Days of Being Wild [1990] - அலைபாயும் வாழ்க்கை

    எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கின்றோம். எதையோ நினைத்து ஏங்கி கொண்டே இருக்கிறோம். யார் மீதோ அன்பு செலுத்தியே சாவடிக்கிறோம். யாருடைய அன்புக்கோ ஏங்கி ஏங்கி சாகிறோம்.நினைத்ததை செய்ய முடியாமலும் செய்ததை பொறுக்க முடியாமலும் நாட்களை கடத்தி கொண்டிருக்கிறோம்.இவை அத்தனையும் ஓயும் ஓர் கணத்தில் நாமும் மொத்தமாய் ஓய்ந்து போகிறோம்.


     Days of Being Wild - உலக புகழ் பெற்ற ஹாங்காங் இயக்குநர் Wong Kar Wai - ன் ஆரம்ப கால திரைப்படங்களுள் ஒன்று சரியாக சொல்ல வேண்டும் என்றால் இரண்டாவது படம்.தெற்கு சீனாவில் பேசப்படும் கேண்டோனீஸ் (Cantonese) மொழியில் எடுக்க பட்டதாகும்.


    ” நல்ல படம் எடுக்க நல்ல கதை கிடைப்பதில்லை ” - அப்புடின்னு டகில் விடறவங்க எல்லாம் கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.ஒரு நல்ல படம் எடுக்க ஒரு நல்ல கான்செப்ட் போதுமானது முன்னுரையில் தொடங்கி பொருளுரை எழுதி முடிவுரையில் முடிக்க படும் கதையல்ல என்ற கோட்பாட்டிற்கு சரியான உதாரணம் இந்த திரைப்படம்.



     மூன்று ஆண்கள் , மூன்று பெண்கள் மொத்தம் ஆறே ஆறு பேர் அவர்களுக்கு இடையிலான உறவுகள் , அதன் சிக்கல்கள் , ஏமாற்றங்கள் , காதல்கள் , துரோகங்கள் , எதிர்ப்பார்ப்புகள் மிகமுக்கியமாய் இவர்களின் தேடல்கள் இவைகளின் மொத்த கலைவையே   " Days of Being Wild ".


     1960  , ஏப்ரல் 16 , சரியாக அதிகாலை 2.59 முதல் 3.00 வரையிலான இந்த ஒரு நிமிடத்திற்க்கு மட்டும் நட்பாய் இருக்குமாறு ஸ்டேடியத்தில் வேலை பார்க்கும் பெண்ணான லி ஜின்னிடம் கேட்கிறான் யட்டி.அதை தொடர்ந்து தினமும் ஒரு நிமிடம் சந்திப்பதாக சொல்லி செல்கிறான்.அந்த ஒரு நிமிடம் பல மணிநேரங்களாக வளர்ந்து ஸ்டேடியத்தில் இருந்து படுக்கை அறை வரைக்கும் செல்கிறது.கல்யாணம் பற்றி அவள் பேச தொடங்கியவுடன் அவளிடம் சண்டை போடுகிறான்.அதன் பின் அவளை பார்ப்பதை நிறுத்தி கொள்கிறான்.முன்னாள் விபச்சாரியான யட்டியின் வளர்ப்பு தாய் அமெரிக்கா போவதாக அவனிடம் சொல்கிறாள்.தன்னுடைய பெற்றோர் பற்றி தெரியாதவரை அவள் எங்கும் போக கூடாதென கடுமையாய் சொல்லி விடுகிறான்.


        லி ஜின்னை கழட்டிவிட்டப்பின் கேப்ரே டான்ஸரான மிமியுடன் சுற்ற தொடங்குகிறான் யட்டி.முந்தைய உறவை போலவே படுக்கை வரை செல்கிறது.யட்டியை மறக்க முடியாத லி ஜின் அடிக்கடி அவனை பார்க்க வருகிறாள் ஆனால் அவன் ஒரு முறை கூட மதித்து பேசவே இல்லை.ஒரு முரை மிமிக்கும் லி ஜின்னுக்கும் சண்டை வந்து விடுகிறது அதனால் மனமுடைந்து செல்லும் லி ஜின்னுக்கும் அந்த ஏரியா போலீஸான டைட்க்கும் ஒரு நட்பு உருவாகிறது.டைட் கப்பல் மாலுமி ஆக ஆசைபட்டு தன் தந்தைக்காக போலிஸ் வேலையில் இருப்பதாக சொல்கிறான். யட்டியை பார்ப்பதற்காக வந்து கொண்டிருந்தவள் டைட் - ஐ பார்ப்பதற்காகவும் வர தொடங்குகிறாள்.தன்னுடன் பேச விரும்பினால் தெரு ஓரத்தில் இருக்கும் பொதுதொலைபேசிக்கு அழைக்குமாறு சொல்லி நம்பர் தருகிறான்.இதற்கிடையில் மிமியையும் கழட்டி விடுகிறான் யட்டி அதன்பின் தன் உண்மையான பெற்றோர் பிலிபைன்ஸில் இருப்பதாய் தெரிய வர அங்கே செல்கிறான்.யட்டி உண்மையான பெற்றோர்களை பார்த்தானா , லி ஜின் போ செய்தாளா , டைட் மாலுமி ஆனான என்பதையெல்லாம் கணிணி திரையில் காண்க..,


