Trainspotting [1996] - போதையே வாழ்க்கையாய்

           ”வாழ்க்கையை தேர்ந்தெடுங்கள்.., வேலையை தேர்ந்தெடுங்கள்.., கேரியரை தேர்ந்தெடுங்கள்.., டி.வியை , வாசிங் மெசினை , உடல் நலத்தை , லோ கொல்ஸ்ட்ராலை , டெண்டல் இன்சூரண்ஸை , நண்பர்களை தேர்ந்தெடுங்கள்  , நல்ல வீட்டை தேர்ந்தெடுங்கள் .., உங்கள் எதிர்காலத்தை தேர்ந்தெடுங்கள் .., உங்கள் வாழ்க்கையை தேர்ந்தெடுங்கள் ..., ஆனால் என்னையும் ஏன் அதையே செய்ய சொல்ல்கிறீர்கள்.., நான் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கவில்லை வேறு எதையோ தேர்ந்தெடுக்கிறேன்.., காரணம் ஏதுமில்லை.., யாருக்கு காரணம் வேண்டும் கையில் ஹெராயின் இருக்கும் போது...,”  -- இப்படி அதகளமான ஒரு வசனத்தோடு ஆரம்பம் ஆகிறது படம் .      படத்தோட தலைப்ப அப்படியே தமிழ் படுத்துனா “ரயிலை வேடிக்கை பார்த்தல்” -ன்னு அர்த்தம் வரும் அதாவது வெட்டியா பொழுத போக்குறதுன்னு வைச்சுக்கல்லாம். படம் ஆரம்பிக்கும் போது ரெண்டு பேரை போலிஸ் துரத்துகிறது அப்படியே இருவரில் ஒருவனான ரெண்டனின் வாய்ஸ் ஓவரில் மேற்கூரிய வசனங்களோடு தொடங்குகிறது படம்.ரெண்டன் , தத்துவமாய் பேசும் சிக் பாய் , அழகான டாமி , கொஞ்சம் லூசுத்தனமான ஸ்பட் , திடீர்ன்னு சைக்கோவாக மாறும் பெக்பி (குட்ஃபெல்லாஸில் வரும் ஜோ பெப்ஸ்கியை  நியாபகப்படுத்துகிறார்) அனைவரும் எப்பொதும் போதையிலையே இருப்பவர்கள் திடீரென அந்த பழகத்தை நிறுத்த முடிவு செய்கிறார்கள்.
     
      போதை பழக்கத்தை நிறுத்திய பிறகு கிறுக்குத்தனமா ஏதேதோ பண்றாங்க..., பார்க்கில் உள்ள நாயோட லுல்லாவ குறிவைச்சு சுடுறாங்க .ஸ்படின் சொதப்பலா ஒரு இண்டர்வியூ , பெக்பியால பார்ல ஒரு சண்ட இப்படியே..., டாபியும் அவன் கேர்ள் பிரண்டும் சல்சா செய்யும் வீடியோவை திருடி பாக்கும் ரெண்டன் நமக்கும் ஒரு ஃபிகர் வேணும்ன்னு முடிவு பண்ணிட்டு பப்புக்கு போறார்.அங்க ஒர் சின்ன பொண்ண உஷாரும் பண்ணுறார்.

       நைட் எல்லாம் முடிச்சுட்டு காலையில எழுத்து பாக்கும் போது தான் அது ஒரு ஸ்கூல் பொண்ணுன்னு தெரியுது.அங்க சின்ன பொண்ணுங்களோட உறவு வைச்சுக்குறது அந்த ஊர்ல (Scotland) சட்டப்படி தப்பு போல.., அதே நைட் அவங்க குரூப்புல எல்லாருக்கும் ஒரு பொண்ணு கிடைக்குது எல்லாம் பிரச்சையிலையே முடியுது.பொண்ணுங்க விஷயம் சொதப்புனதால மறுபடியும் போதைப்பக்கம் திருப்புகிறார்கள் அவங்க 5 பேரும்.போதையிலையே இருக்க பணம் தேவை அதுக்காக திருட ஆரம்பிக்குராங்க அப்போ ஒரு தடவ போலீஸ் துரத்த அதுதான் முதல் காட்சி. போலீஸ்ல ரெண்டனும் ஸ்பட்டும் மாட்டிக்கிறாங்க அதுல ஸ்பட்டுக்கு மட்டும் ஜெயில் தண்டனை விதிக்க படுகிறது..,

