நான் ஈ மற்றும் The Immortals of Meluha...,

நான் ஈ:


        பொங்கலப்போ வந்து ஹேப்பி நியூ இயர் சொல்லுற மாதிரி இப்போ என்னடா நான் ஈ பத்தின்னு கேட்டிங்கன்னா ஆன்ஸ்ர் இஸ் வெரி சிம்பிள் இப்போ தான் நா பாத்தேன் :) :).  எல்லா ஃபேண்டஸி கதைகளும் பார்ப்பவனை  எல்லா நொடிகளும் ஏமாற்ற வேண்டும் அதே வேளையில் ஒரு கணம் கூட பார்வையாளன் தான் ஏமாற்றப்படுகிறோன் என்பதை உணர விடவும் கூடாது. இதில் கொஞ்சம் பிசகினாலும் படம் காமெடி ஆகிவிடும் (Remember ஏழாம் அறிவு). இதை மிக சரியாக பின்பற்றி தேவையில்லாம் எந்தவொரு காட்சியையோ பாடலையோ நுழைக்காமல் காட்ட நினைத்த விஷயத்தை ஒரு நிமிஷம் கூட போரடிக்காமல் எடுத்து இருக்கிறார்கள்.

.

        ஈ சண்டை போடுமான்னு யோசிக்க விடாமல் காட்சிகள் நகர்ந்தால் அதற்கு இணையாக சி.ஜி செய்யப்பட்டுள்ளது. ஈ வெள்ளத்தில் இருந்து தப்பிக்கும் காட்சி தவிர அனைத்து காட்சிகளிலும் "நீட்" ஆக இருக்கிறது சி.ஜி வேலைகள். திரைக்கதை மற்றும் சி.ஜிக்கு அடுத்த படி படத்தின் மிக பெரிய பலம் வில்லனாக நடித்துள்ள சுதீப் பலவகையான ரியாக்ஸன்கள் கொடுத்து பயங்கரமாக இம்ப்ரஸ் செய்கிறார். தமிழில் வெளிவந்த So Called பிரமாண்ட படங்களின் பட்ஜெட்டில் பாதிக்கும் குறைவான செலவில் தாயாரிக்கப்பட்ட படம் தரத்தில் அந்த படங்களை விட பல மடங்கு உயர்ந்து நிற்கிறது.  ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்ய போவதாக சொல்லி இருக்கிறார்கள் எதில் வந்தாலும் வெற்றி பெறுவதற்க்கான சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கின்றது. நான் பார்த்தவரையில் இந்திய அளவில் இத்தனை சிறப்பாக கையாளப்பட்ட ஃபேண்டஸி கதையை பார்த்ததாக நியாபகம் இல்லை.

நான் ஈ - நீண்ட நாட்களுக்கு பிறகு திருப்தி தரும் பொழுதுபோக்கு திரைப்படம்.


The Immortals of Meluha :
           
                  5 லட்சம் புத்தகங்கள், விற்றுவிட்டனர், சேதன் பகத்தை பின்னுக்கு தள்ளிவிட்டார்,  புராண கதைகளின் மிக புத்திசாலிதனமான வடிவம், இந்தியாவின் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் என்றெல்லாம் அதீத விளம்பரங்களை கேட்டு ரொம்பவே எதிர்பார்ப்போடு தான் The Shiva Trilogy-ன் முதல் புத்தகமான இதை வாங்கி படிக்க தொடங்கினேன்.  சாதாரண மனிதனாக இருந்த சிவன் எப்படி கடவுள்களின் கடவுளாக (மகாதேவ்) மாறுகிறாரென்பது தான் Shiva Trilogy-ன் கதை சுருக்கம்.  இந்த மூன்றில் இரண்டு வெளியாகிவிட்டது கடைசி புத்தகம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகிறது.


