யாரோ ஒருவருடன் பேசுவதற்க்காக மட்டுமே பள்ளிகூடத்திற்க்கோ
கல்லூரிக்கோ போவதாக உணர்ந்து இருக்கிறீர்களா ? யாரோ கொடுத்த சாக்லேட்டின்
ரேப்பர்களை பத்திரப்படுத்தி இருக்கிறீர்களா ? ஷாப்பிங் மாலிலோ ரயில்வே ஸ்டேஷனிலோ யாரையேனும் எதிர்பார்க்கமல் சந்திக்க எதிர்பார்த்து இருக்கிறீர்களா? தூரத்தில் நடக்கும்
ஒரு பெண் அவள் போல் இருக்க ஆசையுடன் அருகில் போய் ஏமாந்து
இருக்கிறீர்களா ? வாழ்க்கையில் ஒருமுறையேனும் காதலித்து இருக்கிறீர்களா ?
இந்த கேள்விகளுக்கு ஏதேனும் ஒன்றுக்கு உங்கள் பதில் ஆம் எனில இது உங்களுக்கான படம்...,
இது எப்படிப்பட்ட படம் என்று மேலே இருக்கும் பத்தியை படிக்கும் போதே ஒருவாறாக கற்பனை செய்து இருப்பிர்கள் ஆனால் இது ஒரு அனிமேஷன் படமாக இருக்கும் என எதிர்ப்பார்த்தீர்களா.., Yes it is :) . 5 Centimeters Per Second என்ற படத்தின் தலைப்பு செர்ரி பூக்களின் இதழ்கள் உதிர்ந்து விழும் வேகமாகும். இந்த தலைப்பு மனித வாழ்க்கையின் மந்த தன்மையையும் ஒன்றாய் இருக்கும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் விலக தத்தம் வாழ்க்கைகாய் விலகி செல்வதின் குறியீடு அப்புடின்னு நா ஒண்ணும் கண்டுபிடிக்கல விக்கிபீடியா சொல்லுது :). 62 நிமிடங்கள் மட்டுமே ஓட கூடிய மிக சிறிய படமான இது மொத்தம் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது..,
Episode I : Chasing Cherry Blossoms
மத்திய தொண்ணூறுகளில் படத்தின் முதல் பகுதி நடக்கிறது. ஆரம்ப பள்ளியின் இறுதி நாளில் நெருங்கிய நண்பர்களான டகாகி மற்றும் அகாரி பள்ளி முடிந்து வருகின்றனர். அகாரியின் பெற்றோர் வேறு ஊருக்கு மாற்றலாகி செல்வதால் இனி பார்க்க முடியாது என்றாலும் அடுத்த வருடம் இதே காலத்தில் அவனுடன் இருக்க விரும்புவதாகவும் கூறி செல்கிறாள் அதன் பிறகு இருவரும் கடிதம் மூலமே உரையாடி கொள்கின்றனர். ஒரு வருடம் கழித்து அவளை பார்ப்பதற்க்காக டகாகி ரயிலில் அகாரி ஊரை நோக்கி செல்கிறான். அன்று இரவு 7 மணிக்கு சந்திப்பதாக அகாரியை சந்திப்பதாக போட்ட ப்ளான் கடும் பனி பொழிவினால் ரொம்பவே சொதப்பி விடுகிறது. 8.30 மணிக்கு பாதி தூரம் மட்டுமே சென்று இருக்கிறான். இருவரும் சந்தித்தார்களா இல்லையா என்ற சஸ்பென்ஸை உடைக்க விரும்பவில்லை நீங்களே பாருங்கள்.
Episode II :Cosmonaut
செல் ஃபோனும் இன்டர்நெட்டும் அறிமுகமாகிவிட்ட இருபதாம் நூற்றாண்டின் தொடக்க வருடங்களில் படத்தின் இரண்டாம் பகுதி நடக்கிறது. காலப்போக்கில் அகாரி உடனான தொடர்பை முற்றிலுமாக இழந்துவிட்ட டகாகி புதிய பள்ளியில் யாருடனும் ஒட்டாமல் தனியாகவே இருக்கிறார். அதே பள்ளியில் படிக்கும் சுமேடா டகாகியை பார்த்த நாள் முதலே காதலிக்க தொடங்கிவிடுகிறார் ஆனாலும் தன் காதலை வெளிப்படுத்த தைரியமின்றி இருக்கிறாள். கொஞ்ச காலத்தில் இருவருக்கும் ஒரு மெல்லிய நட்பு உருவாகிறது ஆனாலும் அதற்கு மேல் அவளால் நெருங்க முடியவில்லை. இருவரும் தனியாக இருக்கும் சமயத்தில் தன் காதலை வெளிப்படுத்த முயற்சி செய்து தோற்று போகிறாள்.
