மிஷ்கினின் "முகமூடி" அல்லது சோடா மூடி : ஒரு புரட்சியின் தொடக்கம்

 உலகில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தை கண்டு மனம் 
கொதித்து பதிவோ ஸ்டேடஸோ டிவிட்டோ போட்டால் நீயும் எனக்கு நண்பனே..,
 - பிரபல பதிவர் ..,

        எல்லாருக்குமே சூப்பர் ஹீரோ ஆகணும்ன்னு ஒரு கனவு, லட்சியம், வெறி எல்லாம் உண்டு  ஆனால் அதற்க்கான வாய்ப்புகள் யாருக்கும் அமைவதில்லை. மனைவியிடம் செல்போனை கொடுக்கும் அரை நொடி நேரத்தில் ஆபிஸ் ஃபிகர் அனுப்பிய மெஸேஜை டெலீட் செய்வது, மேனேஜர் திரும்பும் கணப்பொழுதில் ஃபேஸ்புக்கில் வந்திருக்கும் தோழியின் சாட்க்கு பதில் சொல்வது என சிறு சிறு சாகசங்களோடு சூப்பர் ஹீரோ கனவு நீர்த்துவிடுகிறது. நாம தான் சூப்பர் ஹீரோ ஆக முடியல சூப்பர் ஹூரோ படம் பார்த்தாவது அந்த வெறிய தீத்துக்கலாம்ன்னு பாத்தா அதுவும் முழு திருப்தி கொடுக்கல.  இது வரைக்கும் உள்ள எல்லா சூப்பர் ஹீரோக்களும் நியூ யார்க் , வாஷிங்டென் மாதிரி ஊர தான் காப்பாத்துறாங்க நம்ம சென்னை , மதுரை பக்கம் எட்டி கூட பாக்க மாட்டானுங்க அட அத கூட பொறுத்துக்கலாம் ஆனா அவுனுங்க டாவடிக்கிற பொண்ணுங்ககெல்லாம் ஆண்டியாவே இருக்காங்க என்ன கொடுமைடா !!!. இப்படி ஒரு சூப்பர் ஹீரோவுக்கு கூட வெள்ளையனை பார்த்து ஏங்குவது தமிழனை பிடித்த சாபமன்றி வேறொன்றுமில்லை.

         636 பேரை தனியா நின்னு சாமாளிக்கிற நம்ம ஹீரோல்லாம் என்ன சாதாவா சூப்பர் ஹீரோ இல்லையான்னு சில விஷமிகள் கேள்வி எழுப்பலாம். தமிழன் முன்னேறுவதில் எரிச்சலடையும் எத்தர்களின் முகமூடி விரைவில் கிழியும் என்பதை மனதில் நிறுத்தி அவர்கள் சொல்வதற்க்கு செவிமடுக்காமல் மேற்கொண்டு படிக்கவும். தமிழனின் இன்னலை உணர்ந்து சென்னையை காப்பற்ற, தாமிரபரணியை உறைய வைக்க, இருபது வயது ஃபிகரை டாவடிக்க நமக்கே நமக்கென ஒரு சூப்பர் ஹீரோவை உருவாக்க வேண்டும் என நினைப்பவர்கள் பதிவின் ஆரம்ப வரிகளை படித்துவிட்டு தொடரவும். சூப்பர் ஹீரோ படமெடுப்பது ஒண்ணும் அத்தனை சுலபமான வேலை கிடையாது பல தகுடுதனங்கள் செய்ய வேண்டி உள்ளது. முதலில் போஸ்டர் தயாரிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் மற்ற ஈரவெங்காயங்களை பின்னால் உரிக்கலாம்.

