OSCAR - Best Picture : சில அலசல்களும் யூகங்களும்

           இந்தியாவில் தரப்படும் திரைப்பட விருதுகள் அளவுக்கு ஆஸ்கர் விருதுகள் இங்கு புகழ் பெற்று உள்ளது.கமலஹாசனோ மணிரத்னமோ இதோ வாங்க போகிறார் அதோ வாங்க போகிறார் என்று நமது பத்திரிக்கைகள் மாறி மாறி கொடுத்த பில்டப்போ அல்லது ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வாங்கியதோ காரணமாக இருக்கலாம்.நம்மூரில் இத்தனை பிரபலமாக இருக்கும் ஆஸ்கர் பரிசை வென்ற திரைப்படங்கள் சென்னை தவிர வேறு எங்கும் ரிலீஸானதாக தெரியவில்லை ( Titanic போன்ற சில விதிவிலக்குகள் தவிர) நிச்சயமாய் இது ஒரு Irony.


       ஆரம்பத்தில் சிறந்த படத்திற்க்கான விருதிற்க்காக 5 படங்கள் பரிந்துரைக்கப்பட்டு விழா அன்று சிறந்த படம் தேர்ந்தெடுக்கப்படும்.2009-ல் இந்த விதி மாற்றப்பட்டு 10 படங்கள் பரிந்துரைக்கப்பட்டது. இந்த வருடம் 5 முதல் 10 படம் வரை பரிந்துரைக்கலாம் என்று இந்த விதி மறுபடியும் மாற்றப்பட்டுள்ளது.சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஆறாயிரத்து சொச்ச உறுப்பினர்களை கொண்ட Academy of Motion Picture Arts and Sciences(ஆஸ்கர் குடுக்குறதே இவுங்க தான்) அமைப்பில் குறைந்தது 5 சதவீத உறுப்பினர்களால் ஓட்டளிக்கப்படும் படங்களே விருதுக்காக பரிந்துரைக்கப்படும்.

  இந்த வருடம் புதிய விதியின் காரணமாக விருதுக்கு The Artist, The Descendants, Extremely Loud & Incredibly Close, The Help, Hugo, Midnight in Paris, Moneyball, The Tree of Life, War Horse ஆகிய 9 படங்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. இந்த 9 படங்களில் Hugo மட்டும் பார்க்கவில்லை ஆகவே அது தவிர மற்ற 8 படங்களை பற்றி சிறு அலசலை கீழே பார்க்கலாம்,



The Artist :
                             
           என்னை பொறுத்த வரை ஆஸ்கர் பரிந்துரையில் உள்ள படங்களுள் சிறந்த படம் இது தான்.போன பதிவிலேயே இந்த படம் பத்தி  ஓரளவுக்கு அலசிவிட்டதால் இப்போதும் உங்களை இம்சிக்க விரும்பவில்லை.சிறந்த படத்திற்க்கான விருது வாங்குவதற்க்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது.சிறந்த படம் தவிர்த்து  இந்த படத்தின் கதாநாயகனாக நடித்த Jean Dujardin-க்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைப்பதற்க்கான வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளன.இவர் ஏற்கனவே Cannes , Golden Globe (Musical / Comedy) , BAFTA போன்ற முக்கிய விருதுகளை வாங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.என்னுடைய The Artist விமர்சனம் படிக்க இங்கே கிளிக்கவும்.

The Descendants :

        வேலை தான் எல்லாமே என்று இருக்கும் க்ளூனியின் மனைவிக்கு ஏற்படும் விபத்தினால் மெல்ல மெல்ல செத்து கொண்டிருக்கிறார்.தன் மனைவிக்கு ஒரு காதலன் இருப்பதாய் அறிந்து அவரை தேடுகிறார் க்ளூனி. அதே வேளையில் அவருடைய பரம்பரை சொத்தை விற்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு வருகிறது.இதற்கிடையில் பாசம் இல்லாமல் இருக்கும் தன் குடும்பத்தை எப்படி பிணைப்பை ஏற்படுத்துகிறார் என்பதே கதை.மொத்த படத்தியும் தன் நடிப்பினால் தூக்கி நிறுத்துகிறார் க்ளூனி உண்மையிலையே செம ஆக்டிங்.இவருக்கும் சிறந்த நடிகர் விருது பெறுவதற்க்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. என்ன தான் கோல்டன் க்ளோப் விருதை வென்றாலும் இந்த படத்திற்க்கு சிறந்த படத்திற்க்கான விருது கிடைப்பதற்க்கான வாய்ப்பு கொஞ்சம் குறைவு தான் என தோன்றுகிறது.ஆனால் Adapted Screenplay பிரிவில் விருது வாங்க அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றது.அமெரிக்க குடும்பங்களை பற்றிய அருமையான படம் தவறாமல் பாருங்கள்.