             கைலாச மலையில் வாழும் சிறு மலைவாழ் குழுவுக்கு தலைவனாக இருக்கும் சிவாவுக்கு சூரிய வம்சத்தவர்கள் ஆட்சி செய்யும் மெஹூலாவிற்க்கு வருமாறு நந்தி மூலமாக அழைப்பு வருகிறது. கைலாச மலையில் உள்ள பிரச்சனைகள் காரணமாக அங்கே தன் மக்களுடன் குடிபெயர்கிறார். மருத்துவம், கட்டிட கலை,  நெசவு என பல துறைகளிலும் உச்சத்தை தொட்டு இருக்கும் அங்கு அனைவரும் சட்டத்தை மதித்து நடப்பதால் அது ஒரு சொர்க்கபுரியாக இருக்கிறது. அங்கு 200 வயதானவர்கள் கூட மிக இளமையுடன் தெரியுமளவுக்கு மருத்துவ வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள். சிவாவின் நீல கழுத்தை பார்க்கும் வீரர்கள் இவர் தான் தாங்கள் தேடிவரும் நீலகண்ட் என்றும் அவரால் தான் தங்கள் பிரச்சனையை தீர்க்க முடியும் என்றும், அவருக்காக பல நூற்றாண்டுகளாக காத்திருந்ததாகவும் கூறுகின்றனர். சொர்க்கபுரியாக திகழும் அவர்களுக்கு என்ன பிரச்சனை , சிவன் எப்படி அவற்றில் இருந்து மக்களை காத்தார் என்பதையெல்லாம் நாவல் படித்து தெரிந்து கொள்ளவும்..,

                 நாவலின் ஆசிரியர் அமிஷ் திரிபாதி IIM-ல படித்து இன்வெஸ்ட்மெண்ட் பேங்கராக வேலை பார்த்தவர் சேதன் பகத் போலவே. சேதன் பகத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு IIT மற்றும் IIM ல் படித்தவர்கள், படிப்பவர்கள் எல்லாம் ஏதோ செமஸ்டர் பேப்பர் போல ஒரு நாவலாவது எழுதி விடுகின்றனர் சொல்லி வைத்தாற்ப்போல் அனைத்தும் காதல் கதைகள். அவற்றில் ஏதேனும் ஒன்று உங்கள் கையில் கிடைத்தால் தயவு செய்து படித்து விடாதிர்கள் அவை எல்லாம் படைப்பாளி இறந்துவிடுகிறான் என்ற பின்நவீனத்துவ விதியை பொய்யாக்கி படிப்பவனையே கொல்லும் வல்லமை பெற்றவை. இந்த புத்தகம் அது போல் இல்லாமல் தொடர்ச்சியாக படிக்க வைக்கிறது என்பதே நமக்கு ஆறுதலாக உள்ளது.


            நாவலின் முக்கிய ப்ளஸ் கதை சொல்லப்பட்டிருக்கும் வேகம் பிற்காலத்தில் பாலிவூட் படமாக்கும் எண்ணத்தை மனதில் வைத்தே எழுதி இருப்பார் போல. இந்து மத புராணங்களில் உள்ள கதாபாத்திரங்கள் எல்லாம் மனிதர்களாக அவர்களின் சக்தியாக சொல்லப்பட்ட விஷயங்கள் கதாபாத்திரங்களாகவும் இருப்பது படிப்பதற்க்கு நன்றாக இருக்கிறது. ரொம்பவே எளிமையான ஆங்கிலம் சிலருக்கு நிறையாகவும் சிலருக்கு குறையாகவும் தோன்றலாம்.
           
          சமகால மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் உரையாடல்களும் அப்படியே இருப்பது பல நேரங்களில் கடுப்பை கிளப்புகிறது. பல்லாயிரகணக்கான வருடங்களுக்கு முந்தைய கதையில் Damn it, Shit, Okay, Hello, "What the Hell" போன்ற வசனங்கள் நிரம்பி இருக்கின்றன. விதவையான சதியை  (பார்வதி) சிவன் திருமணம் செய்து கொள்வதை போல் கதை சொல்லப்படுகிறது அதுவும் எந்த ஆட்சேபனையும் இன்றி ஏற்றுகொள்ளப்படுகிறது. பண்டைய இந்தியாவில் விதவை திருமணம் வழக்கத்தில் இருந்த்தாக கேள்விப்பட்டதில்லை அதுவும் பார்வதியின் இரண்டாம் கணவர் சிவன் என்பதையும் எங்கும் கேள்விப்பட்டதில்லை. இன்றைய சாதிப்பிரிவுகளுக்கு அடிப்படையான வர்ணாசிரம பிரிவுகள் பிறப்பின் அடிப்படையில் இல்லாமல் திறமையின் அடிப்படையில் இருப்பதாக சொல்லப்படுவது ஏற்கக்கூடியதாய் இல்லை. மொத்த நாவலுமே கிளஷேக்கள் நிறைந்த்தாய் இருக்கிறது கொஞ்சம் படங்கள் பார்த்தவராகவோ புத்தகங்கள் படித்தவராகவோ இருந்தால் நாவலில் வரும் எதிர்பாராத திருப்பங்களை கூட சுலபமாக கண்டுபிடித்துவிடலாம்.
          
