ஹாலிவூட்டிற்குள் அதிரடியாய் நுழையும் ஆசிய இயக்குநர்கள்..,

      எல்லா துறைகளை போலவே சினிமாவிலும் அமெரிக்காவின் ஆதிக்கம் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது என்பதெல்லாம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. உலகிலேயே அதிக வசூலான படங்களின் பட்டியலுக்கும் ஹாலிவுட்டில் அதிக வசூலான படங்களுக்கும் அதிக வித்தியாசம் இருக்காது அந்த அளவிற்க்கு அவர்களின் களம் பெரிது. அதற்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ Ameros Perros - க்கு பிறகு Alejandro González Iñárritu , The Lives of Others - க்கு பிறகு Florian Henckel von Donnersmarck ,Pan's Labyrinth - க்கு பிறகு Guillermo del Toro என சமீப காலமாக உலக அளவில் தங்களை நிருபித்த இயக்குநர்கள் ஹாலிவூட் நோக்கி செல்வதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

      ஆசியாவில் இருந்தும் John Woo ,  Ang Lee போன்றவர்கள் சொந்த நாட்டில் சிறப்பான படங்களை எடுத்து தங்களை நிருபித்துவிட்டு 20-ம் நூற்றாண்டின் முடிவில் ஹாலிவூட் சென்று அங்கும் குறிப்பிடும்படியான வெற்றியும் பெற்றனர். Brokeback Mountain படத்திற்காக Ang Lee சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது வாங்கியது நினைவிருக்கலாம். இப்போது அடுத்த தலைமுறை இயக்குநர்களுக்கான காலம் போல ஆசியாவின் மிக முக்கியமான நான்கு இயக்குநர்கள் தற்போது ஹாலிவூட்டில் கால்பதிக்கிறார்கள் அந்த படங்கள் பற்றிய சிறிய அறிமுகங்கள்..,

The Flowers of War:

          Raise the Red Lantern , Not One Less , Road Home, TheThe Road Home , House of Flying Daggers உட்பட பல அற்புதமான படங்களை  எடுத்த Zhang Yimou-ன்  லேட்டஸ்ட் படம். இது ஒரு முழுமையான ஹாலிவூட் படம் கிடையாது சீனா மற்றும் ஹாலிவூட் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பு. நம்ம ஊரில் கூட இந்த மாதிரி கூட்டு தயாரிப்பு படங்கள் எடுப்பார்கள் ஆனால் அதில் நடிக்கும் ஆங்கில நடிகர்கள் பெயரை அமெரிக்காவில் இருப்பவர்கள் கூட கேள்விப்பட்டு இருக்க மாட்டார்கள். இந்த படத்தில் அது போல் அல்லாமல் ஹாலிவூட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான Christian Bale நடித்து இருக்கிறார். 



    
       இது இரண்டாம் உலகப்போரின் கொடூரங்களுள் ஒன்றான "Rape of Nanjing"  பற்றிய படமாகும். ஏற்கனவே வெளியாகிவிட்ட இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை :(. இந்த படம் குறித்த எஸ்.ரா வின் விமர்சனம் படிக்க இங்கே கிளிக்கவும்..,

Stoker:

        ரொம்பவும் பிரபலமான கொரிய படமான Old Boy படத்தின் இயக்குநர் Park-Chan-wook ன் ஹாலிவூட் பிரவேசம் தான் இந்த படம். பொதுவா அமெரிக்கப்படங்களே துண்டு போட்டு உட்கார்ந்து இருக்கும் பிரபலமான IMDB-ன் சிறந்த 250 படங்கள் பட்டியல்ல 90 வது இடத்துல இருக்கும் அளவுக்கு Old Boy அமெரிக்காவுல ஃபேமஸ். Old boy படம் ஹாலிவூட்ல ரீமேக் செய்ய போறதா ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்காங்க முதல்ல ஸ்பீல்பெர்க் தயாரிக்க வில் ஸ்மித் நடிக்கிறதா சொன்னாங்க இப்போ ஸ்பைக் லீ டைரக்ஷன்ல வேற யாரோ நடிக்கிறதா சொல்லுறாங்க. சரி, அது எப்போ வேணாலும் வரட்டும் (ஒரிஜினல் பாத்தாச்சு அப்புறம் ஒரிஜனல் படத்துல இருந்த குரூரத்தை ஆங்கிலத்துல முழுசா கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம்ன்னு நினைக்கிறேன்) இந்த படம் இந்த வருஷத்துக்குள்ள ரிலீஸாகிடும் போல இருக்கு. 



      Nicole Kidaman , Mia Wasikowska (Alice in Wonderland) போன்ற ஹாலிவூட்டின் முன்னணி நடிகைகள் நடிக்க Ridley Scott மற்றும் Tony Scott தயாரிக்கின்றனர். நீங்கள் Prison Break டி.வி. சீரிஸ் பார்த்ததுண்டா ? பிடிக்குமா ? ஆம் எனில் அதில் உடம்பெல்லாம் பச்சை குத்திய படி வரும் அதன் நாயகன் Micheal Scoldfield - யையும் பிடிக்குமல்லவா.., என்னடா சம்பந்தம் இல்லாம பேசுறான்னு பல்லை கடிப்பது தெரிகிறது ஆனால் சம்பந்தம் இருக்கிறது. Scoldfield - ஆக நடித்த Wentworth Miller தான் இந்த படத்தின் திரைக்கதையை எழுதி உள்ளார்.ஆக இந்த படத்தை எதிர்ப்பார்க்க மேலும் ஒரு காரணம் கிடைத்து விட்டது :)).

