நம்மூரில் சென்சார் சான்றிதழ் குறித்து யாரும் பெரிதாக அலட்டிக்கொளவதில்லை பிட்டு படங்கள் ஓட்டும் தியேட்டர்களை தவிர.., வாலி , பாய்ஸ் , துள்ளுவதோ இளமை , மன்மதன் , 7/G ரெயின்போ காலனி என பல படங்கள் 'A' சான்றிதழ் வாங்கி இருந்தாலும் தியேட்டரில் உங்களுக்கு 18 வயது பூர்த்தி ஆகி விட்டதா என சரிபார்க்க யாருக்கும் நேரமில்லை விருப்பமும் இல்லை. அதுமட்டுமல்லாமல் இந்த படங்கள் யாவும் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பானது அது குறித்தும் யாரும் சட்டை செய்வதில்லை. ஹாலிவுட்டில் கொஞ்சமேனும் இந்த தணிக்கை விஷயத்தில் அக்கறை எடுத்து கொள்வார்கள் போலும் அதனால் தான் பெரும்பாலான வணிக படங்கள் குறைந்தப்பட்சம் PG-13 ரேட்டிங்காவது வாங்க முட்டி மோதுகின்றன. அந்த வரிசையில் R ரேட்டிங்காவது வாங்க வேண்டிய அளவுக்கு வன்முறை மிகுந்த நாவலை ஏதேதோ பல்டி அடித்து PG-13 படமாக்கி இருக்கும் படம் தான் The Hunger Games ..,
பேனம் என்ற நாட்டில் வருடம் குறிப்பிடாத எதிர்காலத்தில் துவங்குகிறது படம். அந்த நாட்டில் உள்ள 12 மாவட்டங்கள் அரசாங்கத்தை எதிர்த்து புரட்சி செய்து தோற்று விடுகின்றன். அதனால் வருடத்திற்க்கு ஒரு முறை 12 முதல் 18 வரை வயதுடைய ஒரு ஆணையும் பெண்ணையும் விளையாட்டு போட்டிக்கு அனுப்ப வேண்டும். 12 மாவட்டங்களுக்கு ரெண்டு பேர் வீதம் 24 பேர் கலந்து கொள்ளும் அந்த விளையாட்டின் பெயர் தான் Hunger Games. விளையாட்டு என்றதும் எதோ ஓட்ட பந்தயமோ இல்ல லாங் ஜம்ப்போ என்று நினைத்து விட வேண்டாம். இந்த போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்ப்டும் 24 பேரும் ஒரு காட்டில் விடப்படுவார்கள் அவர்களுக்குள் சண்டையிட வேண்டும் சண்டை என்றால் சாதரணாமாக அல்ல சாகும் வரை சண்டையிட வேண்டும். கடைசியாக உயிருடன் இருக்கும் ஒருவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
இந்த பதிவின் இரண்டாம் பத்தியை படித்துக்கொண்டிருக்கும் போதே எங்கோ பார்த்த மாதிரியே இருக்கேன்னு உங்களுக்கு தோன்றி இருந்தால் நீங்கள் ஏற்கனவே ஜப்பானிய படமான "Battle Royale" படத்தை பார்த்துவிட்டீர்கள் என்று அர்த்தம். என் சிற்றறிவுகு எட்டியவரை இரண்டு படங்களின் கதையும் ஒன்று போலவே தான் தெரிகிறது. அந்த ஜப்பானிய படத்தின் கதை என்னவென்றால்..,9-B வகுப்பில் இருக்கும் அத்தனை மாணவர்களும் ராணுவத்தின் ஒரு ப்ராஜக்ட்டிற்காக தேர்ந்தெடுக்கப்ப்டுகின்றனர். அவர்கள் அனைவரும் ஒரு காட்டில் விடப்படுகின்றனர் அவர்கள் ஒருவருக்கொருவர் கொலை செய்ய வேண்டும் கடைசியில் உயிரோடு இருக்கும் ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். என்ன ஒரே மாதிரி இருக்கா ??
