Rango [English/2011] - குட்டி கவ்பாயின் சாகசங்கள்

             
          கவ்பாய் படங்கள் என்ற உடனேயே சில விஷயங்கள் உங்கள் மனதில் தோன்றலாம் . அது Sergio Leone எடுத்த டாலர் டிரையாலஜியாவோ அல்லது க்ளின்ட் ஈஸ்ட்வூட்டாகவோ அல்லது சாட்டையும்  குதிரையுமாகவோ  அல்லது துப்பாக்கி சண்டைகளாகவோ அல்லது என அடுத்த ஆப்ஷனை யோசிப்பத்ற்க்கு முன்னால் நிற்க. இதெல்லாம் இருக்கட்டும் Clint Eastwood, John Wayne  தொடங்கி Jeff Bridges வரை நாம் பார்த்த கவ்பாய் போல் அல்லாமல் பச்சை நிறத்தில் ஒரு பல்லி இருந்தால் எப்படி இருக்கும் ?? அதுவும் ஒரு அனிமேஷன் படமா இருந்தா ??.   இப்ப்டி மாத்தி யோசிச்சதன் விளைவு தான் 'Rango'.

            என்ன தான் இதில் கவ்பாய் படத்துக்கான அம்சங்கள் நிறைய இருந்தாலும்  இது முழுமையான கவ்பாய் படமாகவோ அல்லது முழுமையாயான கவ்பாய் படங்களின் Spoof ஆகவோ இல்லாமல் இடையில் தொங்கி நிற்கிறது. இந்த படம்  ஆஸ்கர் வாங்காமல் இருந்திருந்தால் பார்த்து இருப்பேனா என்று தெரியவில்லை.., ஹம்ம்ம் எப்படியோ இந்த படம் வாங்கிடுச்சி நானும் பார்த்துட்டேன் நீங்களும் இந்த கொடுமையை படிச்சிட்டு இருக்கிங்க :)..,

          

           காரில் இருக்கும் மீன் தொட்டியின் உள்ளே நடக்கும் ஒரு குட்டி நாடகத்தோடு தொடங்குகிறது படம். அப்போது ஏற்படும் சிறுவிபத்தினால் ஒரு பாலைவனத்தின் நடுவில் சிக்கி கொள்ளும் அந்த பல்லி ஒரு ஆட்டின் (??) அமானுஷிய பேச்சுகளை நம்பி 'Dirt' என்ற ஒரு ஊரை தேடி செல்கிறது. அந்த வழியில் ஒரு பெரிய கழுகு துரத்த அதனிடமிருந்து தப்பி பிழைத்து பீன்ஸ் என்ற பெண்ணை சந்திக்கிறது. அந்த பெண்ணிடம் சில பல பிட்டுகளை போட்டு அவங்க ஊருக்கு அதாவது அந்த ஆடு சொன்ன 'Dirt'-க்கு போய்டுது.

      அந்த விபத்தில் இருந்தே ரொம்ப தாகமா இருக்கிற பல்லி ஒரு பாருக்கு போய் குடிக்க தண்ணி கேக்குது. அங்க எல்லாரும் எதோ டி.ஆர் படம் பாத்த மாதிரி சிரிக்கிறாங்க இதுனால கடுப்பான பல்லி தன்னோட பேர் 'Rango'-ன்னும் அது ஒரே புல்லட்ல ஏழு பேர கொன்னதாகவும் பீலா விடுது. அப்போ அங்க வரும் பெரிய கழுகை அதுக்கே தெரியாம ஒரே தோட்டாவுல கொன்னுடுது. அதுல இம்பிரஸ் ஆன அந்த ஊர் மேயர் ஆமை Rango-வை அந்த ஊர் செரிஃப்பா ஆக்கிடுறாரு..,

       அந்த ஊர்ல பயங்கராமன பஞ்சம் தலைவிரிச்சாடுது எந்த அளவுக்குன்னா அந்த ஊர்ல ஒரு பேங்க் இருக்கு அதுல யாரும் பணம்லாம் போட்டு வைக்க மாட்டாங்க அதுல தண்ணி மட்டும் தான் சேமிச்சு வைச்சு இருப்பாங்க அதே போல தேவைப்பட்டா கடனும் குடுப்பாங்க. தண்ணி பேங்க்ல இருப்பு ரொம்ப கம்மியா இருக்குறதால அத அப்புடி பாதுகாக்குறதுன்னு கூட்டம் போட்டு பேசுறாங்க கரெக்ட்டா அன்னைக்கு நைட் யாரோ பேங்க கொள்ளை அடிச்சடுறாங்க.., அந்த தண்ணிய யார் கொள்ளை அடிச்சான்னு எல்லாரும் கண்டுபிடிக்கிற மாதிரி ஒரு ட்விஸ்ட் வைச்சு சொல்லி முடிக்கிறாங்க..,

     படத்தோட ஸ்பெஷல் அப்புடின்னு பாத்தா அதோட அனிமேஷன் தான். ரொம்பவே கலர்ஃபுல்லான அனிமேஷன் படங்களையே அதிகம் பார்த்து இருக்கும் நமக்கு இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. படத்தில் வெப்பத்தையும் அதனால் பாதிக்கப்பட்ட மக்களையும் பகுதிகளையும் அருமையா காட்சிப்படுத்தி இருக்காங்க.., அதுனாலயே படத்தோட நம்ம ஒன்ற வைக்கிற முக்கியமான விஷயமாகிடுது.

