Elena [Russian / 2011] - எது தர்மம் ?

எது தர்மம் ?
எது தேவையோ அதுவே தர்மம். 
                                                     - சாணக்கியர்

             
மேற்கூறிய வாசகத்தை தங்களை போலவே நானும் ஆரண்யகாண்டம் திரைப்படத்தில் தான் பார்த்தேன். ஆரண்ய காண்டம் படம் வந்த சமயத்தில் அதன் மீது வைக்கப்பட்ட முக்கியமான விமர்சனம் அது எந்தவிதமான அறத்தையும் முன்வைக்கவில்லை என்பதாகும். அது மட்டுமல்லாமல் அப்படி அறத்தை போதிக்காதாத எந்த ஒரு திரைப்படமோ புத்தகமோ நிச்சயமாக கலைப்படைப்பாக முடியாது என்றும் சொல்லப்பட்டது. Elena படத்தை பார்த்த போதும் எனக்கு மேற்கூறிய வாசகமும் இந்த விமர்சனங்களும் தான் ஞாபகம் வந்தது. ஆரண்ய காண்டத்தை விட மிக மோசமான விஷயத்தை இந்த படம் முன்வைக்கிறது அதை விட முக்கியமாக அந்த விஷயத்தை நியாயப்படுத்துவதற்க்கான சிறு முயற்சி கூட செய்யவில்லை. இந்த இரண்டு படங்களுமே எனக்கு பிடித்த படங்கள் தான் ஒரு கலை படைப்பு கட்டாயமாக ஒரு அறத்தை போதிக்க வேண்டுமா என்ன.. ??


          ஒரு மரத்தில் அமர்ந்திருக்கும் பறவை அதற்கு பின்னால் இருக்கும் வீடு நமக்கு காண்பிக்கப்படுகிறது அதுவும் சலனமே இல்லாமல் ஒரு புகைப்படம் போல சில நிமிஷங்களுக்கு (கவனிக்க.. நொடிகள் அல்ல நிமிஷங்கள் ) காண்பிக்கப்படுகிறது. அதன் பின் அந்த பறவை பறக்கும் சிறு சலத்தோடு தொடங்குகிறது படம். அறுபதுகளில் இருக்கும் தம்பதிகளான விளாடிமிர் மற்றும் எலினா இருவரும் வெவ்வேறு பொருளாதார பிண்ணனிகளை சேர்ந்தவர்கள். விளாடிமிர் பெரும் பணக்காரர் அதே வேளை எலினா அவ்வளவு பொருளாதார வசதிகள் இல்லாதவர். விளாடிமர் தனக்கு நர்ஸாக வந்த எலினாவை தன்னை கவனித்து கொள்வதற்க்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

       இருவருக்கும் முந்தைய திருமணங்கள் மூலமாக ஆளுக்கு ஒரு பிள்ளை இருக்கிறார்கள். விளாடிமரின் மகள் கேத்ரினா தந்தையிடம் இருந்து பிரிந்து வாழும் , ஊர் சுற்றும் , முற்போக்கு பேசும் வழக்கமான பணக்கார பெண். எலினாவின் மகன் வேலையில்லாதவர் தன் குடும்பத்தை நடத்துவதற்க்கே சிரமப்படுகிறார். அவரது குடும்ப செலவுக்கு கூட எலினாவின் பெனஷனையே நம்பி இருக்கிறார். சரியாக பென்ஷன் வரும் நாளன்று விளாடிமரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி (அவருக்கு தெரியாமல்) மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு பென்ஷன் பணத்தை கொடுக்க போகிறார் எலினா. அப்போது அவருடைய பேரனை கல்லூரியில் சேர்க்க பணமில்லை என்றும் விளாடிமரிடம் உதவி கேட்க வேண்டும் என்றும் அவருடைய மகன் கேட்கிறார். 


        சமயம் பார்த்து விளாடிமரிடம் தன் மகனுக்கு உதவுமாறு எலினா கேட்க ஏற்கனவே கொடுத்தது போதும் இனி முடியாது என்று மறுத்து விடுகிறார். அன்றே விளாடிமருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது ஆனால் உயிர் பிழைத்து விடுகிறார். தான் உயிருடன் இருக்கும் போதே உயில் எழுத முடிவு செய்கிறார் விளாடிமர். இதுக்கும் மேல கதைய சொன்ன படம் பாக்கும் போது சுவாரசியம் சுத்தமா போய்டும் ., ஆகவே இதுக்கு மேல நீங்களே  பாத்துக்கங்க..,