படம் ஆரம்பித்து 20 நிமிஷத்துலையே "Battle Royale" போல் தான் இருக்க போகிறது என்று தெரிந்து விட்டது. இரண்டு படங்களுக்கும் உள்ள மிக முக்கயமான வித்தியாசம் வன்முறை தான். நான் முன்னரே கூறியது போல் The Hunger Games-ல் எப்படி ரத்ததையே காட்டவில்லையோ அதற்கு நேரெதிர் "Battle Royale" நம்ம சட்டை மேல கூட ரத்தம் தெரிச்சு இருக்குமோன்னு சந்தேகப்படும் அளவுக்கு வன்முறையாக இருக்கும். ஆனாலும் இரண்டு படங்களுக்கும் அடிப்படையான விஷயங்கள் ஒன்று தான் கிளைமேக்ஸ் கூட கிட்டதட்ட ஒன்று போலவே இருந்தது கடுப்பாக இருந்தது.இது பற்றி கேட்டால் Battle Royale -க்கும் இதற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது , அந்த படம் வன்முறையை மட்டுமே காட்டியது ஆனால் Hunger Games-ல் போரின் கொடுரம் , வறுமை போன்ற விஷயங்களை காட்டி உள்ளதாக ஜல்லி அடிக்கின்றனர் The Hunger Games படக்குழுவினர்.
என்னை பொருத்த வரை இது காப்பியாகவே படுகிறது , நீங்கள் இன்ஸ்பிரேஷன் என்றோ அல்லது உங்களுக்கு பிடித்த வேறு பெயரையோ இட்டுக்கொள்ளலாம். இப்படி சுட்டிகாட்டுவதின் நோக்கம் தமிழில் காப்பி அடிக்கும் உலக மகா நாயகர்களுக்கும் அதி மேதாவி இயக்குநர்களுக்கும் சொம்படிப்பதல்ல அங்கேயும் இப்படி செய்கிறார்கள் என சுட்டிக்காட்டுவது மட்டுமே யார் செய்தாலும் அறிவு திருட்டு குற்றமே.., ஹாலிவுட்காரர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல ஏற்கனெவே அகிரா குராசேவாவின் பல படங்களையும் தொழில்நுட்பங்களையும் அவருக்கே தெரியாமல் சுட்டவர்கள் தான்.
மொத்ததில் The Hunger Games படம் விறுவிறுப்பாக சொல்லப்பட்ட பொழுதுபோக்கு படம் தான். நீங்கள் "Battle Royale" பார்க்காமல் இருந்தால் நிச்சயம் ரசிக்க முடியும்..,
கொசுறு தகவல்கள் :
Battle Royale படத்தில் பிரபல் இயக்குநர் டகிஷோ கிடானோ (மிஷ்கின் புகழ்) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
PG 13 ரேட்டிங் என்றால் 13 வயது வரை உள்ளவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவகர் இருந்தால் மட்டுமே அனுமதிக்க படுவர்.
R ரேட்டிங் என்றால் 17 வயது வரை உள்ளவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவகர் இருந்தால் மட்டுமே அனுமதிக்க படுவர்.
பேனம் என்ற நாட்டில் வருடம் குறிப்பிடாத எதிர்காலத்தில் துவங்குகிறது படம். அந்த நாட்டில் உள்ள 12 மாவட்டங்கள் அரசாங்கத்தை எதிர்த்து புரட்சி செய்து தோற்று விடுகின்றன். அதனால் வருடத்திற்க்கு ஒரு முறை 12 முதல் 18 வரை வயதுடைய ஒரு ஆணையும் பெண்ணையும் விளையாட்டு போட்டிக்கு அனுப்ப வேண்டும். 12 மாவட்டங்களுக்கு ரெண்டு பேர் வீதம் 24 பேர் கலந்து கொள்ளும் அந்த விளையாட்டின் பெயர் தான் Hunger Games. விளையாட்டு என்றதும் எதோ ஓட்ட பந்தயமோ இல்ல லாங் ஜம்ப்போ என்று நினைத்து விட வேண்டாம். இந்த போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்ப்டும் 24 பேரும் ஒரு காட்டில் விடப்படுவார்கள் அவர்களுக்குள் சண்டையிட வேண்டும் சண்டை என்றால் சாதரணாமாக அல்ல சாகும் வரை சண்டையிட வேண்டும். கடைசியாக உயிருடன் இருக்கும் ஒருவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
