The Dark Kight Rises - எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா கிரிஸ்டோபர் நோலன் !!

         ஃபேஸ்புக்கிலோ பதிவுலகிலோ எங்கு திரும்பினாலும் எங்கும் பேட்மேன் பற்றிய பேச்சு தான். பேட்மேன் காமிக்ஸ் குறித்தோ, கேரக்டர்கள் குறித்தோ, பேட்மேனின் சைக்காலஜி குறித்தோ, முந்தைய படங்கள் குறித்தோ ப்ளாக் வைத்திருக்கும் அனைவரும் எழுதி தீர்க்கின்றனர். ப்ளாக் இல்லாதவர்கள் தங்கள் Profile Picture ஆகவும் Cover Photo ஆகவும் பேட்மேனையும் கிரிஸ்டோஃபர் நோலனையும் வைத்து ஹைப் ஏற்றுகின்றனர். இந்த அளவுக்கு வேறு எந்த ஆங்கில படத்திற்க்காகவும் தமிழ் இணைய உலகிம் தீப்பற்றி எரிந்ததாக நினைவில்லை. நம்ம ஊர்ல தான் இப்புடின்னா அமெரிக்கால இன்னும் ஓவரா போறாங்க படம் நல்லா இல்லன்னு விமர்சனம் எழுதுன ஒரு வெப்சைட் சர்வரையே ரசிகர்கள் டவுன் பண்ணிடாங்களாம். நெகடிவ் விமர்சனங்கள் வந்தால் ரசிகர்கள் கொலைவெறியாவதை கண்டு Rotten Tomatoes விமர்சன பகுதியையே  படம் வரும் வரை மூடிவிட்டது. நேற்றிரவு IMDB தளத்தில் 9.6 மதிப்பெண்கள் இருந்தது இன்னிக்கு பாத்தா மொத்தம் 5 ரேட்டிங் தேவைன்னு போர்டு மாட்டி இருக்காங்க ஆனா 52 பேர் விமர்சனம் எழுதி இருக்காங்க :))) .


        எல்லாரும் எழுதும் போது நானும் எழுத வேன்டுமா என யோசித்து கொண்டிருக்கும் போது என்னுடைய வாசகர் கிரிஸ்டோபர் நோலன் டிவிட்டரில் போன் செய்து எழுத சொன்னதால் மட்டுமே இந்த உலக மகா பதிவை எழுதுகிறேன் என்பதை மனதில் நிறுத்தி தொடர்ந்து படிக்கவும்  :))). படத்துக்கு இந்த அளவுக்கு ஹைப் ஏற முக்கியமான மூன்று காரணங்கள் கிரிஸ்டோபர் நோலன்,  ஜோக்கராக Heath Ledger மற்றும் மார்கெட்டிங்.

        நோலன் ஒரு மோசமான படமென்ன சுமாரான படம் கூட இன்னும் எடுக்காதவர். படம் பார்க்கும் ரசிகனின் முளைக்கு தொடர்ச்சியாய் வேலை கொடுக்கும் மிக சிறந்த திரைக்கதை ஆசிரியர். மிக பெரிய ரசிக கூட்டத்தை சம்பாதித்து வைத்து இருப்பவர் இந்த படத்திற்க்கு மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் இவரின் பெயரே ஏதோ மந்திரம் போல ரசிகர்களை தன் வசம் இழுக்க போகிறது. இந்த படத்தை மட்டும் இவரை தவிர வேறு யாரேனும் இயக்கி இருந்தால் யாரும் இப்படி கண்ணில் விளக்கெண்ணை விட்டுகொண்டு எதிர்ப்பார்க்கமாட்டார்கள்.


       அடுத்ததாக ஜோக்கர்.., என்ன பெர்ஃபாமென்ஸ்டா அது !!. நான் டிம் பர்டனின் பேட் மேன் இன்னும் பார்க்கவில்லை ஆனாலும் ஆளானப்பட்ட ஜாக் நிக்கல்ஸனால் கூட இந்த மாதிரி ஒரு வெறிதனமான நடிப்பை கொடுத்திருக்க முடியாது. The Dark Knight வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்னமும் பலரும் ஃபேஸ்புக்கிலும், லேப்டாப்களிலும், மொபைலிலும் வால்பேப்பராகவும் ப்ரொஃபைல் பிக்சராகவும் வைத்துள்ளனர். சினிமா வரலாற்றின் மிக சிறப்பாக நடிக்கப்பட்ட கதாபாத்திரங்களை பட்டியலிட்டால் ஜோக்கராய் வாழ்ந்த Heath Ledger-ஐ யாராலும் மிஸ் செய்யமுடியாது.