     படத்தில் ரொம்ப பிடிச்ச விஷயம் அதன் ஆரம்ப காட்சி தான். ஒரு புகைப்படத்தை சில நிமிஷம் காட்டுவது போல இருக்கும் அந்த காட்சியே படத்தின் தன்மையை சொல்லிவிடுவதுடன் பார்வையாளனை அதற்கு தயார் செய்து விடுகிறது. உங்களுக்கு அந்த காட்சி பிடிக்கவில்லை என்றாலோ போர் அடித்தாலோ நிச்சயம் இது உங்களுக்கான படம் இல்லை எனவே படத்தை நிறுத்தி விட்டு வேறு ஏதேனும் உருப்படியான வேலை இருந்தால் பார்க்கலாம். அதே போல படத்தின் கடைசி காட்சியிலும் ஒரு குடும்பத்தின் வழக்கமான மாலை நேர தேநீர் உரையாடலுடன் தொடங்கும் காட்சி படம் தொடங்கிய அதே ஃப்ரேமில் முடியும் ஆனால் அவர்கள் சகஜமாக சிரித்து பேசி கொண்டிருப்பது நமக்கு எரிச்சலாக இருக்கும் படத்தின் வெற்றியும் இது தான்.     படத்தின் திரைக்கதை தேவையில்லாமல் எதையும் சேர்க்காமல் இராணுவ ஒழுங்குடன் எழுதப்பட்டு இருக்கிறது. குறைவான அளவிலையே வசனங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதால் எல்லா வசங்களும் முக்கியத்துவம் பெற்று விடுகிறது. நிறைய விஷயங்கள் வசனமாக சொல்லப்படாமல் காட்சியின் வழியாக சொல்லப்படிகிறது. விளாடிமரும் எலினாவும் திருமணம் செய்து கொண்டாலும் வெவ்வேறு படுக்கை அறைகளையே பயன்படுத்துகின்றனர் அதிலும் விளாடிமரின் அறை நட்சத்திர ஓட்டல் போல இருக்கிறது ஆனால் எலினாவின் அறை சமையல் கட்டுக்கு பக்கத்திலையே இருக்கிறது. அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் எலினாவை ஒரு வேலைக்காரியாகவே இன்னமும் பார்க்கிறார் என்பது தெரிகிறது. அப்புறம் , மகன் வீட்டிற்கு போகும் எலினாவை விட அவர்களுக்கு அவள் கொண்டு வரும் பணமும் பொருளுமே முக்கியமாகிறது. 


       படத்தை பற்றி நெட்டில் நோண்டிய போது கிடைத்த ஒரு முக்கியமான விஷயம் , ஒரு மென்மையான குடும்ப டிராமா போல இருந்தாலும் சோசியலிஷத்தின் விழ்ச்சிக்கு பிறகான ரஷ்ய மக்களின் நிலையை பூடகமாக சொல்கிறது இந்த படம். ரஷ்யாவில் பணக்காரர்களுக்கும் ஏழைக்களுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்து விட்டதையும் உறவுகளை விட பணத்திற்க்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி விட்டனர் போன்ற விஷயங்கள் தான் படத்தின் உள்ளடக்கம் என்று இயக்குநர் Andrei Zvyagintsev கூறி உள்ளார்.

     இந்த படத்தின் இயக்குநர் Andrei Zvyagintsev -ன் முதல் படமான "The Return" படமும் சிறப்பானதாக சொல்லப்படுகிறது. ஆகவே மக்கள் அந்த படத்தையும் பார்க்குமாறு வேண்டி விரும்பி கேட்டு கொள்ளப்படுகின்றனர் :)) .


Elena : A simple family drama which can shake u for a moment.
My rating : 8.5 /10

[ Read More ]

Rango [English/2011] - குட்டி கவ்பாயின் சாகசங்கள்

             
          கவ்பாய் படங்கள் என்ற உடனேயே சில விஷயங்கள் உங்கள் மனதில் தோன்றலாம் . அது Sergio Leone எடுத்த டாலர் டிரையாலஜியாவோ அல்லது க்ளின்ட் ஈஸ்ட்வூட்டாகவோ அல்லது சாட்டையும்  குதிரையுமாகவோ  அல்லது துப்பாக்கி சண்டைகளாகவோ அல்லது என அடுத்த ஆப்ஷனை யோசிப்பத்ற்க்கு முன்னால் நிற்க. இதெல்லாம் இருக்கட்டும் Clint Eastwood, John Wayne  தொடங்கி Jeff Bridges வரை நாம் பார்த்த கவ்பாய் போல் அல்லாமல் பச்சை நிறத்தில் ஒரு பல்லி இருந்தால் எப்படி இருக்கும் ?? அதுவும் ஒரு அனிமேஷன் படமா இருந்தா ??.   இப்ப்டி மாத்தி யோசிச்சதன் விளைவு தான் 'Rango'.

            என்ன தான் இதில் கவ்பாய் படத்துக்கான அம்சங்கள் நிறைய இருந்தாலும்  இது முழுமையான கவ்பாய் படமாகவோ அல்லது முழுமையாயான கவ்பாய் படங்களின் Spoof ஆகவோ இல்லாமல் இடையில் தொங்கி நிற்கிறது. இந்த படம்  ஆஸ்கர் வாங்காமல் இருந்திருந்தால் பார்த்து இருப்பேனா என்று தெரியவில்லை.., ஹம்ம்ம் எப்படியோ இந்த படம் வாங்கிடுச்சி நானும் பார்த்துட்டேன் நீங்களும் இந்த கொடுமையை படிச்சிட்டு இருக்கிங்க :)..,

          