     ஸ்பட் தன்னால தான் ஜெயிலுக்கு போய்ட்டதா நினைக்குற ரெண்டன் யாரயுமே பாக்காம இருக்கார் இந்த நேரத்துல டாமிக்கு எயிட்ஸ் வந்துருது.., டாமிய ஒருதடவ பாத்துட்டு உருப்படியா வேல பாகலாம்ன்னு லண்டன்க்கு போறார் அங்கையும் பெக்பியும் சிக் பாயும் வந்து ஒட்டி கொண்டு இம்சை பண்ணுகிறார்கள்.., டாமி இறந்துவிட அப்போது ஒன்று கூடும் நண்பர்கள் ஒரு திருட்ட பண்ணி செட்டில் ஆகிவிட முடிவு செய்கிறார்கள்.அந்த திருட்டை எப்படி செய்தர்கள் , அதன் மூலம் அனைவரும் செட்டில் ஆனார்களா என்பது தான் மீதி கதை..,

      Actually  படத்தில் கதைன்னு எதுவும் கிடையாது வெறும் கோர்வையான் காட்சிகள் மட்டுமே.., அதிரடியான வசனங்கள் தான் படத்தின் மிகபெரிய பலம் . முதல் பத்தி ஒரு உதாரணம் மட்டும் தான்.., எனக்கு ரொம்ப பிடித்த இன்னொரு வசனம்..., அவர்கள் மறுபடியும் போதையை தேர்ந்தெடுக்கும் போது வருவது. “  We would have injected vitamin C if only they had made it illegal! ”..,  இப்படி படம் முழுக்க கிண்டலான தொனியிலையே செல்லும் வசனங்கள்.

     படத்தில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாகவே சுற்றினாலும் யாருக்கும் யார் மீதும் பிரியம் ஏதும் இருக்காது.., டாமிக்கு எயிட்ஸ் வந்த போது நல்ல வேல நமக்கு வரல என்ற ரீதிலயே எல்லோரும் பேசிக்கொள்வார்கள்.., அப்புறம் வாய்ஸ் ஓவரில் நண்பர்களை “so  called mates” என்றே எப்போதும் விளிகிறார் ரெண்டன்..,

      இதற்க்கு முன்னால் Danny Boyle-ன் ஸ்லம்டாக் மில்லினியர் மற்றும் 127 ஹவர்ஸ் பார்த்து இருக்கிறேன். இரண்டு படங்களும் ஏற்படுத்தாத ஒரு அபிமானத்தை இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது.. :).. 1996-ம் ஆண்டின் கேன்ஸ் விழாவில் படத்தின் கதைத்தளத்தின் காரணமாக ”out of competition” பிரிவில் திரையிடப்படாலும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது இப்ப்டதின் சிறப்பு..,

Trainspotting : A film which can glue you for 89 minutes.. :)
My Rating     : 8 / 10
[ Read More ]

வீராசாமி என்னும் உலக சினிமா - ஒரு பார்வை (பகுதி 2 )


                           
 போன பதிவில் இந்த படத்தின் கதையை உங்களுக்கு விளக்குவதாக கூறியிருந்தேன். ஆனால் அதை விட முக்கியமான விஷயம் படத்தின் genere. இதில் தான் இயக்குனர் தன் திறமையை காட்டி உள்ளார்.படத்தை ஒரு கோணத்தில் பார்த்தல்  romance,thriller,action,adventure,horror,comedy( black,white,red என்று இதில் எல்லா வகைகளும்).,என்று எந்த genere குள்ளும் படம் வராது.. இதுவே மற்றொரு கோணத்தில் பார்த்தல் படம் இந்த எல்லா genere குள்ளும்  அடங்கும்...அப்படி ஒரு திரை கதை நேர்த்தி....எவ்வளவு தான் என் மூளையை கசக்கினாலும் அந்த கதையை எப்படி விளக்குவது என்பது தான் எனக்கு இன்னும் பிடி படவே இல்லை.. இருந்தாலும் சில முக்கியமான காட்சிகளை மட்டும் விளக்குகிறேன்..

