Elena [Russian / 2011] - எது தர்மம் ?

எது தர்மம் ?
எது தேவையோ அதுவே தர்மம். 
                                                     - சாணக்கியர்

             
மேற்கூறிய வாசகத்தை தங்களை போலவே நானும் ஆரண்யகாண்டம் திரைப்படத்தில் தான் பார்த்தேன். ஆரண்ய காண்டம் படம் வந்த சமயத்தில் அதன் மீது வைக்கப்பட்ட முக்கியமான விமர்சனம் அது எந்தவிதமான அறத்தையும் முன்வைக்கவில்லை என்பதாகும். அது மட்டுமல்லாமல் அப்படி அறத்தை போதிக்காதாத எந்த ஒரு திரைப்படமோ புத்தகமோ நிச்சயமாக கலைப்படைப்பாக முடியாது என்றும் சொல்லப்பட்டது. Elena படத்தை பார்த்த போதும் எனக்கு மேற்கூறிய வாசகமும் இந்த விமர்சனங்களும் தான் ஞாபகம் வந்தது. ஆரண்ய காண்டத்தை விட மிக மோசமான விஷயத்தை இந்த படம் முன்வைக்கிறது அதை விட முக்கியமாக அந்த விஷயத்தை நியாயப்படுத்துவதற்க்கான சிறு முயற்சி கூட செய்யவில்லை. இந்த இரண்டு படங்களுமே எனக்கு பிடித்த படங்கள் தான் ஒரு கலை படைப்பு கட்டாயமாக ஒரு அறத்தை போதிக்க வேண்டுமா என்ன.. ??


          ஒரு மரத்தில் அமர்ந்திருக்கும் பறவை அதற்கு பின்னால் இருக்கும் வீடு நமக்கு காண்பிக்கப்படுகிறது அதுவும் சலனமே இல்லாமல் ஒரு புகைப்படம் போல சில நிமிஷங்களுக்கு (கவனிக்க.. நொடிகள் அல்ல நிமிஷங்கள் ) காண்பிக்கப்படுகிறது. அதன் பின் அந்த பறவை பறக்கும் சிறு சலத்தோடு தொடங்குகிறது படம். அறுபதுகளில் இருக்கும் தம்பதிகளான விளாடிமிர் மற்றும் எலினா இருவரும் வெவ்வேறு பொருளாதார பிண்ணனிகளை சேர்ந்தவர்கள். விளாடிமிர் பெரும் பணக்காரர் அதே வேளை எலினா அவ்வளவு பொருளாதார வசதிகள் இல்லாதவர். விளாடிமர் தனக்கு நர்ஸாக வந்த எலினாவை தன்னை கவனித்து கொள்வதற்க்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

       இருவருக்கும் முந்தைய திருமணங்கள் மூலமாக ஆளுக்கு ஒரு பிள்ளை இருக்கிறார்கள். விளாடிமரின் மகள் கேத்ரினா தந்தையிடம் இருந்து பிரிந்து வாழும் , ஊர் சுற்றும் , முற்போக்கு பேசும் வழக்கமான பணக்கார பெண். எலினாவின் மகன் வேலையில்லாதவர் தன் குடும்பத்தை நடத்துவதற்க்கே சிரமப்படுகிறார். அவரது குடும்ப செலவுக்கு கூட எலினாவின் பெனஷனையே நம்பி இருக்கிறார். சரியாக பென்ஷன் வரும் நாளன்று விளாடிமரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி (அவருக்கு தெரியாமல்) மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு பென்ஷன் பணத்தை கொடுக்க போகிறார் எலினா. அப்போது அவருடைய பேரனை கல்லூரியில் சேர்க்க பணமில்லை என்றும் விளாடிமரிடம் உதவி கேட்க வேண்டும் என்றும் அவருடைய மகன் கேட்கிறார். 


