The Artist [2011] - கலப்படமற்ற சினிமாவின் மொழி

"The Artist was made as a love letter to cinema"
                                                                        - Michel Hazanavicius 

             117 வருடங்களுக்கு முன்பு லூயி லூமியும் அகஸ்தா லூமியும் பாரிஸில் முதல் முறையாக அசையும் படத்தை திரையிட்டு காட்டிய போது ஏற்படுத்திய வியப்பில் முழுமையாக இல்லை என்றாலும் ஒரு குறிப்பிடும்படியான அளவையேனும் இன்றும் ஏற்படுத்துவது தான் சினிமா.இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் சினிமா காலாவதி ஆகாமல் இருப்பதற்க்கான பெருங்காரணங்களில் இதுவும் ஒன்றாகும். அன்று அசைய தொடங்கிய சினிமா பின்னர் கதை சொல்ல தொடங்கியது,பேச தொடங்கியது, வண்ணமாகியது இன்னும் பல மாயங்கள் புரிய தொடங்கியது.இந்த பரிமாண வளர்ச்சியில் மௌன திரைப்படங்கள் வேறொரு காலத்தின் கலாச்சார பதிவுகளாகவும் , கலை பொக்கிஷங்களாகவும் எஞ்சி நிற்கின்றன.


          நீங்கள் Charlie Chaplin-யும் Buster  Keaton-யும் உங்கள் கணிணி திரையிலோ டி.வி.யிலோ பார்த்து இருக்கலாம் சிரித்தும் ரசித்தும் கூட இருக்கலாம் ஆனால் அன்றைய மக்களிடம் அது ஏற்படுத்திய உணர்வுகளை உங்களால் அனுபவிக்கவே முடியாது.ஜாலியன் வாலா பாக்கில் வெடித்த துப்பாக்கியை இன்று மியூசியத்தில் பார்ப்பவனுக்கும் அன்று வெடிக்கும் போது பார்த்தவனுக்கும் உள்ள வித்தியாசத்தை போன்றதாகும்.இப்படி கால சக்கரத்தில் பின்னால் சென்றால் மட்டுமே நிகழ கூடிய அதிசியத்தை நிகழ்காலத்திலேயே நடத்தி காட்டும் ஒரு முக்கியமான முயற்சி தான் "The Artist".

        1927 , மௌன பட சூப்பர் ஸ்டாரான ஜார்ஜ் வாலண்டின் அவருடைய ஒரு படத்தின் ப்ரீமியர் காட்சியை முடித்து விட்டு வரும் போது ஒரு ரசிகையால் முத்தமிடப்படுகிறார். அது  "Who's That Girl ?" என்ற தலைப்போடு முதல் பக்க செய்தியாகிறது.மறுநாள் அந்த ரசிகை சினிமா வாய்ப்பு தேடி வருகிறார் ஒரு சிறு வாய்ப்பு கிடைக்கிறது அப்போதுஅவர் பெயர் பெப்பி மில்லர் என்று தெரிய வருகிறது.அப்போது ஜார்ஜை மறுபடி சந்திக்கிறார் அவர்களுக்கு இடையில் ஒரு நட்பு உண்டாகிறது.பெப்பி மில்லர் கொஞ்சம் கொஞ்சமாக திரை உலகில் முன்னேறி கொண்டு இருக்கிறார்.


      1929,சினிமா பேச தொடங்குகிறது ஆதலால் இதுவரை ஜார்ஜை வைத்து படமெடுத்து கொண்டிருந்த ஸ்டூடியோ மௌன படங்களை இனி தயாரிக்க போவதில்லை  என அறிவிக்கிறது.கோபமடைந்த ஜார்ஜ் சொந்தமாக ஒரு மௌன படம் தயாரிக்கிறார் அதே நேரத்தில் ஸ்டூடியோ பெப்பியை கதாநாயகியாக போட்டு பேசும் படம் ஒன்றை தயாரிக்கிறது.இரண்டும் ஒரே நாளில் ரிலீசாகிறது.பெப்பியின் பேசும் படம் பெரும் வெற்றி பெற ஜார்ஜின் மௌனப்படம் படுதோல்வி அடைகிறது.அதே நேரத்தில் வால் ஸ்ட்ரீட் பங்கு சந்தை கடும் பின்னடைவை சந்திப்பதால் மொத்தமாக திவாலாகிறார் ஜார்ஜ்.       ஜார்ஜின் நிலைமை மேலும் மோசமாகி கொண்டே போகிறது. மனைவி பிரிகிறார் , சொத்துக்கள் அனைத்தும் ஏலத்தில் போகிறது , விசுவாசமான டிரைவரை சம்பளம் கொடுக்க முடியாமல் நிறுத்துகிறார் , ஒரு தீ விபத்தில் சிக்கி மயிரிழையில் தன் நாயின் உதவியால் உயிர் தப்புகிறார்.அதற்கு நேர்மாறாக தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடித்து ஹாலிவுட்டின் உச்ச நட்சதிரமாகிறார் பெப்பி.இருவரும் சந்திதார்களா , ஜார்ஜ் மீண்டும் உச்சத்தை அடைந்தாரா என்பதையெல்லாம் வெள்ளி திரையிலோ கணிணி திரையிலோ காண்க..,
   