12-ம் மாவட்டத்தில் 74-வது Hunger Games போட்டிக்கு அனுப்புவதற்க்கான ஜோடியை தேர்ந்தெடுக்க குலுக்கல் நடைபெறுகிறது. அதில் பெண்கள் பிரிவில் 12 வயதே ஆன Katniss Everdeen-ன் தங்கை தேர்ந்த்டுக்கப்படுகிறார் ஆனால் தன் தங்கையை காப்பாற்றும் பொருட்டு அவர் வாலண்டியராக போட்டியில் பங்கேற்ப்பதாக சொல்லவும் அவரே தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆண்கள் பிரிவில் Peeta Mellark என்ற இளைஞனும் நேர்தெடுக்கப்படுகிறார்.இவர்கள் இருவரோடு ஏற்கனவே ஒரு முறை இந்த போட்டியில் வெற்றி பெற்ற Haymitch உடன் கேப்பிடல் (The Capitol) நோக்கி பயணமாகின்றனர். வறுமை தாண்டவமாடும் District 12 போல் இல்லாமல் கேப்பிடல் ரொம்பவும் செல்வ செழிப்புடும் இருக்கிறது. அறிமுக அணிவகுப்பிலும் ஆரம்ப சுற்றுகளிலும் அனைவரையும் கவர்ந்து அதிக மதிப்பெண் பெறுகிறார் Katniss . அதன் பிறகு போட்டி தொடங்குகிறது ஒருவரை ஒருவர் கொல்கின்றனர் , சிலர் நட்பு பாராட்டுகின்றனர் , சிலர் துரோகம் செய்கின்றனர், Katniss-ம் Peeta - வும்
காதலர்கள் என மீடியா சென்ஷேசனுக்காக சொல்லப்படுகிறது அதுமட்டுமல்லாமல் அத்தனையும் டி.வி ல் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. Katniss-ம் Peeta -
வும் உண்மையில் காதலிக்க தொடங்கினார்களா , ஒருவர் மட்டுமே உயிருடன் திரும்பும் வாய்ப்புள்ள போட்டியில் யார் வென்றார் போன்ற விஷயங்களை வெள்ளி திரையில் காண்க..,
படத்தின் கதையை படிக்கும் போதே உங்களுக்கு தெரிந்திருக்கும் நிறைய கொலை நடக்கும் படமென்று அதனால் ரத்த ஆறு ஓடும் என்று எதிர்ப்பார்த்து சென்றால் நிச்சயம் ஏப்ரல் ஃபூல் தான். "எத்தன பேர வேணும்னாலும் போட்டு தள்ளிக்கோ ஆனா PG 13 மட்டும் வாங்கிடுன்னு" டைரக்டர் கழுத்துல கத்தி வைச்சுடாங்க போல. நெத்தில ப்ளேடு கிழிப்பது , காலில் கல் குத்துவது போன்ற சம்பவங்களின் போது மட்டுமே சிவப்பு கலரில் ஒரு திரவம் காட்டப்படுகிறது மற்றபடி ஈட்டியால் நெஞ்சில் குத்துவது , வாளால் வெட்டுவது போன்ற காட்சிகளில் எல்லாம் ஸ்லோமோஷனில் விழுகிறார்கள் அதுவும் துளி ரத்தமில்லாமல். 5 பேர் கொலை செய்யப்படும் காட்சியில் கேமராவை மட்டுமே ஆட்டி கொலைவெறியை காட்டி இருக்கிறார்கள்.
படம் பொருளாதார ரீதியாக மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது. திரைப்பட வரலாற்றிலேயே மூன்றாவது மிக பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது. Harry Potter and
the Deathly Hallows – Part 2 மற்றும் The Dark Knight மட்டுமே இதை விட பெரிய ஓப்பனிங் பெற்றுள்ளன. விமர்சன ரீதியாகவும் நல்ல பெயரே வாங்கி இருக்கிறது. ஓரளவுக்கு நம்பிக்கையான ரேட்டிங் தரும் Rotten Tomatoes தளத்தில் 85% ரேட்டிங் வாங்கி உள்ளது. இந்த இரண்டு மேட்டரிலும் இம்ப்ரஸ் ஆகி தான் வழக்கமாக சனிக்கிழமை 11 மணிக்கு எழுந்திருக்கும் வழக்கும் உள்ள நான் 6.45க்கே அலாரம் வைத்து எழுந்து 9 மணி ஷோவுக்கு 8.30 க்கே சத்யம் தியேட்டரில் தஞ்சம் புகுந்தேன்.
பதிவிற்க்கும் தலைப்புக்கும் சம்பந்தமில்லையே நெற்றி சுறுக்குவது
தெரிகிறது. தொடர்க.., :)
படம் ஆரம்பித்து 20 நிமிஷத்துலையே "Battle Royale" போல் தான் இருக்க போகிறது என்று தெரிந்து விட்டது. இரண்டு படங்களுக்கும் உள்ள மிக முக்கயமான வித்தியாசம் வன்முறை தான். நான் முன்னரே கூறியது போல் The Hunger Games-ல் எப்படி ரத்ததையே காட்டவில்லையோ அதற்கு நேரெதிர் "Battle Royale" நம்ம சட்டை மேல கூட ரத்தம் தெரிச்சு இருக்குமோன்னு சந்தேகப்படும் அளவுக்கு வன்முறையாக இருக்கும். ஆனாலும் இரண்டு படங்களுக்கும் அடிப்படையான விஷயங்கள் ஒன்று தான் கிளைமேக்ஸ் கூட கிட்டதட்ட ஒன்று போலவே இருந்தது கடுப்பாக இருந்தது.இது பற்றி கேட்டால் Battle Royale -க்கும் இதற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது , அந்த படம் வன்முறையை மட்டுமே காட்டியது ஆனால் Hunger Games-ல் போரின் கொடுரம் , வறுமை போன்ற விஷயங்களை காட்டி உள்ளதாக ஜல்லி அடிக்கின்றனர் The Hunger Games படக்குழுவினர்.