Extremely Loud & Incredibly Close :

         9/11 விபத்தை பற்றி எடுக்கப்பட்டுள்ள மற்றொரு படம் என்பது தான் இந்த படம் ஆஸ்கருக்கு பரிந்துரை பட்டியலில் வந்தற்க்கான முக்கிய தகுதியாக படுகிறது.9/11 விபத்தில் இறந்து போகும் Tom Hanks- ஐ பற்றிய நினைவுகளோடு  படம் தொடங்குகிறது.அவர் ஒரு சாவியை மறைத்து வைத்து விட்டு இறந்து போகிறார்  அதற்க்கான பூட்டை தேடி கண்டுபிடிக்கிறார் அவருடைய மகன் ஆஸ்கர்.ஆஸ்கர் பூட்டை தேடி வகைவகையான மனிதர்களை சந்திப்பதும் அவருக்கும் அந்த வாய் திறந்து பேசாமல் எல்லாவற்றையும் எழுதிக்காட்டும் தாத்தாவுக்கும் ஏற்படும் நட்பும் அழகாக பதிவு செய்யபட்டுள்ளது.சில அருமையான காட்சிகளும் பல மொக்கையான காட்சிகளின் கலவையாய் இருக்கிறது படம்.விருது வாங்கும் வாய்ப்பெல்லாம் இல்லை என்று நினைக்கிறேன். தவற விடக்கூடாத படமெல்லாம் இல்லை நேரம் இருப்பின் பார்க்கவும்.



The Help : 

        ஆஸ்கர் கமிட்டியில் இருப்பவர்கள் தங்களை Secularist-ஆக காட்டிக்கொள்ள கறுப்பர்களை பற்றிய படம் ஒன்றை பரிந்துரை பட்டியலில் சேர்த்து விடுவார்கள் என்று பொதுவாக ஒரு கருத்து உண்டு. இந்த படம் அப்படி தான் கோட்டாவில் வந்திருக்கும் என்று நானாக முடிவு செய்து கொண்டு ரொம்ப நாள் டவுன்லோட் பண்ணி பார்க்காமல் இருந்தேன் அது எவ்வளவு பெரிய தப்புன்னு படம் பாக்கும் போது தான் தெரிஞ்சது.

         1960-களில் மிசிசியில் ஜாக்ஸன் நகரத்தில் உள்ளவெள்ளைக்காரர்களின் வீட்டு வேலைப்பார்க்கும் கறுப்பின பெண்களை பற்றிய படம்.அப்போது சம உரிமை பற்றி பேசுவது கூட சட்டப்படி குற்றமாகும் அந்த காலகட்டதில் அவர்களின் வாழ்க்கை நிலை , ஊதியம் பற்றி ஒரு வெள்ளைக்கார பெண்மணி ஒரு நாவல் எழுதுகிறார். அந்த கதைகளும் நாவலினால் ஏற்படும் விளைவுகளும் தான் படத்தின் கதை. ஏராளமான ஹாலிவூட் க்ளேஷேக்கள் நிறைந்த படம் தான் என்றாலும் நிறைய அருமையான காட்சிகளின் மூலமாய் மனதை தொடுகிறார்கள்.அனைவருமே பிரமாதமாக நடித்து இருக்கிறார்கள்.சிறந்த படத்திற்க்கான விருது வாங்குவது கடினம் தான் என்றாலும் சிறந்த நடிகை மற்றும் சிறந்த துணை நடிகைக்கான விருதுகள் வாங்குவதற்க்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது.நிச்சயமாய் உங்கள் மனதை தொடக்கூடிய படம் தவறாமல் பாருங்கள்.

