வீராசாமி என்னும் உலக சினிமா - ஒரு பார்வை


       
      நல்ல சினிமா என்பதே அது வெளியாகும் காலத்தில் யாரும் சீண்டாமல் தோல்வி அடைவதும் கொஞ்ச நாள் கழித்து அதை தலையில் தூக்கி வைத்து கொண்டு கொண்டாடுவதும்  என்று ஆகிவிட்டது  .இதற்கு அன்பே சிவம், கற்றது தமிழ் போன்றவர்களின் படங்களே உதாரணம்.தமிழ் சினிமாவில் மட்டும் அல்ல ஹாலிவுட்-ல் கூட இந்த வரலாறு உண்டு குறிப்பாக imdb வெப்சைட்-ல் சிறந்த படங்களின் வரிசையில் முதல் இடத்தில இருக்கும் the  shawshank  redembtion மற்றும்  Reservoir  dogs , momento  போன்ற படங்கள் வெளியான போது யாரும் சீண்டாமல் தோல்வி அடைந்து பின்னர் ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்கள்.அந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கும் படம் தான் வீராசாமி.




        இந்த படத்தில் தங்கைக்காகவும் லட்சியதிர்காகவும் வாழ்ந்து மறைந்த ஒரு அரசியல்வாதியின் கதை.படத்தின் ஆரம்பம் முதலே நம்மை படத்தின் உள்ளே இழுத்து கொள்ளும் திரைக்கதை,வெளியே வர முடியாமல் உள்ளேயே தங்க வைக்கும பின்னணி இசை,விளிம்பு நிலை மக்கள் (இப்படில்லாம் டகிள் பாச்சா வேல காட்டுனா தான் பயலுக மெரலுவாங்க ) முதல் அதிகாரம் மிகுந்த அமைச்சர் வரை என்று எல்லா தரப்பினரையும் விவரிக்கும் பாத்திர படைப்புகள் இன்னும் என்ன என்ன ....


        படத்தின் ஆரம்ப காட்சியிலேயே அதிக  வட்டிக்கு கடன் வாங்கி நடுத்தர மக்கள் எப்படி அல்லல் படுகிறார்கள் என்பதை விவரிக்கிறார் இயக்குனர் ,அதிலும் குறிப்பாக வில்லியாக நடித்த நடிகை கண்களில் அப்படி ஒரு கொடுரம் நிச்சயம் த்ரிஷா,தமனா போல் பெரிய நடிகையாக வரும் வாய்ப்புக்கள் உள்ளன. அந்த கொடுமையை தட்டி கேட்கும் நாம் ஹீரோ தன்னுடைய இயல்பான சண்டை அசைவுகளால் நம்  மனதை தொடுகிறார்.அதிலும் அந்த சண்டைக்கு நடுவிலேயே வரும் காதல் காட்சியை பார்க்கும் போது  நம் உடலில் உள்ள முடிகள் எல்லாம் நேராக நிற்கின்றன அதாவது புல்லரித்து  விட்டது..


         அதன் பிறகு பொது இடத்தில் சிறு நீர் போறவனையும்  , பாக்கு போடுபவனையும் ,  லஞ்சம் வாங்குபவர்களையும் நகைச்சுவையாக அவர் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில்   தண்டிப்பது சிரிப்பை வர வளைத்தாலும் ,அதன் உண்மை நிலை நம் நெஞ்சை  சுடுகிறது.அடுத்த காட்சியில் ஜீன்ஸ் கேட்கும் தான் தங்கையிடம் சிறு வயதில் தான் பட்ட கஷ்டங்களை கூறும் போது அரங்கில் இருந்த 1000  பேரில் குறைந்தது 400 பேராவது அழுதிருப்பார்கள்.அதிலும் முக்கியமாக நம் நாயகனின் முக பாவனைகள் குறைவும் இல்லாமல் அதிகமும் இல்லாமல் நிறைவாக உள்ளது.தேசிய விருதில் அரசியல் உள்ளது என்பதை இவருக்கு விருது கிடைக்காத போதே தெரிந்து கொண்டேன்.
             படத்தில் என்னை மிகவும் பாதித்த கதாபாத்திரம் மும்தாஜ் தான்.ஒரு விபச்சாரியின் மகளாக பிறந்தும் தவறாக வாழாமல் உழைத்து வாழும் ஒரு விளிம்பு நிலை பாத்திர படைப்பு. ப்ளாக் டிக்கெட் விற்றாவது உழைத்து வாழ வேண்டும் என்னும் அவர் கொள்கை   2  வேலை சோற்றுக்காக விபச்சாரம் செய்யும் நடிகைகளுக்கு ஒரு படம்.அதை விட அவர்க்கு நாயகன் மேல் காதல் தோன்ற காரணமாக சொல்லப்படும் அந்த மாலை போடும் காட்சி. அப்பாடி... அதை பார்த்தும்  மறுபடியும் என் முடியெல்லாம் நேராக நின்று கொண்டது.
   
    படத்தில் மற்றொரு முக்கியமான பாத்திரம் நமது ஹீரோவின் தங்கையின் காதலுனுடையது.அவர் யார் என்று பார்த்தோமே ஆனால் அவர் தான் அந்த வட்டிக்கு விடும் வில்லியின் தம்பி.இருவருக்கும் காதல் வரும் காட்சியில் அந்த பெண்ணின் கண்கள் படபடப்பது கவிதை போல படமாக்க பட்டுள்ளது.

          படத்தின் மற்றொரு சாராம்சம் ஹீரோ அண்ட் ஹீரோயின் காதல் காட்சிகளில் தொடவே மாட்டர்கள். படத்தின் போட்டோ போடும் போதே ஹீரோயின் உதட்டை கடிப்பவர்கள்  இந்த படம் பார்த்தாவது திருந்த வேண்டும்.திருந்துவார்களா ...
   
         படத்தின் கதைக்கே போக வில்லை அதற்குள் இந்த பதிவு பெருசாகி விட்டது ஆகவே அடுத்த பதிவில் இந்த விமர்சனம் தொடரும்...தொடரும்....தொடரும்... இன்னும் படம் பார்க்காதவர்கள்  அடுத்த பதிவு போடுவதற்குள் படம் பார்த்து விட்டால் சிறப்பு..




Post Comment


Follow Us in Facebook

4 Responses so far.

  1. இது கிட்ட தட்ட ரெண்டு வருஷத்துக்கு முன்னால பழைய ப்ளாக்குல போட்ட பதிவு... இது சும்மாவே இருக்கே அப்புடின்னு ஒரு ரீபீட்டேய்...

  2. செமையா நக்கல் பண்ணியிருக்கீங்க... வரிக்கு வரி ரசிச்சு படிச்சேன்...

  3. சரியான நக்கல் தான் போங்க..

Leave a Reply


எதுனா சொல்லனும்ன்னு தோணுச்சின்னா சொல்லிட்டு போங்க...