         முதலில் ஒரு படத்தை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். உதாரணமாக உங்களுக்கு பேட்மேன் ரொம்ப பிடித்து இருந்தால் அவரையே வைச்சுக்கலாம் ஆனால் அப்படியே பயன்படுத்தினால் ஹாலிவூட்காரன் கண்டுபிடிச்சான்னா டவுசர கழட்டிருவான் சோ யூ மஸ்ட் பீ வெரி கேர்ஃபுல் இன் தீஸ் ஸுட்டிவேஷன்ஸ் அதாவது சூதானமா இருக்கனும் மாமே.., அது நாமே புதுசா கண்டுபிடிச்ச சூப்பர் ஹீரோன்னு டகில் விடுற அளவுக்கு மாற்றங்கள் செய்ய வேண்டும் அதுக்காக முளைய ஓவரா கசக்க வேண்டியதெல்லாம் இல்ல உத்து பாத்து யாராவது கண்டுபிடிச்சிட்டாலும் பேசி சமாளிக்க தெரியனும் அது தான் ரொம்ப முக்கியம் . கறுப்பு கலர்ல சட்டை போட்டா காத்து கறுப்பு எதாவது அடிக்கும்ன்னு சொல்லி பேட்மேன் காஸ்ட்யூம் மொத்ததையும் ஊதா கலருக்கும் மாத்தனும். அதுக்கப்புறம் பேட்மேனின் தலைக்கு மேல் கொம்பு போலிருக்கும் காதுகள் எதுக்கு தேவையில்லாம இது போல ஹீரோக்களை உருவாக்கும் நமக்கு ஏற்க்கனவே தலைக்கு மேல் கொம்பு உள்ளதால் அந்த கொம்புகளை வெட்டி வீசவும் அவ்வளவு தான் சூப்பர் ஹீரோ தயார்.

     அடுத்து போஸ்டர் தான். புது சூப்பர் ஹீரோவுக்கு பேட்மேனை தேர்ந்தெடுத்திருந்தால் போஸ்ட்ருக்கும் அதையே தேர்ந்தேடுப்பது தான் புத்திசாலிதனம் சந்தேகமிருந்தால் பிரபல பதிவர்களிடம் விசாரித்து கொள்ளவும்.

       இது தான் நீங்கள் தேர்தெடுத்த ஒரிஜினல் போஸ்டர் என்றால் பின்வரும் மாற்றங்களை வரிசையாக செய்யவும்..,

1) போன பத்தியில் சொன்னது போல் பேட்மேனின் உடையின் கலரையும் தலையில் உள்ள கொம்பு காதையும் நீக்கி விடவும்..,

2) இடதுபுறமாக பார்த்தபடி இருக்கும் ஹீரோவை அபவ்டர்ன் சொல்லி வலதுபுறமாக திருப்பவும்..,

3) மஞ்சள் கலரில் இருக்கும் பேக்கிரவுண்ட் வானத்தையும் ஊதா கலருக்கு மாற்றி கொள்ளவும்..,

4)  பேட்மேனுக்கு கீழ் இருக்கும் வவ்வால்களை துரத்தி விடவும்..,

5) ஹீரோவின் முகத்திற்க்கு ஜூம் போகவும்..,

6) ஒரிஜினல் படத்தின் பெயரை அழித்து விட்டு உங்கள் படத்தின் பெயரையும் அந்த இயக்குநர் பேரை அழித்துவிட்டு உங்கள் பெயரையும் எழுதி கொள்ளவும்..,

அவ்வளவு தான் முடிந்தது உங்களுக்கான சூப்பர் ஹீரோ கிடைத்து விட்டார் :))


எச்சரிக்கை : இது போஸ்டர் உருவாக்குவது எப்படி என்பதை விளக்கும் டெக்னிக்கல் பதிவு மட்டுமே நீங்களாக எதாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு கம்பேனி பொறுப்பாகாது..,

Courtesy :  சமீபத்தில் திரு,மிஷ்கின் அவர்கள் கொடுத்த பேட்டி ஒன்றில் இருந்து பதிவின் தலைப்பு எடுத்தாளப்பட்டுள்ளது.
                  