         கதையை படிக்கும் போது வெகுசாதாரணமான படம் போல தோன்றலாம் ஆனால் எடுக்கப்பட்ட விதம் அசாத்தியமானது.முழுபடத்தையும் மௌன படமாக எடுத்தோடு மட்டுமல்லாமல் அந்த காலத்தில் இருந்த டெக்னிக்கல் விஷ்யங்களும் (4:3 Aspect ratio , 22fps etc..,) பயன்ப்டுத்த பட்டு உள்ளது.தான் பெரிதும் மதிக்கும் இயக்குநர்களுக்கு ஒரு Homage-ஆக இந்த படத்தை இயக்கி உள்ளதாக இயக்குநர் Michel Hazanavicius கூறியுள்ளார்.ஜார்ஜாக நடித்துள்ள Jean Dujardin -க்கு இந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வாங்குவதற்க்காக வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.படத்தில் முக்கியமான மற்ற மூன்று பேர் ஒளிபதிவாளர் Guillaume Schiffman , இசையமைப்பாளர் Ludovic Bource மற்றும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருக்கும் நாய்.

       படத்தில ரசிக்கத்தக்க விஷயங்கள்   நிறைய இருக்கின்றன .காட்சியின் தன்மைக்கேற்ப்ப அவ்வப்போது சில போஸ்டர்கள் திரையின் எங்காவது ஒட்ட பட்டிருக்கும் உதாரணமாக ஜார்ஜுக்கும் பெப்பிக்கும் நட்பு ஏற்படும் காட்சியில் "Thief of the Hearts" போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும்.எல்லாவற்றையும் இழந்து விட்டு ஜார்ஜ் நடந்து வரும் போது "The Lonely Star"  என்ற போஸ்டரும் ஒட்டப்பட்டிருக்கும் இன்னுன் பல இடங்களில் வரும் நீங்களே பார்த்து கண்டுபிடிங்க..படத்தின் துவக்கத்தில் ஜார்ஜ் பிரீமியர் காட்சியை பார்க்கும் படத்தின் பெயர் "A Russian Affair" அதற்கு அடுத்த காட்சியில் அவர் நடிக்கும் படத்தின் பெயர் "A German Affair" ஹாலிவுட்டின் Sequel கலாச்சாரத்தை கிண்டல் அடிக்கும் விதமாக இந்த காட்சிகள் அமைந்திருக்கும்.

   இந்த படத்திற்க்கு சிறந்த படத்திற்க்கான ஆஸ்கர் கிடைப்பதற்க்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது ஆனால் ஆஸ்கர் விருதே அரசியல்களால் ஆனது எனவே Tree of Life - க்கோ அல்லது மொக்கை படமான War Horse - க்கோ கூட விருது கொடுக்கப்படலாம்.விருது கொடுக்கப்பட்டாலும் கொடுக்காவிட்டாலும் இது ஒரு அற்புதமான படம் தவறாமல் பாருங்கள்.

The Artist : A Rare Film which take us back to the days of our their Great Grandfathers.
My rating  : 9.5 / 10.

Post Comment


Follow Us in Facebook

16 Responses so far.

 1. Thava says:

  ஒரு முழுமையான படைப்பை அருமையாக விமர்சனம் எழுதியுள்ளீர்கள்..சென்ற வருடம் வெளியான படங்களிலேயே சிறந்த படமாகவும் சொல்லலாம்..

  @@ ஆஸ்கர் விருதே அரசியல்களால் ஆனது @@
  இது உண்மை என்றாலும், ஒரு நல்ல படைப்புக்கு ஆதரவுகளும் அங்கிகாரங்களும் கிடைக்காமல் போகாது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது..சுமார் 7 பாஃப்தா விருதுகளை ஏற்கனவே அள்ளிவிட்டது இத்திரைப்படம்..ஆஸ்கரை எதிர்ப்பார்ப்போம்...வார் ஹோர்ஸ் ஆஸ்கர் அறிவிப்புக்கு முன்னமே பார்த்துவிட வேண்டும்.

  தங்களது பணி இன்னும் அதிகமாக தொடர வேண்டும்..நன்றி

  .சஸ்பிஷன் ஒரு பார்வை - ஒரு ஹிட்ச்காக் திரை படைப்பு.

 2. மிக லாவகமான எழுத்து. ரசித்து படிக்கும்படி இருக்கு. காஸ்ட்ரோ சொன்னதை நானும் வழிமொழிகிறேன்...
  படம் இன்னும் பாக்கல.