          ஒரு காட்சியில் விபச்சாரம் செய்ய மும்தாஜ் வற்புறுத்த பட்டு காலில் சூடு வைக்க படுவார்.அதன் வலியை மறப்பதர்காகவே அவர் இது வரை தொட்டு கூட பேசாத நாயகனின் போஸ்டரில் படுத்து தூங்குவாள்.மறுபடியும் அரங்கத்தில் பெரும்பாலனவர்கள் கண் கலங்கி போனார்கள்.இதன் மூலமாக தொட்டால் வருவது காமம் தொடாமல் வருவது காதல் என்ற புனிதமான கருத்தை பதிவு செய்கிறார்.. இப்படி நிறைய நிறைய...

        இந்த படம் வெற்றி பெறாமல் போனதால் இதில் உள்ள சில நல்ல காட்சிகள் பல திரை படங்களில் திருட பட்டன... உதாரணம்:- படையப்பா படத்தில் அந்த ஊஞ்சலில் ரஜினிகாந்த் அமரும் காட்சி. இந்த படத்தில் தனக்கு இடம் தராத வில்லியை எழுந்திரிக்க வைத்து அதே சோபாவில் அமருவார். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் இந்த படம் வருவதக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பே இது திருடப்பட்டது என்பது...

            இவ்வளவு  விஷயம் சொல்லிவிட்டேன் நாயகனின் கதாபாத்திரத்தை உங்களுக்கு சொல்லவில்லையே.. இந்த படத்தில் இவர் ஒரு வக்கீல் , எம்.எல்.ஏ , 33  எம்.எல்.ஏ கொண்ட கட்சியின் தலைவர், ஆளுங்கட்சிக்கு ஆதரவு தருபவர், ரவுடி,தாத்தா மன்னிக்கவும் தாதா இப்படி பல கதாபாத்திரங்களை தொழில் சுமந்திருக்கிறார்.. 10 வேடமிட்டு 10 கதாபாத்திரங்கள் செய்வது திறமை அல்ல ஒரே வேடத்தில் அத்தனையும் செய்வது தான் திறமை.

            மும்தாஜ் திருமணம் செய்துகொள்ளும் அந்த ரவுடி ( ஐயையோ .. கதைய சொல்லிட்டேனே..)  அவளை அடைய முயற்சி செய்வதும் அதற்க்கு எந்த response - உம் இல்லாமல் மரக்கட்டை போல் இருக்கும் மும்தாஜ்... என்ன ஒரு முற்போக்கு சிந்தனை இதற்கு பேர் தான் தெய்வீக காதல்  .. மறுபடியும் முடிகள் எல்லாம் நட்டு கொள்கின்றன..

          படம் பப்படம் ஆனாலும் எல்லோராலும் பெரிதும் பேசப்பட்ட விஷயம் நாயகனின் நடனம்..அத்தனை பாடல்களுக்கும் நாயகியை தொடாமல் அவர் புடவையை பிடித்து கொண்டோ இல்லை பாவாடையை பிடித்து கொண்டோ அவர் ஆடும் ஆட்டம் இதுவரை வெள்ளி திரை காணதது...

படத்தின் உச்ச கட்டம் என்பது கடைசி காட்சியாக மட்டும் இல்லாமல் படத்தின் சிறந்த காட்சியாகவும் அமைய வேண்டும்.துரதிஷ்டவசமாக எல்லா படங்களுக்கும் அப்படி அமைவதில்லை இந்த படத்தில் அப்படி அமைந்திருப்பது அதன் சிறப்பாகும்.தன் தங்கையின் கழுத்தில் கதி வைக்க பட்டதும் அவர் ஒரு கையில் அருவாளும் இன்னொறு கையில் தனது வேஷ்டியை அவிழ்த்து வைத்து கொண்டு வெறும் பட்டாபட்டி உடன் அவர் போடும் ஆட்டம்  வெறும் ஆட்டம் அல்ல தாண்டவம்.. ருத்ரதாண்டவம்..
அந்த சண்டைக்கு பிறகு வரும் அந்த காட்சி திரையை விட்டு மறைந்தாலும் நம் கண்ணை விட்டு மறைய மறுக்கிறது(அப்பாடி இங்க கதைய சொல்லல...). அந்த காட்சிக்கு அழாதவர்கள் கண்ணீருக்கும் கண்ணுக்கும் சம்மந்தம்  இல்லாதவர்கள்.. கல்லால் செய்யப்பட்ட இதயம் கொண்டவர்கள்..