என்னை பொருத்த வரை இது காப்பியாகவே படுகிறது , நீங்கள் இன்ஸ்பிரேஷன் என்றோ அல்லது உங்களுக்கு பிடித்த வேறு பெயரையோ இட்டுக்கொள்ளலாம். இப்படி சுட்டிகாட்டுவதின் நோக்கம் தமிழில் காப்பி அடிக்கும் உலக மகா நாயகர்களுக்கும் அதி மேதாவி இயக்குநர்களுக்கும் சொம்படிப்பதல்ல அங்கேயும் இப்படி செய்கிறார்கள் என சுட்டிக்காட்டுவது மட்டுமே யார் செய்தாலும் அறிவு திருட்டு குற்றமே.., ஹாலிவுட்காரர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல ஏற்கனெவே அகிரா குராசேவாவின் பல படங்களையும் தொழில்நுட்பங்களையும் அவருக்கே தெரியாமல் சுட்டவர்கள் தான்.
மொத்ததில் The Hunger Games படம் விறுவிறுப்பாக சொல்லப்பட்ட பொழுதுபோக்கு படம் தான். நீங்கள் "Battle Royale" பார்க்காமல் இருந்தால் நிச்சயம் ரசிக்க முடியும்..,
கொசுறு தகவல்கள் :
Battle Royale படத்தில் பிரபல் இயக்குநர் டகிஷோ கிடானோ (மிஷ்கின் புகழ்) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
PG 13 ரேட்டிங் என்றால் 13 வயது வரை உள்ளவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவகர் இருந்தால் மட்டுமே அனுமதிக்க படுவர்.
R ரேட்டிங் என்றால் 17 வயது வரை உள்ளவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவகர் இருந்தால் மட்டுமே அனுமதிக்க படுவர்.
ஆஹா.. கண்டு பிடிச்சுட்டீங்களா?
சிறப்பான திரைப்பட அலசல்..காபி அடிக்கப்பட்ட இடம், இறுதியில் ரேட்டிங்க் தகவல்கள் என கலக்கிட்டீங்க..மிக்க நன்றிங்க சகோ.
//ஹாலிவுட்காரர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல ஏற்கனெவே அகிரா குராசேவாவின் பல படங்களையும்//
உண்மை தான், "The Fistfull of dollars" யார் மறுக்க முடியும்.
நீங்க சொல்றதை பார்த்த "The Condemned " படத்தோடதீம கூட BR மாதிரி தான் இருக்கு.
என்னை பொறுத்த வரை ஒரு படம் எங்கிருந்து வேணா, எந்த மொழில் இருந்துவேனா காப்பி அடிக்க பட்டு இருக்கட்டும், ஆனால் நான் பார்க்கும் 90 நிமிடங்கள் தொய்வு இல்லாமல் இருக்கனும்... நீங்களே பாருங்க முனு படம் ஓரே தீம்!! எந்த படம் நல்லா இருக்குனு நீங்களே சொல்லுங்க...
1) Battle Royale = My Rating 8.5
2) The Condemned = My Rating 5.
3) The Hunger Games = இன்னும் பார்க்க வில்லை...
all-in-all தகவல் கொடுத்து அசத்துறீங்க நண்பா! நான் ரெண்டுமே இன்னும் பார்க்கலை.. படத்தோட தீமே ரத்தம் போலத்தான் இருக்கு, அதக்கூட காட்டலைன்னா எப்படி?.. என் பால்ய சிநேகிதன் Josh Hutcherson-இன் நடிப்பு சூப்பராக இருக்காமே...
ஹாலிவுட்லயே இன்ஸ்பிரேசன் கண்டுபிடிச்சிட்டீங்களா? மேலே ராஜ் சொன்ன The condemned, மற்றும் The tournament போன்ற சில படங்கள் இது போன்ற தீமை அடிப்படையாக வைத்து எடுத்தது தான். ஏன் Death Race படம் கூட கொஞ்சம் இந்த கருவை உல்டா பண்ணி எடுக்கப்பட்டது தான்.