Last Stand:

              ஆக்சன்(A Bittersweet Life) , ஹாரர்(A Tale of Two Sisters) , காமெடி(The Good, the Bad, the Weird) , சைக்கோ(I saw the Devil) என சகல விதமான படங்களையும்  அருமையாக எடுத்து அசத்திய கொரிய இயக்குநர் Kim Ji-woon ஹாலிவூட்டில் களமிறங்கும் படம். டெர்மினேட்டர் - 3 க்கு பிறகு ஒன்பது வருடங்கள் கழித்து அர்னால்ட் ஹீரோவாக நடிக்கும் படமென்பதால் ஆக்சன் பட ரசிகர்களிடம் இப்போதே ஒரு எதிர்ப்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. A Bittersweet Life படத்தில் வரும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி எனக்கு ரொம்ப பிடித்த காட்சிகளுள் ஒன்று ரொம்பவும் ஸ்டைலாகவும் அழகாகவும் இருக்கும். இதுவும் ஒரு ஆக்சன் படம் என்பதுடன் ஹாலிவூட் பட்ஜெட்டில் அதகளப்படுத்துவார் என்று நம்பியும் எதிர்ப்பார்க்கிறேன் (சொதப்பாமல் இருந்தா சரி).



Snowpiercer:


           எனக்கு ரொம்ப பிடித்த சீரியல் கில்லர் படங்களுள் ஒன்றான "Memories of Murder" படத்தை இயக்கிய Bong Joon-ho-வின் முதல் ஆங்கில படமாகும். Le Transperceneige என்ற ஃப்ரன்ச்  நாவலை தழுவி எடுக்கப்படுகிறதாம் பனி சூழ்ந்த உலகத்தில் செல்லும் ரயிலில் நடைபெறும் கதையாம். கேப்டன் அமெரிக்காவாக நடித்த Chris Evans , ஆஸ்கர் வாங்கிய Octavia Spencer ஆகியோர் நடிக்கின்றனர். சென்ற மாதம் தான் படபிடிப்பு தொடங்கியுள்ளது அடுத்த வருடம் வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.



கொசுறு தகவல்கள் :
Akira Kurosawa , Francois truffaut போன்ற பெரிய பெரிய தலைகள் கூட ஹாலிவூட்டில் ஒரு படம் எடுத்து உள்ளனர்.

 Manoj N Shyamalan (SixthSense, Signs),  Jennifer Yuh Nelson(Kung fu Panda 2), Tarsem Singh(Immortals) போன்றவர்கள் ஆசியாவில் பிறந்து அமெரிக்க படிப்பு அல்லது வளர்ப்பு மூலம் ஹாலிவூட் இயக்குநர் ஆனவர்கள்.



Post Comment


Follow Us in Facebook

7 Responses so far.

  1. Thava says:

    ஆசிய சினிமாவை பற்றிய நல்லப்பார்வை..நீங்கள் அறிமுகப்படுத்திய சில இயக்குனர்களை நான் அறிந்தது இல்லை..நல்ல அருமையான திரைப்பதிவு.மிக்க நன்றி.

  2. உண்மையச் சொல்லணும்னா, Memories of Murder படம் தவிர்த்து மற்ற படங்களைப் பற்றியும், இயக்குனர்களைப் பற்றியும் இன்னிக்கு தான் கேள்விப்படுறேன். ஆனால் இன்னும் ஒரு படமும் பார்க்கவில்லை. Memories of Murder மட்டும் டவுன்லோட் செய்து வைத்திருக்கேன். பார்க்கலாம்.

  3. Unknown says:

    பார்ரா.. இவங்கெல்லாம் ஆசியகாரங்களா.. old boy, tale of two sister எல்லாம் பாத்துருக்கேன்.. memories of murder பாக்கணும்..

  4. JZ says:

    I saw the devil மட்டும் பார்த்திருக்கிறேன். பல தகவலர்களை அறிந்து கொள்ள பேருதவியாக இப்பதிவு அமைந்துள்ளது.. நன்றி!

    * The flowers of War, Memories of Murder ரெண்டு படத்தையும் இந்த வாரமே பார்க்கப் போறேன்!

  5. @Kumaran
    நன்றி நண்பா.., எல்லா படத்தையும் ஒண்ணு ஓண்ணா பாருங்க..,

    @ஹாலிவுட் ரசிகன்
    பாத்துட்டு சொல்லுங்க நண்பா..,

    @Castro Karthi
    இல்ல அண்டார்டிக்கா காரவுங்க.. :)))

    @JZ
    ரெண்டு படத்தையும் பாத்துட்டு சொல்லுங்க பாஸ்...

  6. நண்பரே!
    MSc Animation இந்தியாவில் படிக்க சிறந்த கல்லூரி பரிந்துரைக்கவும்.

  7. Aravindan says:

    Vettri iyakkunargal varisaiyil, namma Ulaga Naayaganum Varanum.

Leave a Reply


எதுனா சொல்லனும்ன்னு தோணுச்சின்னா சொல்லிட்டு போங்க...