வீராசாமி என்னும் உலக சினிமா - ஒரு பார்வை (பகுதி 2 )


                           
 போன பதிவில் இந்த படத்தின் கதையை உங்களுக்கு விளக்குவதாக கூறியிருந்தேன். ஆனால் அதை விட முக்கியமான விஷயம் படத்தின் genere. இதில் தான் இயக்குனர் தன் திறமையை காட்டி உள்ளார்.படத்தை ஒரு கோணத்தில் பார்த்தல்  romance,thriller,action,adventure,horror,comedy( black,white,red என்று இதில் எல்லா வகைகளும்).,என்று எந்த genere குள்ளும் படம் வராது.. இதுவே மற்றொரு கோணத்தில் பார்த்தல் படம் இந்த எல்லா genere குள்ளும்  அடங்கும்...அப்படி ஒரு திரை கதை நேர்த்தி....எவ்வளவு தான் என் மூளையை கசக்கினாலும் அந்த கதையை எப்படி விளக்குவது என்பது தான் எனக்கு இன்னும் பிடி படவே இல்லை.. இருந்தாலும் சில முக்கியமான காட்சிகளை மட்டும் விளக்குகிறேன்..

          ஒரு காட்சியில் விபச்சாரம் செய்ய மும்தாஜ் வற்புறுத்த பட்டு காலில் சூடு வைக்க படுவார்.அதன் வலியை மறப்பதர்காகவே அவர் இது வரை தொட்டு கூட பேசாத நாயகனின் போஸ்டரில் படுத்து தூங்குவாள்.மறுபடியும் அரங்கத்தில் பெரும்பாலனவர்கள் கண் கலங்கி போனார்கள்.இதன் மூலமாக தொட்டால் வருவது காமம் தொடாமல் வருவது காதல் என்ற புனிதமான கருத்தை பதிவு செய்கிறார்.. இப்படி நிறைய நிறைய...





        இந்த படம் வெற்றி பெறாமல் போனதால் இதில் உள்ள சில நல்ல காட்சிகள் பல திரை படங்களில் திருட பட்டன... உதாரணம்:- படையப்பா படத்தில் அந்த ஊஞ்சலில் ரஜினிகாந்த் அமரும் காட்சி. இந்த படத்தில் தனக்கு இடம் தராத வில்லியை எழுந்திரிக்க வைத்து அதே சோபாவில் அமருவார். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் இந்த படம் வருவதக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பே இது திருடப்பட்டது என்பது...

            இவ்வளவு  விஷயம் சொல்லிவிட்டேன் நாயகனின் கதாபாத்திரத்தை உங்களுக்கு சொல்லவில்லையே.. இந்த படத்தில் இவர் ஒரு வக்கீல் , எம்.எல்.ஏ , 33  எம்.எல்.ஏ கொண்ட கட்சியின் தலைவர், ஆளுங்கட்சிக்கு ஆதரவு தருபவர், ரவுடி,தாத்தா மன்னிக்கவும் தாதா இப்படி பல கதாபாத்திரங்களை தொழில் சுமந்திருக்கிறார்.. 10 வேடமிட்டு 10 கதாபாத்திரங்கள் செய்வது திறமை அல்ல ஒரே வேடத்தில் அத்தனையும் செய்வது தான் திறமை.

            மும்தாஜ் திருமணம் செய்துகொள்ளும் அந்த ரவுடி ( ஐயையோ .. கதைய சொல்லிட்டேனே..)  அவளை அடைய முயற்சி செய்வதும் அதற்க்கு எந்த response - உம் இல்லாமல் மரக்கட்டை போல் இருக்கும் மும்தாஜ்... என்ன ஒரு முற்போக்கு சிந்தனை இதற்கு பேர் தான் தெய்வீக காதல்  .. மறுபடியும் முடிகள் எல்லாம் நட்டு கொள்கின்றன..

          படம் பப்படம் ஆனாலும் எல்லோராலும் பெரிதும் பேசப்பட்ட விஷயம் நாயகனின் நடனம்..அத்தனை பாடல்களுக்கும் நாயகியை தொடாமல் அவர் புடவையை பிடித்து கொண்டோ இல்லை பாவாடையை பிடித்து கொண்டோ அவர் ஆடும் ஆட்டம் இதுவரை வெள்ளி திரை காணதது...

படத்தின் உச்ச கட்டம் என்பது கடைசி காட்சியாக மட்டும் இல்லாமல் படத்தின் சிறந்த காட்சியாகவும் அமைய வேண்டும்.துரதிஷ்டவசமாக எல்லா படங்களுக்கும் அப்படி அமைவதில்லை இந்த படத்தில் அப்படி அமைந்திருப்பது அதன் சிறப்பாகும்.தன் தங்கையின் கழுத்தில் கதி வைக்க பட்டதும் அவர் ஒரு கையில் அருவாளும் இன்னொறு கையில் தனது வேஷ்டியை அவிழ்த்து வைத்து கொண்டு வெறும் பட்டாபட்டி உடன் அவர் போடும் ஆட்டம்  வெறும் ஆட்டம் அல்ல தாண்டவம்.. ருத்ரதாண்டவம்..
அந்த சண்டைக்கு பிறகு வரும் அந்த காட்சி திரையை விட்டு மறைந்தாலும் நம் கண்ணை விட்டு மறைய மறுக்கிறது(அப்பாடி இங்க கதைய சொல்லல...). அந்த காட்சிக்கு அழாதவர்கள் கண்ணீருக்கும் கண்ணுக்கும் சம்மந்தம்  இல்லாதவர்கள்.. கல்லால் செய்யப்பட்ட இதயம் கொண்டவர்கள்..

         இந்த படம் வந்த காலத்தில் தோல்வி அடைந்தாலும் பிற்காலத்தில் தொலைகாட்சியில் வெகுஜன மக்களால்  பார்க்கப்பட்டு.. ஈர்க்கப்பட்டு .. கல்ட் தகுதியை பெற்றது...இனிமேலாவது இது போன்ற தலை சிறந்த படைப்புகளை அரங்கத்தில் கண்டு வெற்றியடைய வைக்குமாறு  கேட்டு கொள்கிறேன்.. நன்றி.. வணக்கம்...


VeeraSaamy : No One can Judge him...
My rating     :  *** / 10 ..

Post Comment


Follow Us in Facebook

3 Responses so far.

  1. test says:

    நன்றி! தங்கள் விரிவான விமர்சனத்திற்கு! சந்தர்பம் கிடைத்தால் பார்த்துவிடுகிறேன்! எப்புடி இப்பிடி...? :-)

  2. வணக்கம் சகோ, வீராச்சாமி பற்றி, வித்தியாசமான காமெடி கலந்த விமர்சனத்தை தந்திருக்கிறீங்க. ரசித்தேன்.

  3. Unknown says:

    But unga approach ennaku romba pidichuruku...









Leave a Reply


எதுனா சொல்லனும்ன்னு தோணுச்சின்னா சொல்லிட்டு போங்க...