         இந்த படம் வந்த காலத்தில் தோல்வி அடைந்தாலும் பிற்காலத்தில் தொலைகாட்சியில் வெகுஜன மக்களால்  பார்க்கப்பட்டு.. ஈர்க்கப்பட்டு .. கல்ட் தகுதியை பெற்றது...இனிமேலாவது இது போன்ற தலை சிறந்த படைப்புகளை அரங்கத்தில் கண்டு வெற்றியடைய வைக்குமாறு  கேட்டு கொள்கிறேன்.. நன்றி.. வணக்கம்...


VeeraSaamy : No One can Judge him...
My rating     :  *** / 10 ..
[ Read More ]

Transformers: Dark of the Moon [2011] - ஆளவிடுங்கடா சாமி..

           எப்போ தியேட்டர் போனாலும் சென்சார் சர்ட்டிபிகேட் போடும் போதில்லிருந்து படம் பாக்கனும் அப்போ தான் எனக்கு முழுசா படம் பாத்த திருப்தி இருக்கும். ஆனா இந்த படத்துக்கு கொஞ்சம் லேட்டா தான் போனேன் ஆரம்பத்துல கொஞ்சம் ஃபீல் பண்ணிணேன் 5 நிமிஷம் மிஸ் ஆகிடுச்சேன்னு வருத்தப்பட்டேன் ஆனா அப்புறம் அப்புடியே உல்டாவாகிட்டு .. :)


          படத்தோட கதை என்னனன்னா .....................................   1961 - ல சைபட்ட்ரான்ல போர் நடக்குது அப்போ ஒரு விண்வெளி கப்பல் நிலாவுக்கு பின்பக்கம் (வானத்துல ரவுண்டா இருக்குமே அந்த நிலா தான் தப்பா நினைக்க கூடாது) விழுந்துடுது.., நிலாவுக்கு நம்ம ஆம்ஸ்ட்ராங் குரூப்பு அத லைட்டா பாத்துட்டு வந்துடுராங்க...

             இப்போ 2011   நம்ம ஹீரோ இப்போ காலேஜ் முடிச்சிட்டு வேல தேடுறார் ஒரு ஃபிகர உஷார் பண்ணிட்டு சுத்துறார் கடைசியா ஒரு வேலைல சேருறார்..,
அதே நேரத்துல ஆட்டோபாட்ஸ்லாம் அமெரிக்க ராணுவத்துக்கு உதவியா ரஷ்யாவுக்கு போய் (என்ன ஒரு அரசியல் உள்குத்து) செர்னாபில் அணுமின் நிலையத்துல ஒரு டப்பாவ கண்டு பிடிக்குது.அது ஆக்ஸிடெண்டான கப்பலோட பவர் சோர்ஸ் அதான்னும் அது எப்டி கேக்குது. ”சண்முகம் உட்றா போகட்டும் ” அப்படிங்குர கணக்கா நிலாவுக்கு வண்டிய விட்ராங்க.

        அந்த கேப்புல மனுஷ்ங்க கூட டிரான்ஸ்ஃபார்மர்ஸ் வேல செய்ரது புடிக்காத ஒரு  டிரான்ஸ்ஃபார்மர்ஸ் குரூப்பு நாசா ஆளுங்களையெல்லாம் போட்டு தள்ள ஆரம்பிக்குது அதுல ஒருத்தர் சாகுரத்துக்கு முன்னால சிலபல பழைய பேப்பர குடுக்க அத எடுத்துட்டு மனுஷன் ரஷ்யாவுக்கு கெளம்பிடுறாரு. அங்க இருந்து கிடைச்ச தகவல்களோட உலகத்த காப்பாத்த கெளம்பிடுறாரு..,

