மறுபடி பார்க்க விரும்பாத படங்கள்..,

            ஒரு புத்தகமோ திரைப்படமோ காலங்கள் கடந்தும் நிலைத்து நிற்பதற்க்கு மறுவாசிப்பும் மீள்பார்வைகளும் மிகவும் அவசியமாகின்றன. நமக்கு பிடித்த எல்லா புத்தகத்தையும் திரைப்படத்தையும் இன்னொரு முறை ஸ்பரிசிக்க அத்தனை சுலமபாய் தோன்றிவிடுவதில்லை. பெரும்பாலவானவற்றை மீண்டும் பார்க்க கூடாதென முடிவெடுத்தாலும் வெகுசிலவற்றை தான் "கொய்யால உசுரே போனாலும் பாக்க கூடாதுடா"ன்னு கங்கணம் கட்டிக்குவோம். அந்த அளவுக்கு என்னை உசுப்பேத்திய நான்கு படங்களை பற்றிய சிறு பார்வைதான் இந்த வெட்டி பதிவின் நோக்கம். நான்கு படங்களுமே முற்றிலும் வெவ்வேறு வகையானவை நான்கும் வெவ்வேறு மொழிகள் , வெவ்வேறு Genre, வெவ்வேறு வகையில் என்னை பாதித்தவை வெட்டி பில்டப்புகள் போதும் என நினைக்கிறேன் மேற்கொண்டு படிச்சிட்டு இந்த படங்களை பார்ப்பதா வேண்டாமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க..,

A Serbian Film :
       
          இளகிய மனது உடையவர்கள் , சீக்கிரத்தில் உணர்ச்சி வசப்படுபவர்கள் , கலாச்சார காவலர்கள், 15 வயதுக்கு குறைவானவர்கள், இந்த படத்தின் பேர் கேட்டாலே எரிச்சலடைபவர்கள் அனைவரும் இந்த படத்தையும் அடுத்த படத்தையும் ஸ்கிப் செய்வது அனவருக்கும் நல்லது..,

          ஒரு முன்னால் நீலப்பட நடிகனான நாயகன் ரொம்பவும் பண கஷ்டத்தில் இருக்கிறான் மகனின் பள்ளி செலவுக்கு கூட பாக்கெட்டை தடவும் நிலை. அவனுக்கு ஒரு கலைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வருகிறது அதன் மூலம் அவனுக்கு பெரும் தொகையும் கிடைப்பதால் சம்மதிக்கிறான். உண்மையில் அது கலைப்படம் அல்ல அது ஒரு Snuff Film என தெரிய வருகிறது.அப்புறம் என்ன நடக்கிறது என்பது தன் படத்தின் கதை. அது இன்னாப்பா Snuff Film ன்னு கேக்குறிங்களா ? அது ஒண்ணுயும் இல்ல எல்லா நிலப்படத்தையும் போலவே மேட்டர் நடக்கும் அதுவும் கொடூரமாய் கடைசியாய் இருவருமோ அல்லது ஒருவரோ கொலை செய்யப்படுவார்கள். ஆம், நிஜமாகவே கொலை செய்யப்படுவார்கள். இதற்க்கே அதிர்ச்சி அடைபவர்கள் அடுத்த பத்தி போகாமல் அப்பீட்டாவதே நல்லது..,

         குடும்ப அமைப்பில் வாழ்ந்த எந்தவொரு மனிதனாலும் அத்தனை சுலபத்தில் ஜீரணிக்க இயலாத காட்சிகள் நிறைந்த படமாகும். கர்பமாக இருக்கும் பெண்ணுக்கு ஒரு தடியன் பிரசவம் பார்க்கிறான் அப்போது பிறக்கும் குழந்தையை அதே தடியன் கற்பழிக்கிறான்.., எஸ், புதிதாய் பிறந்த குழந்தையை தான். இன்னொரு காட்சியில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெண்ணை ஒருவன் கற்பழித்த படியே வெட்டி கொள்கிறான், போதை மருந்து அதிகம் செலுத்தப்பட்ட ஹீரோ மயக்கமடைந்து இருக்கும் தன் மகனையே கற்பழிக்கிறான்.., இதெல்லாம் கூட பரவாயில்லை (என்னது பரவாயில்லையா ??) கிளைமேக்ஸில் ஹீரோ , அவனின் மனவி மற்றும் மகன் இறந்து கிடக்க அப்போது ஒரு தடியன் "let's start with the small one" அப்புடின்னு சொல்லுவான் பாருங்க என்ன சொல்றது அப்புடியே உறைஞ்சு போய்ட்டேன்.., இந்த படம் பாருங்கன்னு யாருக்கும் சிபாரிசெல்லாம் பண்ணல இதெல்லாம் படிச்சதுக்கு அப்புறமும் பாக்கனும்ன்னு தோணிச்சுன்னா பாருங்க..,