 
    படத்துல அப்ப அப்போ இசை வாத்தியங்களோடு வரும் பறவைகள்  கதை சொல்வது , வழக்கமான கவ்பாய் காட்சிகளை கிண்டல் அடிப்பது , தண்ணிரை மீட்டு வரும் போது நடக்கும் Chase எல்லாமே செமையா இருக்கும். Rango-க்கு Jonny Depp-ன் குரல் நல்லா பொருந்தி வந்திருக்கு அதுவும் அது பீலா விடும் காட்சிகள் எல்லாம் செம Synchronization. படத்த இயக்கி இருப்பவர் Pirates of Caribbean படங்களை இயக்கிய Gore Verbinski. படத்தின் சில இடங்களின் Jack Sparrow-ன் சாயல் Rango-விற்கு இருப்பதைக வனிக்கலாம்.

     படத்தின் சில காட்சிகள் ரொம்பவே மொக்கை போடுகின்றது. இந்த கதையை இத்தனை நீளமாக எடுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். மிக பிரபலமான கவ்பாயான செர்ஜியோ லியோனின் "The Man with No Name" படத்தில் வருகிறார் ஆனால் இந்த விஷயத்தை படிக்கும் போது இருக்கும் சுவாரசியம் அந்த காட்சியில் துளி கூட இல்லை.

     மொத்ததில் படம் பல இடங்களில் வாய் பிளக்க வைக்கிறது, சில இடங்களில் ஆச்சர்யத்தினாலும் சில இடங்களில் கொட்டாவி விடுவதற்க்காகவும்..,

Rango : A Gud Companion for a weekend with family or Boy friend or  Girl friend or ...
My rating : 7/10.
           

Post Comment


Follow Us in Facebook

7 Responses so far.

 1. நான் பார்த்தது ஜானி டெப்பிற்காகவும், அனிமேஷன் என்ற காரணத்திற்காகவும் தான். நீங்கள் சொல்வது போல சில இடங்களில் பரபரப்பாகவும் (குருவி துரத்தும் சீன்), சில இடங்களில் காமெடியாகவும் சில இடங்களில் கொட்டாவியும் வரும்.

  அந்த பாட்டு பாடி கதை சொல்லும் குருவிகளும் நல்ல டச்.

 2. பாக்கலாமா வேணாமா.. இப்போ நான் என்ன செய்ய.. படம் சுமார்னு சொல்றிங்க.. இந்த போஸ்ட்கு பதிலா ஒரு நல்ல படத்த பத்தி எழுதலாமே.. anyway as usual article is good..if you give more info regarding movie tat would be great..

 3. பாஸ்,
  சூப்பர் நரேஷன். நானும் படம் பார்த்து உள்ளேன். நீங்க சொன்ன மாதிரி படத்தை மொக்கைன்னு ஒதுக்க முடியாது, சூப்பர்ன்னு கொண்டாடவும் முடியாது. டைம்பாஸ் படம் தான்.
  //அங்க எல்லாரும் எதோ டி.ஆர் படம் பாத்த மாதிரி சிரிக்கிறாங்க//
  உங்களுக்கு டி.ஆர் ரொம்ப பாசம் போல...உங்க வீராசாமி பார்ட்-1 & பார்ட்-2 படிச்சேன். பின்னிடேங்க போங்க. ரொம்ப நல்ல காமெடி. அப்ப அப்ப அது மாதிரியும் கொளுத்தி போடுங்க.

 4. படம் பிப்டி பிப்டிதானா!இருந்தாலும் படம் பார்க்கணும்னு பட்சி சொல்லுது...

 5. @ஹாலிவுட் ரசிகன்
  ஆமா சில சீன்ஸ் செம பரபரப்பா போகும்..

  @Castro Karthi
  பாருங்க பாஸ் அவ்வளவு மோசம்லாம் இல்ல.., சில சீன்ஸ் ரொம்பவே நல்லா இருக்கும்

  @ராஜ்
  ஒரே சூரியன் , ஒரே சந்திரன் , ஒரே டி.ஆர்

  @உலக சினிமா ரசிகன்
  பாருங்க .., நல்லா தான் இருக்கும் சில சீன்ஸ் மட்டும் மொக்கையா போகும்...

 6. JZ says:

  நான் படத்தை முன்னமே பார்த்துட்டேன்.
  தொடங்கும் போது அலுப்பா இருந்திச்சு.. பிறகு ரங்கோ செய்யாத காரியத்துக்கெல்லாம் புகழடையத் தொடங்கும் போது கொஞ்சம் இன்டரஸ்டாயிச்சு.. கடைசியில மறுபடியும் அலுப்புக் கொட்ட ஆரம்பிச்சிருச்சு!

 7. @JZ

  எனக்கு ஆரம்பம் கூட பிடிச்சு இருந்துச்சு பட் கிளைமேக்ஸ் தான் போர் அடிக்க ஆரம்பிச்சுட்டு..

Leave a Reply


எதுனா சொல்லனும்ன்னு தோணுச்சின்னா சொல்லிட்டு போங்க...