      படத்தில் வரும்  எல்லா கதாபாத்திரங்களும் பிரிவையும் , ஏமாற்றத்தையும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே நம் முன் காட்சியாக விரிகிறது.பல வசனங்கள் கவிதையாய் படம் முடிந்த பிறகும் ஞாபகத்தில் இருக்கின்றது.குறிப்பாக யட்டி அடிக்கடி கூறும் அந்த பறவை கதை.படத்தில் அழகான காட்சிகள் நிறையவே உண்டு.குறிப்பாக யட்டிக்கும் லி ஜின்னுக்கும் இடையேயான அந்த "ஒரு நிமிட நட்பு" காட்சி.இதுவரை எந்த தமிழ் படத்திலும் இந்த காட்சியை சுடாமல் இருப்பது ஆச்சர்யமே..,அந்த அழகான காட்சி கிழே ..,





     Wong Kar Wai - ன் படங்கள் அனைத்திலும் இருக்கும் முக்கியமான மூன்று விஷயங்கள் சுண்டி இழுக்கும் ஒளிப்பதிவு , கிறங்கடிக்க்கும் இசை , திரைக்கதையில் ஒரு சின்ன மேஜிக். Wong Kar Kai படங்கள் அனைத்தும் ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருப்பதற்க்கு முக்கிய காரணம் அவரது ஆஸ்தான ஒளிப்பதிவாளர் Christopher Doyle.இவர்கள் இருவரும் இணைந்த முதல் திரைப்படம் இதுவாகும் இதன் பின்னர் இவர்கள் இணைந்த படங்களை போல் வண்ணங்கள் வழியும் காட்சிகளாக இல்லாமல் படம் நெடுகிலும் உலர்ந்த நிறங்களே பயன்படுத்த பட்டு உள்ளது.கவர்ந்திழுக்கும் வண்ணங்கள் ஏதுமில்லாமல் வெறும் கேமராவை மட்டும் வைத்து கொண்டு கலக்கி இருப்பார்கள்.


         Wong Kar Wai - ன் திரைக்கதைகள் தனித்துவமானவை பெரும்பாலும் மனித மனங்களை காட்சி களங்களாய் கொண்டவை.மற்ற இயக்குனர்களை போல் இவர் படபிடிப்பு தொடங்குவதற்க்கு முன்னால் திரைக்கதையை எழுதி முடிப்பதில்லை சில காட்சிகள் எழுதியதுமே படப்பிடிப்பை தொடங்கிவிடுகிறார். அந்த காட்சியை எடுக்கும் போது கிடைக்கும் அனுபவங்களை கொண்டே மற்ற காட்சிகளை எழுதுகிறார்.சில சமயங்களில் கடைசி காட்சியை மட்டும் எழுதிவிட்டு படப்பிடிப்புக்கு போய் இருக்கிறார்.சில சமயங்களில் ஒரு படத்திற்க்காக எடுத்த காட்சிகளை வெட்டி இரண்டு படங்களாக மாற்றி இருக்கிறார்(Fallen Angels and  Chungking Express).