Midnight in Paris :

           Woody Allen-ன் லேட்டஸ்ட் படம்.மனுஷனால் எப்படி முப்பது நாப்பது வருஷமா வருஷத்துக்கும் ஒரு படம்ன்னு எடுத்தாலும் நல்ல படமாவே எடுக்க முடியுதோ. ஹாலிவூட் திரைக்கதை ஆசிரியரான ஓவன் வில்சன் வருங்கால மனைவின் குடும்பத்தோடு பாரிஸ் போகிறார் ஆனால் அங்கு அவர்கள் செல்லும் பார்ட்டிகளில் ஒன்றமுடியாமல் சுற்றுகிறார். ஒரு விசித்திரமான வண்டியின் மூலம் 1920-களுக்கு போகிறார் அங்கு Ernest Hemingway , F. Scott Fitzgerald ,Pablo Picasso ,Salvador Dalí, Man Ray, Luis Buñuel என்று பல கலை இலக்கிய ஜாம்பவான்களை சந்திக்கிறார் அதனால் வரும் விளைவுகளே கதை.ஓவன் வில்சன் சின்ன வயது வூட்டி போலவே இன்டெலக்டுவலாக பேசுவது ரசிக்கும்ப்படி உள்ளது. சிறந்த படத்திற்க்கான விருது வாங்குவது கடினம் தான் என்றாலும் சிறந்த திரைக்கதைக்கான விருது வாங்குவதற்க்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே படுகிறது.

Moneyball :

        குறைந்த பட்ஜெட்டில் ஒரு வெற்றிகரமான பேஸ்பால் டீமை ஸ்டார் வீரர்கள் இல்லாமல் ஒரு புதுமையான முறையில் உருவாக்கிய பில்லி பேனின் வாழ்வில் நடந்த உண்மை சம்ந்ததை அடிப்படையாய் கொண்டு எடுக்கப்பட்ட படம்.தோல்விக்கு பின் மீண்டு வரும் சின்ன டீம் என்ற வழக்கமான ஸ்போர்ட்ஸ் படத்துக்கான கதை தான் எனினும் எடுத்த விதத்தில் வித்தியாசம் காட்டி இருக்கிறார்கள்.பிராட் பிட் சிறப்பாக ந்டித்துள்ளார்.சிறந்த நடிகருக்காக பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறார் எனினும் விருது கிடைப்பது கடினம் தான்.ஆகா ஓகோ படமும் ஆல்ல மொக்கை படமும் அல்ல நல்ல படம் அவ்வளவு தான்.

 ( Tree of Life - ஒளிப்பதிவு என்னமா இருக்கு பாத்திங்களா )

Tree of Life :

        வணிக நோக்கத்திற்க்காக எந்த சமரசமும் செய்யாமல் திரைப்படங்களை எப்போதும் ஒரு கலைப்படைப்பாகவே எடுப்பவரான Terrence Malik-ன் படம்.குப்ரிக்கின் 2001 படத்துக்கு இணையாக சில விமர்சகர்களால் புகழப்படும் படம். குறிப்பாக 2001-ல் வரும் குரங்கிலிருந்து நவீன இயந்திரங்கள் வரும் வரை பரிணாம வளர்ச்சியை காட்டும் காட்சியோடு இந்த படத்தில் பெருவெடிப்பில் பிரபஞ்சம் தொடங்கியதில் இருந்து பிராட் பிட்டின் மகன் பிறக்கும் வரை வரும் காட்சிகளோடு ஓப்பிடமுடியும்.படத்தில தனியாக கதையெல்லாம் இல்லை இறந்து போன பையனை பற்றி அம்மா மற்றும் இன்னொரு மகனின் நினைவுகள் தான் படம்.

      அப்பா கதாபாத்திரத்தில் பிராட் பிட் சிறப்பாக நடித்து இருப்பார் அட்லீஸ்ட் சிறந்த நடிகருக்குக்கான பரிந்துரையாவது கிடைத்து இருக்க வேண்டும் ஆனால் கிடைக்கவில்லை (இவர் தான் Moneyball-க்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்).ஏனோ என்னால் இதை ஒரு அற்புதமான படைப்பாக உணர முடியவில்லை நிச்சயம் இன்னொரு முறை பார்க்க வேண்டும் அதற்கு அப்புறம் என்னளவில் காவிய படைப்பாகலாம் அல்லது சாதாரண படமாகலாம் அல்லது அப்பவும் இன்னொரு முறை பார்க்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு திரியலாம்.சிறந்த படத்திற்க்கான விருது கிடைப்பதற்க்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது.அது கிடைக்கிறதோ இல்லையோ சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது நிச்சயம்(மேல போட்டு இருக்குற படத்தை பாத்திங்கள்ல).

