் குளத்துல குளிக்கிற ஒரு பொண்ணுக்கு ஒரு புல்லட்டையும் மேயருக்கு ஒரு லெட்டரையும் ஒருத்தன் அனுப்புறான் ஒரு சைக்கோ கொலைக்காரன். அந்த லெட்டரில் தனக்கு ஒரு லட்சம் டாலர் கொடுக்கணும் இல்லைன்னா தினமும் ஒருத்தரை கொன்னுடுவேன்னு மிரட்டுறான். இந்த கேஸ் பாக்குற கிளிண்ட்  முதல்ல அவனை பிடிக்க சில பல பொறிகளை வைக்குறார் ஆனா அதுலலாம் சிக்காம தப்பிக்கிறதோட அவன் சொன்ன மாதிரியே தினமும் ஒருத்தர்ன்னு ரெண்டு பேர கொலை பண்ணிடுறான் அதுல ஒருததர் கறுப்பின சிறுவன் இன்னொருத்தர் பாதிரியார். நிலைமை சீரியஸாவதை உணர்ந்த மேயர் பணம் கொடுக்குறதா முடிவு பண்ணி அந்த பணத்தை  நம்ம கிளிண்ட் கைலையே கொடுத்து அனுப்பறார்.

     பணம் கொடுக்க போன நம்ம கிளிண்ட பணத்த கொடுத்தோமா பக்கோடா சாப்பிட்டோமான்னு இல்லாம அவனை பிடிக்க ட்ரை பண்றார் ஆனா அவன் அப்போ கால்ல ஒரு கத்திய வாங்குனதோட தப்பிச்சிடுறான். மறுபடியும் தேடி அவனை பிடிச்சிட்டு வரும் ஈஸ்ட்வூட் சும்மா அடி பின்னிடுறார். ஆனாலும் சாட்சி இல்லைன்னு அவன் எஸ்கேப் ஆகிடுறான். அதுக்கப்புறம் அவனை மறுபடியும் பிடிச்சாரா இல்லையா என்பதையெல்லாம் டவுன்டலோட் பண்ணி பாத்துக்கோங்க..,
      
      எங்கு தப்பு நடந்தாலும் சட்டத்தின் துணை தேடாமல் மனசாட்சியின் படி தட்டி கேட்க்கும் அல்லது தண்டிக்கும் மூக்கு மேல் கோபம் வருகின்ற Rough and Tough போலீஸ் கதாப்பாத்திரம் தான் Harry Callahan என்கிற Dirty Harry.  இது ஒன்று நமக்கு ரொம்ப அந்நியமான கதாப்பாத்திரம் கிடையாது சாமி, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ஏகப்பட்ட படங்களில் விஜயகாந்த் மற்றும் அர்ஜுன் என தமிழ் மட்டுமில்லாம இது தாண்டா போலீஸ், அக்னி I.P.S, வைஜெயந்தி  I.P.S என்று தெலுங்கு வாலாக்கலாலும் நீண்ட நாளாக காட்டி வருவது தான். எனினும் இந்த மாதிரி கதாப்பாத்திரங்களுக்கெல்லாம் Dirty Harry தான் தொடக்கம் என்று சொல்கிறார்கள். இந்த கதாப்பாத்திரத்தில் வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியாதவாறு அட்டகாசமாய் இருக்கிறார் ஈஸ்ட்வூட் அப்படி ஒரு கம்பீரம், மேன்லினெஸ். இந்த படத்தில் அந்த ட்ரெட்மார்க் .44 Magnum துப்பாக்கியோடு அவர் இருக்கும் ஸ்டில் ரொம்ப பிரபலம் நிறைய பேர் டிசர்ட்டில் அந்த படத்தோட சுத்துவதை பார்த்து இருக்கலாம்.



       கிளிண்ட் ஈஸ்ட்வுட் கொஞ்சம் முரட்டு தனமான இளைஞன் (இப்பவெல்லாம் வயசான இளைஞன்) அல்லது ரொம்ப முரட்டுதனமான இளைஞன் என பல வித்தியாசமான வேடங்களில் நடித்தவர் :). என்ன தான் ஒரே மாதிரியான கதாப்பாத்திரமாக இருந்தாலும் அவரோட ஸ்கிரீன் பிரஸென்ஸ அடிச்சுக்கவே முடியாது கிட்டதட்ட நம்ம ஊரு ரஜினி மாதிரி மாஸான ஆளு.நாயகனாக தன் காலம் முடிய தொடங்கியதை உணர்ந்து நடிப்பதை குறைத்து இயக்குநராக மாறி சில ஆஸ்கர்கள் வாங்கும் அளவுக்கு அதிலும் நிருப்பித்தவர் இதுக்காகவே ரொம்ப பிடிக்கும்.

           எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் இவர் பஞ்ச் டயலாக் பேசும் ஸ்டைல் "My mistake. Four coffins... " என்று 34 வயதில் (A Fistful of Dollars - 1964) சொல்லும் போதும் சரி  "I'll blow a hole in your face then go inside and sleep like a baby."  என்று 78 வயதில் (Gran Torino - 2008) பஞ்சடிக்கும் போதும் போதும் சரி கொஞ்சம் கூட “கெத்து” குறையாமல் இருக்கும். இந்த படத்திலும் இவர் சொல்லும் வசனங்கள் எல்லாம் இன்னமும் செம பிரபலம்..,

 I know what you're thinking. "Did he fire six shots or only five?" Well, to tell you the truth, in all this excitement I kind of lost track myself. But being as this is a .44 Magnum, the most powerful handgun in the world, and would blow your head clean off, you've got to ask yourself one question: Do I feel lucky? Well, do ya, punk?