       நிலாவுக்கு போன ஆப்டிமஸ் பிரைம் செத்துபோன செனிடல் பிரைம்ம கூட்டிட்டு சாரி தூக்கிட்டு அஞ்சு பில்லரையும் தூக்கிட்டு வருது . செனிட்டல் பிரைம்முக்கு உயிர் குடுக்க அது எங்க மத்த பில்லர்ன்னு கேக்க .., அந்த பில்லர வைச்சு டெலிபோர்ட்(பிரபஞ்சத்தின் ஒரு மூலையின் இருந்து இன்னொரு மூளைக்கு நினைத்த்வுடன் செல்வது) பண்ண முடியும்ன்னும் அப்புறம் அது மனுஷங்கள்ட்ட சண்ட போட்டு உலகத்த அழிக்க திட்டம் போடுது அதாவது மனுஷங்கள வைச்சு அழிச்சு போன அவங்க உலகத்த கட்ட டிரை பண்ணுது.

       மனுஷங்க ஆட்டோபாட்ஸ்க்கு துரோகம் பண்ண , ஹீராயினோட பாஸ் அதுங்களுக்கு சப்போர்ட்டா ஹீரோயின கடத்த , லாரி , கார் , கம்பியூட்டர் , மவுஸ் , வாட்ச் , வெளக்கமாரு , செருப்பு இப்புடி யெல்லாம்  டிரான்ஸ்ஃபார்மர்ஸா மாற நடுவுல நம்ம உயிர் போக.. ஸ்ஸ்ஸப்பாபா முடியல...,

      எனக்கு ஒரு மேட்டர் தான் புரியவே இல்ல என்ன எளவுக்கு இத 2.30 மணிநேரம் எடுத்தாங்கன்னு .., ரொம்ப மெனக்கெட்டு ஆக்‌ஷன் காட்ச்சிகளெல்லாம் எடுத்து இருக்காங்க பட் எனக்கு தான் தூக்கம் வந்துடுச்சு. நா கடைசில  டிரான்ஸ்ஃபார்மர்ஸ்லாம் அனக்கோனடா போல வர பைட்டுக்கு நா 3D கண்ணாடிய கலட்டிட்டு எதுனா பிகர் பிருக்கான்னு பாக்க கெளம்பிட்டேன் அவ்ளோ மொக்க..,

        படம் முடிச்சதும் மனசுக்குள்ள ஒரே ஒரு கேள்வி தான் வந்துச்சு .., என்னோட காசு திரும்ப கிடைக்குமா ......................

       தியேட்டர விட்டு வெளில வந்தப்ப அப்போதான் மழை  விட்டிருக்கும் போல .., இ நாக்ஸ் டூ ரூம் வரக்கும் ரம்யமான பயணம்.. படத்துக்கு போனதுல இது ஒண்ணு மட்டும் தான் நல்ல விஷயம்....


Transformers: Dark of the Moon : Yet Another Hollywood Action Trash....

My Rating  : 2 / 10
[ Read More ]

வீராசாமி என்னும் உலக சினிமா - ஒரு பார்வை


       
      நல்ல சினிமா என்பதே அது வெளியாகும் காலத்தில் யாரும் சீண்டாமல் தோல்வி அடைவதும் கொஞ்ச நாள் கழித்து அதை தலையில் தூக்கி வைத்து கொண்டு கொண்டாடுவதும்  என்று ஆகிவிட்டது  .இதற்கு அன்பே சிவம், கற்றது தமிழ் போன்றவர்களின் படங்களே உதாரணம்.தமிழ் சினிமாவில் மட்டும் அல்ல ஹாலிவுட்-ல் கூட இந்த வரலாறு உண்டு குறிப்பாக imdb வெப்சைட்-ல் சிறந்த படங்களின் வரிசையில் முதல் இடத்தில இருக்கும் the  shawshank  redembtion மற்றும்  Reservoir  dogs , momento  போன்ற படங்கள் வெளியான போது யாரும் சீண்டாமல் தோல்வி அடைந்து பின்னர் ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்கள்.அந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கும் படம் தான் வீராசாமி.
        இந்த படத்தில் தங்கைக்காகவும் லட்சியதிர்காகவும் வாழ்ந்து மறைந்த ஒரு அரசியல்வாதியின் கதை.படத்தின் ஆரம்பம் முதலே நம்மை படத்தின் உள்ளே இழுத்து கொள்ளும் திரைக்கதை,வெளியே வர முடியாமல் உள்ளேயே தங்க வைக்கும பின்னணி இசை,விளிம்பு நிலை மக்கள் (இப்படில்லாம் டகிள் பாச்சா வேல காட்டுனா தான் பயலுக மெரலுவாங்க ) முதல் அதிகாரம் மிகுந்த அமைச்சர் வரை என்று எல்லா தரப்பினரையும் விவரிக்கும் பாத்திர படைப்புகள் இன்னும் என்ன என்ன ....