           காரில் இருக்கும் மீன் தொட்டியின் உள்ளே நடக்கும் ஒரு குட்டி நாடகத்தோடு தொடங்குகிறது படம். அப்போது ஏற்படும் சிறுவிபத்தினால் ஒரு பாலைவனத்தின் நடுவில் சிக்கி கொள்ளும் அந்த பல்லி ஒரு ஆட்டின் (??) அமானுஷிய பேச்சுகளை நம்பி 'Dirt' என்ற ஒரு ஊரை தேடி செல்கிறது. அந்த வழியில் ஒரு பெரிய கழுகு துரத்த அதனிடமிருந்து தப்பி பிழைத்து பீன்ஸ் என்ற பெண்ணை சந்திக்கிறது. அந்த பெண்ணிடம் சில பல பிட்டுகளை போட்டு அவங்க ஊருக்கு அதாவது அந்த ஆடு சொன்ன 'Dirt'-க்கு போய்டுது.

      அந்த விபத்தில் இருந்தே ரொம்ப தாகமா இருக்கிற பல்லி ஒரு பாருக்கு போய் குடிக்க தண்ணி கேக்குது. அங்க எல்லாரும் எதோ டி.ஆர் படம் பாத்த மாதிரி சிரிக்கிறாங்க இதுனால கடுப்பான பல்லி தன்னோட பேர் 'Rango'-ன்னும் அது ஒரே புல்லட்ல ஏழு பேர கொன்னதாகவும் பீலா விடுது. அப்போ அங்க வரும் பெரிய கழுகை அதுக்கே தெரியாம ஒரே தோட்டாவுல கொன்னுடுது. அதுல இம்பிரஸ் ஆன அந்த ஊர் மேயர் ஆமை Rango-வை அந்த ஊர் செரிஃப்பா ஆக்கிடுறாரு..,

       அந்த ஊர்ல பயங்கராமன பஞ்சம் தலைவிரிச்சாடுது எந்த அளவுக்குன்னா அந்த ஊர்ல ஒரு பேங்க் இருக்கு அதுல யாரும் பணம்லாம் போட்டு வைக்க மாட்டாங்க அதுல தண்ணி மட்டும் தான் சேமிச்சு வைச்சு இருப்பாங்க அதே போல தேவைப்பட்டா கடனும் குடுப்பாங்க. தண்ணி பேங்க்ல இருப்பு ரொம்ப கம்மியா இருக்குறதால அத அப்புடி பாதுகாக்குறதுன்னு கூட்டம் போட்டு பேசுறாங்க கரெக்ட்டா அன்னைக்கு நைட் யாரோ பேங்க கொள்ளை அடிச்சடுறாங்க.., அந்த தண்ணிய யார் கொள்ளை அடிச்சான்னு எல்லாரும் கண்டுபிடிக்கிற மாதிரி ஒரு ட்விஸ்ட் வைச்சு சொல்லி முடிக்கிறாங்க..,

     படத்தோட ஸ்பெஷல் அப்புடின்னு பாத்தா அதோட அனிமேஷன் தான். ரொம்பவே கலர்ஃபுல்லான அனிமேஷன் படங்களையே அதிகம் பார்த்து இருக்கும் நமக்கு இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. படத்தில் வெப்பத்தையும் அதனால் பாதிக்கப்பட்ட மக்களையும் பகுதிகளையும் அருமையா காட்சிப்படுத்தி இருக்காங்க.., அதுனாலயே படத்தோட நம்ம ஒன்ற வைக்கிற முக்கியமான விஷயமாகிடுது.

 
    படத்துல அப்ப அப்போ இசை வாத்தியங்களோடு வரும் பறவைகள்  கதை சொல்வது , வழக்கமான கவ்பாய் காட்சிகளை கிண்டல் அடிப்பது , தண்ணிரை மீட்டு வரும் போது நடக்கும் Chase எல்லாமே செமையா இருக்கும். Rango-க்கு Jonny Depp-ன் குரல் நல்லா பொருந்தி வந்திருக்கு அதுவும் அது பீலா விடும் காட்சிகள் எல்லாம் செம Synchronization. படத்த இயக்கி இருப்பவர் Pirates of Caribbean படங்களை இயக்கிய Gore Verbinski. படத்தின் சில இடங்களின் Jack Sparrow-ன் சாயல் Rango-விற்கு இருப்பதைக வனிக்கலாம்.

     படத்தின் சில காட்சிகள் ரொம்பவே மொக்கை போடுகின்றது. இந்த கதையை இத்தனை நீளமாக எடுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். மிக பிரபலமான கவ்பாயான செர்ஜியோ லியோனின் "The Man with No Name" படத்தில் வருகிறார் ஆனால் இந்த விஷயத்தை படிக்கும் போது இருக்கும் சுவாரசியம் அந்த காட்சியில் துளி கூட இல்லை.

     மொத்ததில் படம் பல இடங்களில் வாய் பிளக்க வைக்கிறது, சில இடங்களில் ஆச்சர்யத்தினாலும் சில இடங்களில் கொட்டாவி விடுவதற்க்காகவும்..,

Rango : A Gud Companion for a weekend with family or Boy friend or  Girl friend or ...
My rating : 7/10.
           
[ Read More ]