Audition :

         இந்த படத்தை இந்த லிஸ்ட்டில் சேர்க்க வைத்த காட்சி..,
        " காதலி , செகரக்டரி, மகனின் காதலி, வேலைக்காரி என தனக்கு தெரிந்த அத்தனை பேருடனும் நாயகன் உறவு கொள்வதை போல காட்சிகள் மாறி மாறி சர்ரேலிஸ சாயலுடன் காட்சிகள் ஓடுகின்றன. மயக்கம் தெளிந்து ஓர் புதிய இடத்தில் விழிக்கிறான் பக்கத்து அறையில் அவன் காதலி வாந்தி எடுத்து கொண்டிருப்பது தெரிகிறது. அவன் பார்த்து கொண்டிருக்கும் போதே அவனருகில் இருந்த மூட்டை துள்ளி குதிக்கிறது. அந்த மூட்டையில் இருந்து மனிதனை ஒத்த ஒரு உருவம் வெளிவருகிறது. ஆம் அவன் மனிதன் தான் ஆனால் இரண்டு பாதங்களும் வெட்டப்பட்டு , நாக்கு அறுக்கப்பட்டு ,  கைகளில் முக்கிய மூன்று விரல்கள் வெட்டப்பட்டு மனித உருவமே சிதைக்கப்பட்ட மனிதன். அவன் தன் வெட்டப்படாத விரலை கொண்டு அருவெருப்பான முறையில் நாயகியை அழைக்க அவள் தான் எடுத்த வாந்தியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வருகிறாள். பல நாள் பழைய சோத்தயே பாக்காதவன் பந்திக்கு பாய்வது போல் பாய அவள் அந்த வாந்தியை கிழே வைக்க நாக்கில்லா தன் வாயால் அவன் அதை  வாய் வைத்து உறிந்து குடிக்க..," ஹீரோயின் வாந்தி எடுத்தாங்களோ இல்லையோ எனக்கு கொமட்டிட்டு வந்துடுச்சு..,

           பிரபல ஜப்பானிய இயக்குநர் Takishe Mike இயக்கிய முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று. மேற்கூறிய காட்சிகளை தொடர்ந்து வரும் 10 நிமிட டார்ச்சர் சீன் ரொம்ப ஃபேமஸ். டார்ச்சர் என்றதும் ரத்தம், கொடூரம் என்றெல்லாம் நினைக்க வேண்டாம் வெறும் குண்டூசியை வைத்தே டரியல் காட்டி இருப்பார்கள். அந்த வாந்தி காட்சியை மட்டும் பொறுத்து கொண்டால் ஒரு அட்டகாசமான திரில்லர் பார்க்கலாம்.இங்கே கொடுக்க போகும் லிஸ்ட்டில் நான் சிபாரிசு செய்யும் ஒரே படம் இது தான்.

Seven Pounds : 

        படம் பார்ப்பவனின் சட்டையை கொத்தோடு பிடித்து  திரைக்குள் இழுத்து கண்ணுக்குள் க்ளிசெரின் ஊத்தும் கொடுமையை அனுபவித்தது உண்டா ?. ஒரே ஒரு முறை அனுபவித்து பார்க்க விருப்பமா ? ஆம் எனில் இந்த படத்தை பார்த்தே தீர வேண்டிய பட பட்டியலில் உடனடியாக இணைத்து கொள்ளவும்..,  படத்தோட கதை என்னன்னா கொஞ்ச வருஷத்துக்கு முன்னால முரளி மற்றும் லைலா நடித்து வெளிவந்த "காமராசு" என்ற திரைப்படம் நினைவிருகிறதா இல்லைன்னாலும் ஒரு பிரச்சனையும் இல்லை. ரெண்டுமே கிட்டதட்ட ஒரே கதை தான் காமராசுல விசுவாசத்துக்காக முரளி தன் உடம்புல இருக்குற அத்தனை பாகத்தையும் தானம் குடுத்துட்டு மர்கயா ஆகிடுவார். இந்த படத்துல வில் ஸ்மித் குற்ற உணர்ச்சியால் தானம் குடுத்துட்டு போய் சேர்வார்.