        படத்தின் ஆரம்ப காட்சியிலேயே அதிக  வட்டிக்கு கடன் வாங்கி நடுத்தர மக்கள் எப்படி அல்லல் படுகிறார்கள் என்பதை விவரிக்கிறார் இயக்குனர் ,அதிலும் குறிப்பாக வில்லியாக நடித்த நடிகை கண்களில் அப்படி ஒரு கொடுரம் நிச்சயம் த்ரிஷா,தமனா போல் பெரிய நடிகையாக வரும் வாய்ப்புக்கள் உள்ளன. அந்த கொடுமையை தட்டி கேட்கும் நாம் ஹீரோ தன்னுடைய இயல்பான சண்டை அசைவுகளால் நம்  மனதை தொடுகிறார்.அதிலும் அந்த சண்டைக்கு நடுவிலேயே வரும் காதல் காட்சியை பார்க்கும் போது  நம் உடலில் உள்ள முடிகள் எல்லாம் நேராக நிற்கின்றன அதாவது புல்லரித்து  விட்டது..


         அதன் பிறகு பொது இடத்தில் சிறு நீர் போறவனையும்  , பாக்கு போடுபவனையும் ,  லஞ்சம் வாங்குபவர்களையும் நகைச்சுவையாக அவர் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில்   தண்டிப்பது சிரிப்பை வர வளைத்தாலும் ,அதன் உண்மை நிலை நம் நெஞ்சை  சுடுகிறது.அடுத்த காட்சியில் ஜீன்ஸ் கேட்கும் தான் தங்கையிடம் சிறு வயதில் தான் பட்ட கஷ்டங்களை கூறும் போது அரங்கில் இருந்த 1000  பேரில் குறைந்தது 400 பேராவது அழுதிருப்பார்கள்.அதிலும் முக்கியமாக நம் நாயகனின் முக பாவனைகள் குறைவும் இல்லாமல் அதிகமும் இல்லாமல் நிறைவாக உள்ளது.தேசிய விருதில் அரசியல் உள்ளது என்பதை இவருக்கு விருது கிடைக்காத போதே தெரிந்து கொண்டேன்.
             படத்தில் என்னை மிகவும் பாதித்த கதாபாத்திரம் மும்தாஜ் தான்.ஒரு விபச்சாரியின் மகளாக பிறந்தும் தவறாக வாழாமல் உழைத்து வாழும் ஒரு விளிம்பு நிலை பாத்திர படைப்பு. ப்ளாக் டிக்கெட் விற்றாவது உழைத்து வாழ வேண்டும் என்னும் அவர் கொள்கை   2  வேலை சோற்றுக்காக விபச்சாரம் செய்யும் நடிகைகளுக்கு ஒரு படம்.அதை விட அவர்க்கு நாயகன் மேல் காதல் தோன்ற காரணமாக சொல்லப்படும் அந்த மாலை போடும் காட்சி. அப்பாடி... அதை பார்த்தும்  மறுபடியும் என் முடியெல்லாம் நேராக நின்று கொண்டது.
   
    படத்தில் மற்றொரு முக்கியமான பாத்திரம் நமது ஹீரோவின் தங்கையின் காதலுனுடையது.அவர் யார் என்று பார்த்தோமே ஆனால் அவர் தான் அந்த வட்டிக்கு விடும் வில்லியின் தம்பி.இருவருக்கும் காதல் வரும் காட்சியில் அந்த பெண்ணின் கண்கள் படபடப்பது கவிதை போல படமாக்க பட்டுள்ளது.

          படத்தின் மற்றொரு சாராம்சம் ஹீரோ அண்ட் ஹீரோயின் காதல் காட்சிகளில் தொடவே மாட்டர்கள். படத்தின் போட்டோ போடும் போதே ஹீரோயின் உதட்டை கடிப்பவர்கள்  இந்த படம் பார்த்தாவது திருந்த வேண்டும்.திருந்துவார்களா ...
   