ஆனால் நீங்க சொன்ன பிறகு Battle Royale படத்தை ஒருமுறை பார்க்கணும் போல இருக்கு. கலக்கல் விமர்சனம்.
உலகின் பெரிய கதை திருடர்கள் ஹாலிவுட்காரர்கள்தான்.
கோலிவுட்காரங்க அவுங்கள கம்பேர் பண்ணா பச்சா.
உங்கள் பதிவை படித்தபிறகு பேட்டில் ஆப் ராயல் பாக்கணும்னு இருக்கு.
The Condemned also had a similar story line anand ... jalal
அழகான விமர்சனம்
அத்தனை நுணுக்கங்களையும்
ஆராய்ந்து பதிவிட்டமை அழகு..
படம் நாவலை தழுவி எடுக்க பட்டதால் காப்பி என்று கூற முடியாது. அந்த புதினத்திற்கு தூண்டுதல்லாக இருந்தது தான் பார்த்த ஒரு TV Reality Show என்று கூறி இருக்கிறார் அந்த எழுத்தாளர்..
காப்பியடிக்கிறவங்க எப்பதான் உண்மைய ஒத்துக்கினு இருக்காங்க? செர்ஜியோ லியோனி உட்பட.
அப்பால, கை துருதுறுப்பதால் -
மீ த டென்த் !!
சுடுசோறு எனக்குத்தான் !
நச் !!
உங்க பதிவைப் படிச்சப்புறம்தான் தமிழ்னு ஒரு மொழி இருப்பதையே தெரிஞ்சிக்கிட்டேன் ௧
தல.. எப்புடி இப்புடியெல்லாம்? அசத்துங்க !
நல்ல அலசல்...Survivor + the War inspired ...
@சி.பி.செந்தில்குமார்
ரொம்ப கஷ்டம்லாம் இல்ல., பாத்ததுமே தெரிஞ்சிட்டு :)
@Kumaran
நன்றி நண்பா...,
@ராஜ்
இல்லை நண்பா காப்பி அடிக்கிறத அப்புடியெல்லாம் எடுத்துக்க முடியாது அட்லீஸ்ட் என்னால.., The Condemned இன்னும் பாக்கல ஆனா BR-க்கும் Hunger Games-க்கும் கதை மட்டுமல்ல நிறைய காட்சிகள் கூட ஒண்ணாவே இருந்தது..,
@JZ
நடிப்புலாம் ஓரளவுக்கு நல்லா தான் இருந்துச்சு.., அவரு உங்க பால்ய நண்பனா சொல்லவே இல்ல.. :)
@ஹாலிவுட்ரசிகன்
வாங்க நண்பா.., முன்னரே சொன்னது போல் நிறைய காட்சிகளும் ஒண்ணு போல இருந்துச்சு..,
@உலக சினிமா ரசிகன்
நீங்க சொல்றதும் சரிதான்.., பேட்டில் ராயல் அஹா ஓஹோ படம் இல்லன்னாலும் ஒரு தடவ கண்டிப்பா பாக்கலாம்..,
@jalal
வருகைக்கு நன்றி., மேல சொல்லி இருப்பது போல BR-க்கும் Hunger Games-க்கும் கதை மட்டுமல்ல நிறைய காட்சிகள் கூட ஒண்ணாவே இருந்தது..,
@மகேந்திரன்
வருகைக்கு நன்றி
@Castro Karthi
நாவல் இன்னும் படிக்கல.., நிறைய காட்சிகள் ஒண்ணா இருந்தது தான் எனக்கு பிரச்சனையே..,
@Rajesh Da Scorp
ஆமா யாருமே ஒத்துகிறது இல்ல..,
குறிப்பு கொடுத்தமைக்கு நன்றி.., இத்த மறந்துட்டிங்களே..,
@ரெவெரி
வருகைக்கு நன்றி..,
அருமையான பதிவு
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ் போஸ்ட்
To get the Vote Button
தமிழ் போஸ்ட் Vote Button
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …
நன்றி
தமிழ் போஸ்ட்
hii.. Nice Post
Thanks for sharing
For latest stills videos visit ..
More Entertainment
www.ChiCha.in
மொத்தம் மூன்று பாகங்கள் Huger Games புத்தகம். அதில் முதல் பாகம் இப்ப படமா வந்திருக்கிறது. புத்தகத்திலிருக்கிறதை படமாக எடுக்கிறது ரொம்ப கஷ்டம். அதனால் அது ஜப்பான் மொழி படம் மாதிரி இருக்கலாம். ஆனால் அந்த புத்தகங்கள் சூப்பர். இரண்டாம் பாகம் கூட சினிமாவாக வெளிவரும். பாருங்க!