  -----

  அப்பறம், தீராக்காதலி முடிந்தால் படிக்கவும். இந்த படத்தில் ஜார்ஜுக்கு நடந்தது பாகவதருக்கும் நடந்தது.

 3. வந்துட்டேன் வந்துட்டேன்... நல்லா இருந்தது பதிவு. ஆனா நாந்தான் படிக்கல :-) . . ஹீ ஹீ.... காரணம், இந்தப் படத்தை ரெண்டொரு நாள்ல பார்த்துபுட்டு படிப்பேன் :-) . .

 4. @Kumaran

  சென்ற வருடம் வந்த படங்களில் சிறந்த ஆங்கில படம்.., வார்ஹோர்ஸ் பாருங்க எனக்கு புடிக்கல உங்களுக்கு புடிச்சா சொல்லுங்க..

  @கொழந்த

  ஹம்ம்.., இப்புடியெல்லாம் உசுப்பேத்துனிங்கன்னா டெய்லியும் ஒன்னு எழுத ஆரம்பிச்சுடுவேன்..., சாக்கிரதை..,

 5. @கொழந்த
  தியாகராஜ பாகவதர் பத்தி கேள்வி பட்டு இருக்கேன்.தீராகாதலி படிக்கல, புத்தக கண்காட்சில வாங்குனதுல பாதியாவது படிக்கனும் அப்புறம் தான் வங்கனும்.. :)

  @கருந்தேள்
  // நல்லா இருந்தது பதிவு. ஆனா நாந்தான் படிக்கல :-) // சூப்பர் தலைவா.., படம் பாத்துட்டு கண்டிப்பா படிங்க...

 6. bandhu says:

  உங்கள் பட அறிமுகம் பிரமாதம்.
  Hugo பார்த்து விட்டீர்களா? எனக்கு மிகவும் பிடித்திருந்தது..

 7. @Bandhu
  இல்லை.., மார்ச் 16 தான் இண்டியாவில் ரிலீஸ்.., தியேட்டரில் பார்க்க வெயிட்டிங்..,

 8. "The Artist" படத்தை பத்தி ஏற்கனவே படிச்சு இருக்கேன்..ஆனா இன்னும் பார்க்கல...நல்ல பிரிண்ட் வந்தா கண்டிப்பா பார்ப்பேன் பாஸ்...
  Rating 9.5 ....ரொம்ப நல்ல படம் போல. வெரி இம்ப்ரெஸ்டா.???

 9. @ராஜ்

  நெஜமாவே வெரி இம்ப்ரஸ்ட் பெரிய திரையில் பார்த்ததால் கூட இருக்கலாம். டெக்னாலஜியை எப்படி பயன்படுத்தனும் என்பத்ற்க்கு சரியான உதாரணம் இந்த படம்..,

 10. JZ says:

  ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க!
  நான் "ப்ளாக்-அன்ட்-வைட் மெளன படங்கள்" எதுவும் பார்த்ததில்லை..

  Jean Dujardin ஒரு "ப்ரென்ச் ஜோர்ஜ் க்ளூனி"யாமே?? கேள்விப்பட்டதுலருந்து அவரு நடிப்பையும் பார்க்க காத்துக்கிட்டிருந்தேன். இந்த படம் அதுக்கு ஒரு மெகா சான்ஸா அமையம் போல..

 11. @JZ
  இந்த படத்த பாருங்க உங்களுக்கே மௌன படங்கள் மேல ஆர்வம் வரும்.., நிறைய க்ளாஸிக்ஸ் இருக்கு மௌன படங்களையும்..,


  Jean Dujardin நடிச்ச வேற எந்த படமும் பாத்தது இல்ல. இனிமே தான் பாக்கணும் :)

 12. இன்று தான் உங்கள் தளத்திற்கு வருகிறேன்.

  படத்தின் கதையை மட்டும் வாசிக்கவில்லை. விமர்சனம் மிக அழகாக எழுதுறீங்க.

  நல்ல ப்ரிண்ட் வந்ததும் தான் பார்க்கணும்.

 13. பாஸ்,
  உங்க பதிவோட லிங்கை என்னோட ஒரு பதிவுக்கு குடுத்து உள்ளேன்.
  தவறாக நினைக்க வேண்டாம்.

 14. @ஹாலிவுட்ரசிகன்

  நல்ல பிரிண்ட்லாம் வந்தாச்சு.., சீக்கிரம் பாருங்க..

  @ராஜ்

  இதுல என்ன பாஸ் யூஸ் பண்ணிக்கோங்க..

 15. Sumy says:

  excellent movie.....watched more than 10 times

 16. Sumy says:

  excellent movie.....watched more than 10 times

Leave a Reply


எதுனா சொல்லனும்ன்னு தோணுச்சின்னா சொல்லிட்டு போங்க...