      Persuit of Happyness படத்தின் இணை மறுபடி இணைந்த படமென்பதால் கொஞ்சம் ஆர்வம் இருந்தது. படம் ஆரம்பித்த கணம் முதல் இயக்குநரும் வில் ஸ்மித்தும் நம்மை இம்சிக்க தொடங்கி விடுகின்றனர். செயற்க்கையான காட்சிகள் , மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு, வலிந்து திணிக்கப்பட்ட செண்டிமெண்ட் காட்சிகள், ஒரு பாடாவதி ட்விஸ்ட் என சகிக்கவே முடியாத படமாக இருக்கிறது. டி.வி சீரியல்களை அழுது கொண்டே பார்க்கும் வழக்கம் உள்ளவர் எனில் தவறாமல் பார்க்க வேண்டிய கண்ணீர் காவியம்.

மனம் கொத்தி பறவை :


           ராஜா, அமுதே, தீபாவளி போன்ற கொடூர மொக்கை படங்களின் இயக்குநர் எழிலின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்திருக்கும் படம் என நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. நகைச்சுவை படம் என்ற விளம்பரம் பார்த்து ஏதேவொரு குருட்டு தைரியத்தில் படத்துக்கு போன என்னை கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் கதற கதற மொக்கை போட்டனர்.

       படத்தில் வரும் ஜோக்குகெல்லாம் இயக்குநருக்கே சிரிப்பு வந்து இருந்தால் ஆச்சர்யம். படம் தான் மொக்கை ஹீரோயினையாவது சைட் அடிக்கலாம்ன்னு பாத்தா ஏதோவொரு ஆண்டி ஹீரோயினாய் போட்டு கடுப்பேற்றி விட்டனர் பட்ஜெட் ப்ராப்ளம் போல. சீரியஸான காட்சியா நகைச்சுவை காட்சியா என நடித்தவர்களுக்கே தெரியாத காரணத்தால் பார்க்கும் நமக்கு புரிவதற்க்கான நியாயம் கிடையாது. சமீபகாலத்தில் இப்படி ஒரு கேனத்தனமான படத்தை பார்த்ததில்லைன்னு பொய்லாம் சொல்ல மாட்டேன் அடிக்கடி பாத்துட்டு தான் இருக்கேன். நெஞ்சுல தெடமும் திராணியும் இருப்பவர்கள் மட்டும் பார்க்கவும்..,

Post Comment


Follow Us in Facebook

7 Responses so far.

  1. Anonymous says:

    நேத்துதான் A SERBIAN FILM பாத்தேன் முடியல பாஸ்..... வாழ்க்கையே வெறுத்துப்போச்சு:(

    வருண் ப்ரகாஷ்

  2. ஹய்யோ ... நீங்க சொன்ன லிஸ்ட்ல A Serbian Film மற்றும் Seven Pounds பார்த்தாச்சு. உங்க கருத்தோடு அப்படியே ஒத்துப்போகிறேன்.

    Audition நல்ல த்ரில்லர்னு சொல்றீங்க. அந்த ஸீனை forward பண்ணிட்டு பார்த்துடுறேன்.

  3. JZ says:

    அப்பாடி.. இதுல எதுவுமே பார்க்கலை.. பார்க்க வேணாம்னே முடிவு பண்ணிக்கிட்டு போறேன்!

  4. பாஸ்,
    இதுல seven Pound மட்டும் பார்த்து இருக்கிறேன்... மிச்ச படங்களை கண்டிப்பாய் தவிர்த்து விடுவது தான் எனக்கு நல்லது, நமக்கு ஹாரர் படங்கள்னாலே ரொம்ப ரொம்ப அலர்ஜி..அதுவும் "Serbian Film " மாதிரி படங்கள் ட்ரைலர் கூட பார்க்கிற மன தைரியம் நமக்கு இல்லை..

  5. @வருண் ப்ரகாஷ்
    இதுக்கே வெறுத்துட்டா எப்புடி இன்னும் பல படங்கள் இருக்கே :P

    @ஹாலிவுட்ரசிகன்
    Audition பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்..,

    @JZ
    நல்ல முடிவு..,

    @ராஜ்
    ஒரு தடவ டிரை பண்ணி பாருங்களேன்...

  6. Anonymous says:

    எனக்கு செவென் பவுண்ட்ஸ் பிடிசிருந்துச்சு. ஒரு வேலை வில் ஸ்மித் காரணமா இருக்கலாம். மத்ததெல்லாம் அப்பா கேட்டவே கொமட்டுது ...

Leave a Reply


எதுனா சொல்லனும்ன்னு தோணுச்சின்னா சொல்லிட்டு போங்க...