இது படத்தின் மிக பிரபலமான வசனம். இதை படிக்கும் போது அந்த ஃபீலிங் வருமான்னு தெரில ஆனா படம் பாக்கும் போது செமையா இருக்கும். இது மட்டுமில்லாம மத்த வசனங்களும் புல்லட் ஷார்ப் தான்..

Harry Callahan: Well, when an adult male is chasing a female with intent to commit rape, I shoot the bastard. That's my policy. 
The Mayor: Intent? How did you establish that? 
Harry Callahan: When a naked man is chasing a woman through an alley with a butcher's knife and a hard-on, I figure he isn't out collecting for the Red Cross! 
----------------------------
Harry Callahan: And who says that? 
District Attorney Rothko: It's the law. 
Harry Callahan: Well, then the law is crazy. 

        இந்த படத்தின் தொழில்நுட்ப குழுவினர் குறித்தோ மற்ற விஷயங்கள் குறித்தோ எழுத எதுவும் தோன்றவில்லை. படம் பார்த்து ஒரு வாரமாக போகுது ஆனா எப்போ இந்த படத்த பத்தி நினைச்சாலும் மூணு விஷயம் தான் நியாபகம் வருது Clint Eastwood, Harry Callahan மற்றும் Dirty Harry.

      உங்களுக்கு எண்பதுகளில் வந்த ரஜினி படம் பிடிக்குமா அதுவும் ஹீரோயின் பாட்டெல்லாம் இல்லாமல் ஆக்சன் மட்டும் உள்ள ரஜினி படம் என்றால் ??. ஆம் என்றால் இது நீங்கள் கண்டிப்பாக தவறவிடக்கூடாத படம்.

Dirty Harry - A .44 Magnum Opus ..,

Post Comment


Follow Us in Facebook

6 Responses so far.

  1. நல்ல படம். இந்த பாத்திரத்துக்கு இவர் நன்றாக பொருத்துவார். மேலும் இரண்டு பேர் இவரை விட நன்றாக தெனாவெட்டாக நடிக்கக் கூடியவர்கள்.
    இது என்னுடைய கணிப்பு!

    Sean Connery or Omar Sharif. தமிழில்...முறையே ஷான் கானரி மற்றும் ஓமர் ஷரிப்.

  2. Unknown says:

    நல்ல படம்... பார்த்து ரொம்ப நாள் ஆகுது, இதனை தொடர்ந்து வந்த மற்ற பாகங்களையும் பற்றிய விமர்சனம் எழுதவும்.
    எந்த ஒரு வசனத்தையும் கிளின்ட் ஈஸ்ட்வுட் உச்சரிக்கும் ஸ்டைல் தனிதான்....அந்த ரெண்டாவது டயலாக் Naked Gun படத்துல கலாய்த்து இருப்பார்கள்.

    அந்த நேரத்துல வந்த நிறைய படங்களில் வில்லனை ஹீரோவாக காட்ட, இதில் ரொம்ப கோவகார நேர்மையான ஹீரோவா காட்டின படம் இது....

  3. Anonymous says:

    செம பாஸ். சீன் கானரி, ஓமர் ம்ஹூம் எனக்கு அப்படி தோணல

  4. இப்போ ரெண்டு கிழமைக்கு முன்னாடி தான் டவுன்லோட் போட்டு வச்சேன். சீக்கிரம் பாத்துடறேன்... ஈஸ்ட்வூட்டுக்காகவே பாக்கணும். :)

    //நிறைய பேர் டிசர்ட்டில் அந்த படத்தோட சுத்துவதை பார்த்து இருக்கலாம்.//
    ஹி ஹி ... ஒரு காலத்தில் நானும் இதில் ஒருவன்...

  5. செம படம் பாஸ்..ரொம்ப வருஷம் முன்னாடி பார்த்தது..
    தமிழுக்கு ரஜினி மாதிரி, ஹாலிவுட்க்கு கிளிண்ட் ஈஸ்ட்வுட் மாஸ் ஹீரோ ...அவரோட ஸ்டைல்க்கு நான் தீவிர ரசிகன்...
    ரஜினி மாதிரி நடிப்புன்னு மட்டும் நிறுத்திக்காம , ஈஸ்ட்வுட் டைரக்டர், ஆஸ்கார்ன்னு எங்கயோ போயிட்டார்..

  6. @நம்பள்கி

    நன்றி பாஸ்.. //Sean Connery or Omar Sharif. // ஐ டோண்ட் திங்க் ஸோ :)

    @MuratuSingam

    Naked Gun பார்க்கும் போது இதெல்லாம் தெரியலை.., இப்போ மறுபடிபாக்கனும்..

    @Rasigan vetri
    தேங்ஸ் பாஸ் :)

    @ஹாலிவுட்ரசிகன்
    சீக்கிரம் பாருங்க :)

    @ராஜ்
    ஆமா ரஜினி தான் தேங்கிட்டார் :)

Leave a Reply


எதுனா சொல்லனும்ன்னு தோணுச்சின்னா சொல்லிட்டு போங்க...