தேவைப்பட்டால் தொடரும்...,
      

Post Comment


Follow Us in Facebook

24 Responses so far.

  1. போஸ்டர் சுட்டாக்கூட தாங்கிக்கலாம். ஆனா கதையையே சுட்டிருந்தா என்னா பண்றது...

    உங்க சூப்பர்ஹீரோ சாகசங்களும் லேசுபட்ட விடயங்களல்ல. யு கன்டினியு :)

  2. பாவம் பாஸ் மிஷ்கின்...படம் வரதுக்கு முன்னாடியே வெறும் போஸ்டரை வச்சே செம கும்மு வாங்குறாரு..படம் வந்தா ரொம்பவே கஷ்ட பட போறாரு....
    அது யாருங்க "பிரபல பதிவர்"....????

  3. அதகளம் ஆரம்பம்..........

  4. செம்ம technic பதிவு இனி ஹாலிவுட் முழுசும் நம்ம மிஸ்கின் அவர் மூடி படத்தை பற்றி தான் பேச போறாங்க...இப்படி எல்லோரும் மிஸ்கின் பற்றி பேசி அவர் ஹாலிவுட்கே போய்விட்டால் நம்ம கோலிவுட் நிலைமை என்ன ஆகும்...

  5. டுஷ்கின் says:

    கொய்யால எவன்டா அது? அவனவன் வேர்வை தள்ள கஷ்டப்பட்டு ஒரு வருஷம் டிவிடியையே பார்த்து கதையை சுட்டு படம் எடுத்தா இந்த இண்டர்நெட்டுல எழுதுறவனுங்க இஷ்டத்துக்கு கிளிக்கிரானுங்க. இப்புடித்தான் மக்குஜிரோ படத்தை நொந்தலாலான்னு எடுத்தேன். ஒரு பய பார்க்க வரல. நானும்தான் ஒவ்வொரு ஆடியோ ரிலீஸ்லயும் போயி சம்மந்தா சம்மந்தமில்லாம இந்த மாதிரியே எத்தனை நாள்டா பொலம்புறது? செருப்பாலயே அடிப்பேன் ராஸ்கல். இன்டர்போல் கம்ப்ளேய்ன்ட் குடுக்க போறேன். போங்கடா எல்லாரும் போயி வழக்கு எண் பார்த்து அழுங்கடா. . ஆனா ஒண்ணு. முகமூடி படம் மாதிரி இன்னொரு படம் இன்னும் 20 வருஷத்துக்கு வராது. ஏன்னா இதுமாதிரி ஆயிரம் படம் ஆல்ரெடி வந்திருச்சி (அசிஸ்டென்ட் - கூலிங் கிளாஸ் துடைச்சி வெய்யி. அப்புடியே அந்த எஸ்கிமோ படத்தை டிவிடி வாங்கினியாடா?)

  6. vijas says:

    ஒரே ஒரு படம் எடு அப்புறம் இந்த மாதிரி கட்டுரை எல்லாம் எழுது .... மூன்றாம் தரமாக எதையும் யோசிக்காதே......

  7. Unknown says:

    அட...தமிழ்பட போஸ்டர் டிசைனை ஒரு பதிவில் சொல்லிபுட்டிங்களே..!இனி நானும் ரவுடிதான் ஜெயிலுக்கு போறேன்...ஜெயிலுக்கு போறேன்..

  8. Unknown says:

    பிரதமரு ஒரு வெட்டிய்யா
    ஒரே ஒரு தடவ பிர்ரதம்ரு ஆகிப்பாரு. அப்புறம் இந்த மாதிரி சொல்லு. நாலாந்தரமா யோசிக்காதே

    எங்கவீட்ல கரண்ட் இல்ல
    ஒரே ஒரு தடவ எலெக்ட்ரீஷியன் ஆகு. அப்பால பேசு

    எனக்கு தலவலி
    ஒரே தபா டாக்குடர்ரு ஆகு. அப்புறம்தான் பேசணும்

    எனக்கு ரெண்டு நாளா கக்கா வரல
    ஒரே ஒரு தடவ. . . .ம்ச். . சரி வேணாம். நிறுத்திக்கிறேன்

  9. Anonymous says:

    Rajesh! did you write this?