         மொத்ததில் முதல் பத்தியில் சொன்ன பில்டப்புகளை நிறைவேற்றியதா என்றால் இல்லை என்பதே பதிலாகும் ஆனாலும் ஒரு ஹிந்தி படம் பார்த்த உணர்வை தருகிறது நாவல் சீக்கிரத்திலே படமாக வரும் வாய்ப்பும் அதிகம் :).

Post Comment


Follow Us in Facebook

7 Responses so far.

 1. பாஸ்,
  நான் ஈ ஆந்திராவில் ரொம்ப நல்லா ஓடிட்டு இருக்கு பாஸ்....நான் இன்னும் படம் பார்க்க வில்லை...
  அப்புறம் The Immortals of Meluha புக் இன்னும் சிவசேனா, இந்து முன்னணி மக்கள் பார்க்கல போல்....பார்த்து இருந்தா அட்லீஸ்ட் ஒரு போராட்டம் ஆவது பண்ணி இருப்பாங்க..

 2. JZ says:

  'நான் ஈ' பார்த்துட்டேன்.. சூப்பர்!
  The Immortals of Meluha - இப்பதான் கேள்விப்படுறேன்.. ரொம்ப அழகா அறிமுகப்படுத்தி வைச்சிருக்கீங்க.. ஆனா நான் கதையை தெரிஞ்சுக்கறதுக்கு பாலிவுட் படமா வந்தாதான் உண்டு!

  அப்புறம் ராஜ் சொன்ன மாதிரி இந்த நேரத்துக்கு பல சர்ச்சைகள் எழுந்திருக்க வேண்டுமே!!

 3. நான் நேத்து தான் ”நான் ஈ” பாத்தேன் - சூப்பர் படம் - ரொம்பவே ரசிச்சேன் - பல விமர்சனம் அருமை

 4. //பொங்கலப்போ வந்து ஹேப்பி நியூ இயர் சொல்லுற மாதிரி//
  ஹி ஹி .. அப்போ நாங்க படம் பார்க்கும்போது தீபாவளியாகிடும் போல. :)


  //நாவல் சீக்கிரத்திலே படமாக வரும் வாய்ப்பும் அதிகம் //
  படம் வந்து விமர்சனங்களும் நல்லாயிருந்தா பார்த்துக்கலாம். ;)

 5. நான் ஈ பாக்கணும்.

 6. @ராஜ்
  சீக்கிரம் படம் பாருங்க நல்லா இருக்கு.., இல்ல அப்புடி எதும் பிரச்சனை வந்த மாதிரி தெரியல.., எழுதுனவரும் கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் தான் ஓவர டெடிகேட் பண்ணி இருப்பார்..,

  @JZ
  அடுத்த வருஷத்துக்குள்ள படமா வந்துடும் போல இருக்கு அப்போ பாத்துகலாம்..,

  @சீனா
  நன்றி சார்..,

  @ஹாலிவுட்ரசிகன்
  அட இன்னும் பாக்கலையா சீக்கிரம் பாத்துடுங்கப்பு...,

  @உலக சினிமா ரசிகன்
  சீக்கிரம் பாருங்க சார்..,

 7. நான் ஈ. ஏற்கனவே பார்த்துட்டு என் பார்வையில் சொல்லிட்டேன் என் பதிவில். ஆனால், The Immortals of Meluha இன்னும் படிக்கவில்லை. படிச்சுட்டு சொல்றேன் இன்ட்ரஸ்டிங்கா.....போரிங்கா... என்று.....

Leave a Reply


எதுனா சொல்லனும்ன்னு தோணுச்சின்னா சொல்லிட்டு போங்க...