        சமயம் பார்த்து விளாடிமரிடம் தன் மகனுக்கு உதவுமாறு எலினா கேட்க ஏற்கனவே கொடுத்தது போதும் இனி முடியாது என்று மறுத்து விடுகிறார். அன்றே விளாடிமருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது ஆனால் உயிர் பிழைத்து விடுகிறார். தான் உயிருடன் இருக்கும் போதே உயில் எழுத முடிவு செய்கிறார் விளாடிமர். இதுக்கும் மேல கதைய சொன்ன படம் பாக்கும் போது சுவாரசியம் சுத்தமா போய்டும் ., ஆகவே இதுக்கு மேல நீங்களே  பாத்துக்கங்க..,


     படத்தில் ரொம்ப பிடிச்ச விஷயம் அதன் ஆரம்ப காட்சி தான். ஒரு புகைப்படத்தை சில நிமிஷம் காட்டுவது போல இருக்கும் அந்த காட்சியே படத்தின் தன்மையை சொல்லிவிடுவதுடன் பார்வையாளனை அதற்கு தயார் செய்து விடுகிறது. உங்களுக்கு அந்த காட்சி பிடிக்கவில்லை என்றாலோ போர் அடித்தாலோ நிச்சயம் இது உங்களுக்கான படம் இல்லை எனவே படத்தை நிறுத்தி விட்டு வேறு ஏதேனும் உருப்படியான வேலை இருந்தால் பார்க்கலாம். அதே போல படத்தின் கடைசி காட்சியிலும் ஒரு குடும்பத்தின் வழக்கமான மாலை நேர தேநீர் உரையாடலுடன் தொடங்கும் காட்சி படம் தொடங்கிய அதே ஃப்ரேமில் முடியும் ஆனால் அவர்கள் சகஜமாக சிரித்து பேசி கொண்டிருப்பது நமக்கு எரிச்சலாக இருக்கும் படத்தின் வெற்றியும் இது தான்.



     படத்தின் திரைக்கதை தேவையில்லாமல் எதையும் சேர்க்காமல் இராணுவ ஒழுங்குடன் எழுதப்பட்டு இருக்கிறது. குறைவான அளவிலையே வசனங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதால் எல்லா வசங்களும் முக்கியத்துவம் பெற்று விடுகிறது. நிறைய விஷயங்கள் வசனமாக சொல்லப்படாமல் காட்சியின் வழியாக சொல்லப்படிகிறது. விளாடிமரும் எலினாவும் திருமணம் செய்து கொண்டாலும் வெவ்வேறு படுக்கை அறைகளையே பயன்படுத்துகின்றனர் அதிலும் விளாடிமரின் அறை நட்சத்திர ஓட்டல் போல இருக்கிறது ஆனால் எலினாவின் அறை சமையல் கட்டுக்கு பக்கத்திலையே இருக்கிறது. அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் எலினாவை ஒரு வேலைக்காரியாகவே இன்னமும் பார்க்கிறார் என்பது தெரிகிறது. அப்புறம் , மகன் வீட்டிற்கு போகும் எலினாவை விட அவர்களுக்கு அவள் கொண்டு வரும் பணமும் பொருளுமே முக்கியமாகிறது. 


       படத்தை பற்றி நெட்டில் நோண்டிய போது கிடைத்த ஒரு முக்கியமான விஷயம் , ஒரு மென்மையான குடும்ப டிராமா போல இருந்தாலும் சோசியலிஷத்தின் விழ்ச்சிக்கு பிறகான ரஷ்ய மக்களின் நிலையை பூடகமாக சொல்கிறது இந்த படம். ரஷ்யாவில் பணக்காரர்களுக்கும் ஏழைக்களுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்து விட்டதையும் உறவுகளை விட பணத்திற்க்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி விட்டனர் போன்ற விஷயங்கள் தான் படத்தின் உள்ளடக்கம் என்று இயக்குநர் Andrei Zvyagintsev கூறி உள்ளார்.

     இந்த படத்தின் இயக்குநர் Andrei Zvyagintsev -ன் முதல் படமான "The Return" படமும் சிறப்பானதாக சொல்லப்படுகிறது. ஆகவே மக்கள் அந்த படத்தையும் பார்க்குமாறு வேண்டி விரும்பி கேட்டு கொள்ளப்படுகின்றனர் :)) .


Elena : A simple family drama which can shake u for a moment.
My rating : 8.5 /10

Post Comment


Follow Us in Facebook

14 Responses so far.

  1. //ஆகவே இதுக்கு மேல நீங்களே பாத்துக்கங்க..,//

    சரிங்க. பாத்துக்கிறேன். இந்த மாதம் பேன்ட்வித் முடியப்போகிறது. சீக்கிரம் டவுன்லோட் போட்டுடலாம்.

    //உங்களுக்கு அந்த காட்சி பிடிக்கவில்லை என்றாலோ போர் அடித்தாலோ நிச்சயம் இது உங்களுக்கான படம் இல்லை எனவே படத்தை நிறுத்தி விட்டு வேறு ஏதேனும் உருப்படியான வேலை இருந்தால் பார்க்கலாம்.//

    சப்போஸ் ஓபனிங் பிடிக்காட்டி, டவுன்லோட் வேஸ்ட் ஆகிவிடுமே?