  10. 4) பேட்மேனுக்கு கீழ் இருக்கும் வவ்வால்களை துரத்தி விடவும்..,

    சூப்பர் மேட்டர் பா...

  11. solla onnum illa, unn nakkal romba pidichrikku

  12. @ஹாலிவுட்ரசிகன்
    தேங்க்ஸ் நண்பா..., படம் சுட்டுட்டு நானே யோசிச்சேன்னு சொல்லுவார் கவலைப்படாதிங்க..,

    @ராஜ்
    டெய்லி போஸ்ட் போடுவாங்க.., தினமும் ஸ்டேடஸ் போடுவாங்க.., அவங்க தான் பீனா பானா..,

    @Ganesan
    தேங்க்ஸ் பாஸ்..,

    @Vijayakumar
    :) க்கு நன்றி..,

    @chinna malai
    நம்ம நிலமைய விடுங்க ஹாலிவூட் நிலமைய யோசிச்சு பாருங்க :)

  13. @டுஷ்கின்
    அய்யா.., நீங்க தான் தமிழ்நாட்டின் குரசேவா, பெர்க்மேன், எல்லாமே.., யாரவன் உங்கள பத்தி தப்பா பேசுறது ...,

    @Karthik Somalinga
    இல்ல முகமூடி begins..,

    @RAJA
    Thanks Sir..,

    @jegan
    Thanks na :)

  14. @vijas
    என்னிக்காவது ஓட்டல்ல சாபாடு நல்லா இல்லன்னு சொல்லும் போது சர்வர் கழுத்துல துண்டப்போட்டு சமயக்கட்டுக்கு இழுத்துட்டு போய் சமைக்க சொன்னா எப்புடி லூசு தனமா இருக்குமோ அப்புடி இருக்குது நீங்க சொல்றது.., அப்புறம் கருத்துக்கு நன்றி..,

    @வீடு சுரேஸ்குமார்
    நன்றி நண்பா...,

    @Rajesh
    தேங்க்ஸ் ஃபார் தி சப்போர்ட் அப்புறம் கூல் டவுன் பாஸ் :))

  15. @சாமக்கோடங்கி
    நன்றி நண்பா..,

    @sivasubramanian
    Thanks Boss :)

  16. Anonymous says:

    அபாரம். உங்கள் மொழிநடையை ரொம்பவே ரசித்தேன்.

  17. Anonymous says:

    Very good... slap in the face to those who think they revolutionize cinema in the name of reality

  18. Anonymous says:

    சாரு கிட்ட பேரு வாங்குனா கியர் மேல ஏருமைய்யா.. ஹிட்டு ரேட்டும் மேல போகுமைய்யா.. யாரு விட்ட சாபமிதோ.. அப்புறம் வேட்டி கூட ஈரமைய்யா, வேட்டி கூட ஈரமையா.. சோறு போட்டு சொந்தம் சொல்லி, வீடு கட்ட விட்டுடுவார், பேரு மட்டும் பஞ்சர் ஆனா, வேரும் பட்டும் போயிவிடும், நம்ம வேரும் பட்டு போயே விடும்.. ஆ இரங்கல் சொல்லவில்லை.. ஆயிரங்கள் சொல்லிடலாம், மலாவி மாயாவி என்றும், நரசிம்ம பேராவி என்றும், sufi பேரில் சில பல உண்டு.. நித்தியத்தில் சத்தியமென்றும், இசை பேரில் பல பல உண்டு , இஜ்ஜகமே டைநோசிய சட்ஜகமென்றும்.. சங்கதிகள் சங்கத்தில் வைக்க சாத்தியங்கள் நிரம்ப உண்டு, தண்ட நக்க தண்டு என்று.

  19. super.........continue.......

Leave a Reply


எதுனா சொல்லனும்ன்னு தோணுச்சின்னா சொல்லிட்டு போங்க...