      
     கடைசியாக வார்னர் பிரதர்ஸின் வைரல் மார்கெட்டிங்.., படம் தொடங்கிய நாள் முதலே உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் எதிப்பார்க்க தொடங்கிவிட்டாலும் ஊரில் உள்ள அனைவருக்கும் பேட்மேன் ஜூரம் வருமளவிற்க்கு ஹைப் ஏற்றிவிட்டது என்னவோ இவர்களின் மார்கெடிங் தான். ஆரம்பத்தில் ஒரு சின்ன டீசர் அப்புறம் சின்ன இடைவெளிக்கு பிறகு ஒரு டிரைலர் அதன் பிறகு மற்றுமொரு டிரைலர் என எதிர்பார்ப்புகளை எகிற செய்தது அதுவும் டிரைலர் என்றால் ஆக்சன் காட்சிகளின் தொகுப்பாக இல்லாமல் சிறு சிறு கேள்விகள் எழுமாறு செய்து ரசிகர்களிடையே விவாதங்களை கிளப்பிவிட்டது முக்கியமாக பேட்மேன் இறுதியில் இறந்துவிடுவாரா இல்லையா என்ற விவாதம். ட்ரைலர் குறித்த கருந்தேளின் விரிவான அலசலை படிக்க இங்கே கிளிக்கவும். இந்த டிரைலர்களோடு Nokia, Cadburys என பல விளம்பரங்களிலும் படத்துக்கான விளம்பரமும் சேர்ந்தே வருகிறது அதிலும் Nokia விளம்பரம் செம..,

        நோலன் இந்த படத்தில் The Dark Knight படத்தை மிஞ்ச வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாகும் ஆனால் Dark Knight-ல் தொட்ட உச்சத்தை இதில் தொட்டாலே எல்லோரும் தலையில் வைத்து கொண்டாடுவார்கள் எனபது உறுதி. இரண்டு படங்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் படத்தின் வில்லன்கள் ஜோக்கரின் மிகப்பெரிய ஆளுமையை பேனால் ஈடுசெய்யமுடியுமா என்பதே இப்போது 250 மில்லியன் டாலர் கேள்வி. எப்பவும் பரபரப்பாக இயங்கும், மக்களை விளையாட்டு பொம்மைகளாக நினைக்கும், தனக்கு சமமான போட்டியை எதிர்பார்க்கும் ஜீனியஸான ஜோக்கர் ஏற்படுத்தும் மனரீதியான நெருக்கடிகளும் அதை பேட்மேன் எதிர்கொள்ளும் விதமுமே டார்க் நைட்டின் பரபரப்பான திரைக்கதைக்கு காரணமாகும். இத்தகைய பரபரப்பை மிருகபலம் கொண்ட பேனை வைத்து உருவாக்க எத்தகைய காட்சிகளை நோலன் உருவாக்கி இருக்கிறார் என்பது படம் பார்த்தால் மட்டுமே தெரியும். இதில் கொஞ்சம் பிசகி இருந்தாலும் ரசிகர்களை திருப்திபடுத்துவது பிரச்சனையாகி விடும்.

          படத்தின் மீதிருக்கும் அதீத எதிர்பார்ப்பு வசூலுக்கு எந்த அளவுக்கு துணை செய்கிறது அந்த அளவுக்கு படம் திருப்தி தராமல் போக வாய்ப்புள்ளது. ஏற்கனவே ரசிகர்கள் இந்த வருடத்தின் சிறந்த படம் இது தான் என்றும் வாழ்கையிலே இப்படி ஒரு இனி வரபோவதில்லை என்றும் பேச தொடங்கிவிட்டனர். அவதாரை முந்த போகிறது Avengers-ஐ தான்ண்ட போகிறது என்று  ஃபோட்டோ எல்லாம் ஃபேஸ்புக்கில் போட ஆரம்பித்துவிட்டார்கள். இவ்வளவு எதிர்பார்ப்புடன் வரும் ரசிகர்களை திருப்திபடுத்துவது எந்த இயக்குநருக்கும் நோலனுக்கு கூட சுலபமானதல்ல.

            ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டாலும் கூட படம் வசூலில் சாதனை செய்யதான் போகிறது ஆனால் நோலனிடம் எதிர்பார்ப்பது வெறும் வசூல் சாதனையல்ல..., சனிக்கிழமை படம் பார்க்க போகிறேன் அத்தனை எதிர்பார்ப்புகளையும் நோலன் பூர்த்தி செய்வார் என நம்புவோமாக !!

Post Comment


Follow Us in Facebook

7 Responses so far.

  1. sundar says:

    ஹீத் லெட்ஜரோட பேய்த்தனமா performance இன்னும் கண்ணுலயே இருக்கு Bane அதுக்க சமமா இல்லாட்டியும் பாதியாவது செஞ்சா நல்லா இருக்கும் keeping my fingers crossed

  2. கண்டிப்பா நோலன் ஏமாத்த மாட்டார் தல....அவருக்கு ஏமாத்த தெரியாது... :)
    Dark Knight வந்து நேத்துதோட சரியா நாளு வருஷம் ஆச்சு...அந்த படம் Life Time experience....
    நான் நாளைக்கு காலை 10 மணி ஷோ போறேன்.. IMAX அடுத்த வாரம் தான் டிக்கெட் கிடைச்சது...
    IMDBயில பார்த்தேன்..இன்னும் ரேட்டிங் வரல..9.6 ல ஆரம்பிச்சா..கண்டிப்பா 9.0 ல வந்து நிக்கும்...கண்டிப்பா முத முனு படத்துல வந்துரும்......
    //என்னுடைய வாசகர் கிரிஸ்டோபர் நோலன் டிவிட்டரில் போன் செய்து எழுத சொன்னதால் மட்டுமே இந்த உலக மகா பதிவை எழுதுகிறேன்///
    செம செம.......இப்ப தான் எனக்கு இந்த பிரபல பதிவர் பத்தி எல்லாம் எனக்கு புரியுது......ரொம்ப டுயூப் லைட் மாதிரி இருந்தது இருக்கேன்.. :)

  3. நாளையுடன் எந்த டார்க் நைட் ரைஸஸ் விமர்சனமும் படிக்கப் போவதில்லை. வாசிச்சுட்டா அப்புறம் படம் பார்க்கும் போது அந்த விமர்சனத்தின் கண்ணோட்டத்திலேயே நம் பார்வையும் அமைந்துவிடும் என்ற பயம் தான். படம் பார்த்துட்டு வேணும்னா மொத்தமா கமெண்ட் போட்டுடறேன். :)

  4. Unknown says:

    படத்தில் ஹீரோவை விட Heath Ledger எல்லாரையும் கவர்ந்தார் Pank கொள்ளையடிக்கும் போது ஒவ்வொருவராக வீழ்த்தும் காட்சி பிரமாதம் போங்க....

  5. என்ன இப்படி சொல்லுரிங்க டார்க் நைட் இந்த படம் கண்டிப்பா முந்தும்...படம் யாரையும் ஏமாற்றாது...ஜோகர் விட bane புத்திசாலியா தெரிகிறார்....நாளைக்கு தான் படம் பார்க்க போறேன்...

  6. Unknown says:

    தி டார்க் K'நைட் ஜோக்கர் கதபாதிரத்திருக்கு சரி சமமானதாக Bane பாத்திரமும் கண்டிப்பாக இருக்கும்.
    இங்க உகண்டாவில் எப்படியும் இரண்டு வாரத்திற்கு பிறகு தான் ரிலீஸ் ஆகும்......

  7. Anonymous says:

    எதுனா சொல்லனும்ன்னு தோணுச்சின்னா சொல்லிட்டு போங்க...
    // dei raja nari innikku dark knight paarka poren ore oru vaatti oola vidra raaja ஊ ஊஊ ஊ :P

Leave a Reply


எதுனா சொல்லனும்ன்னு தோணுச்சின்னா சொல்லிட்டு போங்க...