         படத்தின் கதைக்கே போக வில்லை அதற்குள் இந்த பதிவு பெருசாகி விட்டது ஆகவே அடுத்த பதிவில் இந்த விமர்சனம் தொடரும்...தொடரும்....தொடரும்... இன்னும் படம் பார்க்காதவர்கள்  அடுத்த பதிவு போடுவதற்குள் படம் பார்த்து விட்டால் சிறப்பு..
[ Read More ]

மெல்லிதயம் கொண்டோரே மெரினாவிற்கு வாரீர்!

            
           இரு வாரங்களுக்கு முன் மே 18 ம் தேதி அன்று மெரினாவில் ஈழப்படுகொலைகள் நினைவாக மெழுகுதிரி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுது அங்கு வந்திருந்த பொது மக்கள் பலரும் என்ன நிகழ்வு நடைபெறுகிறது என்று கேட்டறிந்து அவர்களும் தத்தம் குடும்பத்தினரோடு மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை உணர்ந்தோம்.

          ஒவ்வொரு கட்சியினரும் அமைப்பினரும் இனப்படுகொலைகளைக் கண்டித்து பல்வேறு பொதுக்கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தியிருந்தாலும், பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை அறிந்தோம். பொதுமக்களுக்கும் இதுபோன்ற ஒரு ஆதங்கம் இருப்பதையும் அறிய முடிந்தது. இந்தச் சூழலில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் அஞ்சலி நிகழ்வு ஒன்றினை சாதி, மத, கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்ப்பட்டு ஏற்பாடு செய்யலாம் என்று தோன்றியது.

          இது தொடர்பாக பல்வேறு அமைப்பினரோடும் ஆலோசனை செய்தோம். ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் இந்த நிகழ்வை அமைத்துக்கொள்ளலாம் என்றும் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு, அதுவும் அனைத்து நண்பர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வுக்கான நாளாக ஜூன் 26 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக ஐ.நா சபையால் அறிவிக்கப்பட்ட நாளான ஜூன் 26 அன்று நமது அஞ்சலியை செலுத்துவோம்.


           இந்த நிகழ்வினை பலவேறு தரப்பினரும் தாமே முன்வந்து முன்னெடுத்தால் பெருமளவிலான மக்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் இது நமது முன்னெடுப்பு என்று முன்வந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் குடும்ப உறுப்பினர்களோடு பேசி அவர்களையும் வரச் சொல்லுங்கள். பக்கத்து வீட்டினர், அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர், மற்ற நண்பர்கள் என்று அனைவரிடமும் பேசி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு அனைவரையும் வரச்செய்யுங்கள்.

         இணையத்திலும் பல்வேறு கட்டங்களில் இதற்கான பணிகளை மேற்கொள்ளவேண்டும். Twitter Campaign எப்பொழுது தொடங்குவது என்பதை ஆலோசனை செய்து தொடங்குவோம். அதுவரை நீங்கள் அனுப்பும் ட்விட்டுகளில் #June26Candle என்னும் Hash Tag இணை சேர்த்துக்கொள்ளுங்கள்.

மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்.

நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: மெரினா கண்ணகி சிலை.

நன்றி : கும்மி 

வேண்டுகோள் : இந்தப்பதிவை பதிவர்கள் அனைவரும் தங்கள் தளத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
[ Read More ]

ஓர் பழைய உதயம்...,

            வணக்கம்.., கடைசியாக அது நடந்தே விட்டது .., கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு புது பொலிவோடு அதாவது புது ப்ளாக்கோடு எழுதப்போகிறேன்..,

              என்ன எழுதப்போறேன்னு கேட்டிங்கன்னா உள்ளூர் சினிமா , உலக சினிமா,புத்தகம்,இலக்கியம்,அரசியல்,இசை,குறுங்கவிதை , நெடுங்கவிதை , சிறுகதை , நெடுங்கதை , தொடர்க்கதை இப்படி என்னென்ன தோணுதோ அதெல்லாம் எழுத போறேன்..,எதாவது குத்தம் குறை இருந்த்தா சொல்லுங்க மக்களே...,
[ Read More ]