       இவர் இயக்கத்தில் வெளிவந்த 3 திரைப்படங்கள் பார்த்து இருக்கிறேன் (இது தவிர Chungking Express மற்றும் In the Mood for Love ). இந்த மூன்று படங்களிலும் திரைக்கதையில் எதாவது ஒரு மேஜிக் இருக்கும்.In the Mood for Love படத்தில் எந்த ஒரு காட்சியும் எப்போது தொடங்கி எப்போது முடிகிறது என பார்வையாளனால் கண்டுப்பிடிக்க முடியாத அளவுக்கு நுட்பமாக காட்சியை கடத்தி போய் இருப்பார்.இரண்டு கதைகளை கொண்ட படமான chungking express-ல் ஒரு கதையில் இருந்து இன்னொரு கதைக்கு மாறுவது செம்ம்ம கியூட்டாக இருக்கும்.அதே போல் இந்த படத்திலும் ஒரு மேஜிக் உண்டு  அது படத்தின் கதையை யாராவது ஒரு கேரக்டர் வாய்ஸ் ஓவரில் சொல்ல தொடங்கும் அப்படியே அதன் போக்கிலேயே போய் வேறு யாடராவது அந்த கதையை முடிப்பார்கள்.

படத்தில் அறிவுரையோ , அழுகை காட்சிகளையோ எதிர்பார்க்காமல் பார்க்க தொடங்கினால் நிச்சயம் ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும்.

Days of Being Wild : A film which make a place in your heart without any permission.
My rating : 9/10



Post Comment


Follow Us in Facebook

7 Responses so far.

  1. Unknown says:

    // முன்னால் திரைக்கதையை எழுதி முடிப்பதில்லை சில காட்சிகள் எழுதியதுமே படப்பிடிப்பை தொடங்கிவிடுகிறார். அந்த காட்சியை எடுக்கும் போது கிடைக்கும் அனுபவங்களை கொண்டே மற்ற காட்சிகளை எழுதுகிறார்.சில சமயங்களில் கடைசி காட்சியை மட்டும் எழுதிவிட்டு படப்பிடிப்புக்கு போய் இருக்கிறார்.சில சமயங்களில் ஒரு படத்திற்க்காக எடுத்த காட்சிகளை வெட்டி இரண்டு படங்களாக மாற்றி இருக்கிறார்//

    இது கண்டிப்பாக நம்மூரில் சாத்தியம் கிடையாது.... இதற்கு அசாத்திய திறமை வேண்டும்.......Wong Kar Wai இப்பொழுதுதான் இந்த பெயரையே கேள்விப் படுகிறேன் .....படம் பார்க்க முயற்சிக்கிறேன்....

  2. @டெனிம்

    தற்போது இயங்கி கொண்டிருக்கும் இயக்குநர்களும் மிக முக்கியமானவர். 20 வருடங்களில் நிறைய முக்கியமான படங்களை எடுத்து விட்டார்.., இவரோட In the Mood for Love பாருங்க கண்டிப்பா fan ஆகிடுவீங்க...

  3. Kumaran says:

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சிறந்த படத்தின் அறிமுகத்தோடு அருமையாக வந்துள்ளீர்கள்..பார்க்க ஆவலை துண்டும் அழகான விமர்சனம்..நன்றிகள் சகோ..

    சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

  4. @Kumaran

    கண்டிப்பா பாருங்க சூப்பரா இருக்கும்...

  5. படம் இன்னும் பாக்கல. டெம்ப்ளேட்தனமா சொல்லணும்னா, உங்களின் அருமையான பதிவு படம் பாக்க தூண்டுது.இந்தா, ஒடனே டவுன்லோட் போட்டுட்டேன்.

    விமர்சனதுல தனித்துவமான சில வார்த்தைகள் இருக்கு.படிக்க நல்லாயிருக்குங்க.

  6. பாஸ்,
    பயங்கரமான உலக சினிமா மாதிரி தெரியுது. இந்த மாதிரி கவிதைத்தனமான படங்களை நல்ல மூடுல தான் பார்க்கணும். இப்ப டவுன்லோட் பன்னி வச்சுக்கிறேன். பிறகு பார்த்துட்டு என்னோட அனுபவத்தை பகிர்கிறேன்.

  7. @கொழந்த

    கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்ன்னு நினைக்கிறேன்.., தவறாம பாருங்க..

    //விமர்சனதுல தனித்துவமான சில வார்த்தைகள் இருக்கு.படிக்க நல்லாயிருக்குங்க.//

    தேங்ஸ் பாஸ்.., நெசமா தான் சொல்லுறிங்களா..,

    @ராஜ்

    உண்மையிலையே கவிதை மாதிரியான படம் தான் தவறாம பாருங்க...

Leave a Reply


எதுனா சொல்லனும்ன்னு தோணுச்சின்னா சொல்லிட்டு போங்க...