  2. ரிட்டர்ன் பார்த்தாயிற்று, இதையும் பார்த்திடுவோம்..... :-)

  3. ///ஆகவே மக்கள் அந்த படத்தையும் பார்க்குமாறு வேண்டி விரும்பி கேட்டு கொள்ளப்படுகின்றனர்//
    கண்டிப்பா பாஸ்...ரொம்ப நல்ல படம் இது. ரொம்ப ரசிச்சு பார்த்து இருக்கேங்க. என்னை பொறுத்த வரை இது உலக தரமான சினிமா..

  4. நண்பரே!
    த ரிடர்ண் படம் பார்த்திருக்கிறேன்.
    இப்படத்தின் டிவிடி கிடைத்ததும் பார்க்க வேண்டும்.

  5. @ஹாலிவுட்ரசிகன்

    அதெல்லாம் பாத்தா முடியுமா ... உங்களுக்கு மென்மையான ட்ராமாக்கள் பிடிக்கும்ன்னா இதுவும் பிடிக்கும்..,

    @Murali Kumar

    பாத்துடுங்க :))))

    @ராஜ்
    நிஜமாவே உலக தரமான சினிமா தான்..,

    @உலக சினிமா ரசிகன்
    பார்த்துட்டு சொல்லுங்க :)

  6. JZ says:

    விமர்சனம் நன்று! மெதுவா போற படங்கள்லாம் பார்க்க எனக்கு புடிக்கும்தான்..
    இருந்தாலும் இன்னும் ஒரு ரஷ்யன் படமும் பார்த்ததில்லை. ஏற்கெனவே பார்க்கனும்னு நினைச்சு மறந்த ரஷ்யன் படமெல்லாம் இப்பதான் ஞாபகம் வருது.. அப்படியே எல்லாத்தையும் ஒரே கோர்வையா பார்த்துட்டு, The Return, Elena-வையும் பார்த்துடுறேன்.
    நன்றி!

  7. @ அகல்விளக்கு

    நன்றி நண்பா.., ரொம்ப நாள் ஆச்சே எப்புடி இருக்கிங்க..

    @JZ

    பாத்துட்டு சொல்லுங்க..:)

  8. Unknown says:

    அதுஎன்னமோ விஜய் படம் பாத்துட்டு இப்பெல்லாம் ஹாலிவுட் படத்தில் சண்டை காட்சிகள் வந்தாலே கொஞ்சம் வெறுப்பா இருக்கு.. டிராமா தான் விரும்பி பாக்கிறேன்.. அதனால இதையும் பாக்கணும்..

  9. எதுக்கெடுத்தாலும் விஜயையே குத்தம் சொல்லுங்க மத்தவங்க படத்துல மட்டும் என்ன வாழுதாம்.. :) இத கண்டிப்பா பாருங்க..

  10. நல்லதொரு திரைப்படத்தைப்பற்றிய தெளிவான விமர்சனம். பகிர்வுக்கு நன்றி!

  11. @வே.சுப்ரமணியன்
    நன்றி நண்பா :)

  12. Unknown says:

    //
    படத்தில் ரொம்ப பிடிச்ச விஷயம் அதன் ஆரம்ப காட்சி தான். ஒரு புகைப்படத்தை சில நிமிஷம் காட்டுவது போல இருக்கும் அந்த காட்சியே படத்தின் தன்மையை சொல்லிவிடுவதுடன் பார்வையாளனை அதற்கு தயார் செய்து விடுகிறது. உங்களுக்கு அந்த காட்சி பிடிக்கவில்லை என்றாலோ போர் அடித்தாலோ நிச்சயம் இது உங்களுக்கான படம் இல்லை எனவே படத்தை நிறுத்தி விட்டு வேறு ஏதேனும் உருப்படியான வேலை இருந்தால் பார்க்கலாம்.//
    படத்தின் மைய ஓட்டத்தை கச்சைதமாகப் பிடித்திருக்கிறீர்கள். சிறந்த விமர்சகராக வளர என் வாழ்த்துகள்

  13. @நெஸ்டர் ஞானம் பெற்றவன்

    நன்றி நண்பா :)

Leave a Reply


எதுனா சொல்லனும்ன்னு தோணுச்சின்னா சொல்லிட்டு போங்க...