War Horse :

           ஸ்பீல் பெர்க்கின் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம்.படம் வருவதற்க்கு முன்னரே ஆஸ்கர் வாங்கும் என்று சொல்லும் அளவுக்கு அதற்க்காகவே எடுத்த படம்.முதல் உலகப்போர் நடக்கும் சமயத்தில் பாசமாக இருக்கும் குதிரையும் ஹீரோவும் பிரிகிறார்கள் பிறகு எப்படி சேர்கிறார்கள் எனபதே கதை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் படத்தில் நிறைய செயர்க்கையான சென்டிமெண்ட் காட்சிகள் நிறைந்து இருந்தது மற்றும் ரொம்ப சுமாராக இருந்ததாக உணர்தேன். எனக்கு பிடிக்கவில்லையே தவிர சிலருக்கு பிடித்து இருந்தது விருப்பம் இருந்தால் பாருங்கள்.


      War Horse , Extremely Loud & Incredibly Close போன்ற வெகு சுமாரான படங்களுக்கு பதிலாக Drive , The Warrior ,Tinker Tailor Soldier Spy போன்ற நல்ல படங்கள் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தால் முழுமையான லிஸ்டாக இருந்திருக்கும். மொத்ததில் The Artist , Hugo & Tree of Life ஆகிய மூன்று படங்களில் ஏதோ ஒன்று தான் சிறந்த படத்துக்கான விருதை வாங்கும் என்று தெரிகிறது. என்னுடைய விருப்ப தேர்வு முன்னர் சொன்னது போல் The Artist தான். அமெரிக்க நேரப்படி ஞாயிற்று கிழமை மாலையும் இந்திய நேரப்படி திங்கட்கிழமை விடியற்காலையும் முடிவுகள் தெரிந்து விடும் பார்க்கலாம் எந்த படம் வாங்குகறது என்று.

      என்னை பெரிய பதிவு எழுத சொன்ன Castro கார்த்திக்கும் கொழந்த கணேஷுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம் :).

Post Comment


Follow Us in Facebook

7 Responses so far.

  1. Kumaran says:

    இனிய இரவு வணக்கம்,
    ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படங்களை பற்றிய சிறிய அழகான தொகுப்பு..சிறப்பான அறிமுகங்களை வழங்கியிருக்கிறீர்கள்..எப்படியும் இன்னுமிரண்டு நாட்களில் ரிசால்ட் தெரிந்துவிடும்..ஞாயமான முடிவுகளை எதிர்ப்பார்ப்போம்..மிக்க நன்றி சகோ.

  2. உங்க விமர்சனத்தை வச்சு பார்க்கும் போது "The Artist" தான் வாங்கும்ன்னு எனக்கு தோணுது.

  3. Unknown says:

    நல்ல அலசல் தல ....... மை சாய்ஸ் ஆர்டிஸ்ட் ....அனிமேஷன் பிலிம்ல ரேங்கோ,பெஸ்ட் ஆக்டரஸ் ரூனி மாரா வாங்கினா ரொம்ப சந்தோசம், A separation கிட்ட தட்ட உறுதின்னு நினைக்குறேன்

  4. Anonymous says:

    Denim..sonnadhu nadandhuruchi!! Good Post Anand.

  5. Prem S says:

    நல்ல விமர்சனம் அன்பரே

  6. @Kumaran
    Mostly எதிர்ப்பார்த்த முடிவு தான் :)

    @ராஜ்
    சொன்னது நடந்திட்டு :)

    @டெனிம்
    நன்றி தல

    @சிவகுமார்
    தேங்ஸ் பாஸ்..,

    @ப்ரேம்
    நன்றி தலைவா

  7. நீங்க சிறந்த படம் என்று சொன்ன படமே வென்று விட்டதே!நன்று.

Leave a Reply


எதுனா சொல்லனும்ன்னு தோணுச்சின்னா சொல்லிட்டு போங்க...