Episode III : 5 Centimeters Per Second
சில வருடங்களுக்கு பிறகு., டகாகி கம்ப்யூட்டர் ப்ரோகிராமராக டோக்கியோவில் வேலை பார்த்து கொண்டிருக்கிறார். சுமேடா இன்னும் உன்னை காதலிக்கிறேன் என டகாகிக்கு மின்னஞ்சல் அனுப்பி கொண்டிருக்கிறார். திருமணத்திற்க்கும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் வேலை காரணமாக டோக்கியோவுக்கு பயணமாகிறார் அகாரி. ஒரு முறை ரெயில்வே கிராஸிங்கை தாண்டி செல்லும் போது எதிரில் வந்த பெண் அகாரியாக இருக்குமோ என திரும்பும் போது சரியாக அதே நொடியில் ஒரு ரெயில் வந்து பார்க்க விடாமல் செய்கிறது. அப்போது ரொம்ப ரொம்ப அழகான பாடல் வருகிறது. அப்பாடல் முடிந்ததும் அந்த பெண் அகாரியா ? இருவரும் இணைந்தார்களா ? போன்ற விஷயங்களை எல்லாம் திரையில் காண்க..,
இந்த கதையை படிக்கும் போது இது ரொம்பவும் சாதாரணமாக இருப்பதாக நீங்கள் உணரலாம் ஆனால் திரையில் இந்த படம் ஏற்படுத்தும் பாதிப்புகள் ரொம்பவே அதிகம். காதலை பிரிந்ததால் ஏற்படும் தனிமையையும் , பழைய காதலை நினைக்கும் போது ஏற்படும் துக்கமும் மகிழ்ச்சியும் நிறைந்த கலைவையான உணர்ச்சியையும் அழகான காட்சிகளின் மூலம் வெகுசுலபமாக பார்வையாளனுக்கு கடத்தி விடுகிறது. சிறுவயதில் நெருக்கமாய் இருந்தவர்கள் செல்ஃபோனும் இணையமும் இல்லாமல் கால ஓட்டத்தில் காணாமல் போனதை எந்தவிதமான மிகையும் இல்லாமல் காட்டுகிறது. படத்தில் உரையாடல்கள் மிகவும் குறைவு முக்கிய பாத்திரங்கள் மூவரும் அவர்கள் மனதுக்குள் நினைப்பதே வசனங்களாக வருகிறது. பெரும்பாலான வசனங்கள் க்யூட்டான கவிதையாக இருக்கின்றன.
படம் முழுவதுமே நட்பு, பிரிவு, தனிமை, ஏக்கம், காதலை நோக்கி பயனித்தல், காதலுக்காக காத்திருத்தல் என காதலின் அத்தனை உணர்வுகளையும் கொண்டு காட்சிகளை நிரப்பி படம் முழுவதுமே படுரொமாண்டிக்காக இருக்கிறது. இது எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்ததை போல் வருகிறது அந்த கிளைமேக்ஸ் பாடல் அதுவரை படம் ஏற்படுத்திய உணர்வுகளை இன்னொரு லெவலுக்கு இந்த பாடல் எடுத்து செல்கிறது அதிலும் அந்த பாடல் வரிகள் அற்புதம் (அந்த மொழி தெரியுமான்னு கேக்க கூடாது எல்லாம் சப்டைட்டில் தான் :) ). முதன்முறையாக என் கம்ப்யூட்டரில் ஒரு ஜப்பானிய பாடல் திரும்ப திரும்ப ஓடி கொண்டிருக்கிறது. அந்த அற்புதமான பாடல் உங்களுக்காக..,
படத்தின் இன்னுமொரு முக்கிய ப்ளஸ் இதில் வரும் அனிமேஷன் அதுவும் ரொம்பவும் அழகாக எடுக்கப்பட்டுள்ளது. ரொம்பவே டெம்ப்ளேட்டாக சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு அனிமேஷன் படம் என்பதையே நாம் மறக்கும் அளவிற்க்கு இருக்கிறது. நான் பார்த்த மிக சிறந்த 2D அனிமேஷன்களில் இந்த படத்தின் அனிமேஷனையும் எந்த யோசனையுமின்றி சேர்த்து கொள்வேன். இந்த படத்தை எழுதி தயாரித்து இயக்கி இருப்பவர் Makoto Shinkai என்ற ஜப்பானிய இயக்குநர். ஜப்பானிய விமர்சகர்கள் இவரை அடுத்த மியாசாகி என்றுழக்கும் அளவிற்க்கு நம்பிக்கை தருபவராக இருக்கிறார்.
எவ்வளவோ யோசித்தும் குறையென்று எதுவும் சொல்ல தோன்றவில்லை அவ்வளவு பிடித்துவிட்டது. ஏதேனும் ஒரு விடுமுறை நாளில் ஒரு மணிநேரம் மட்டும் செலவு செய்து இந்த படத்தை பாருங்கள் அட்லீஸ்ட் ஒரு நாளுக்காவது அந்த பாதிப்பு இருக்கும் நிச்சயமாக...

பார்த்துடுவோமில்ல....லைட்டா
தல,
படத்தோட கதை ரொம்பவே நல்லா இருக்கு...எப்படி இந்த மாதிரி மெல்லிய காதல் கதையை 2D அனிமேஷன் படமா எடுத்தாங்க என்கிற ஆச்சிரியம் எனக்கு வந்திச்சு...அந்த பாட்டை பார்த்த அப்புறம் அந்த எண்ணம் போயே போச்சி.....மிக மிக அருமையான பாடல்..இசைக்கு மொழி அவசியம் இல்லை என்பதை ரொம்பவே ஆணித்தரமாக நிருபித்த பாடல்...இந்த மாதிரி படத்தை/பாட்டை அறிமுக படுத்தியதற்க்கு...ரொம்ப தேங்க்ஸ் பாஸ்...
ரொம்பவே உணர்வுபூர்வமான விமர்சனம்..
ஜப்பானிய அனிமேஷன் படங்கள் நம்மை களிப்பூட்டுகின்றன.
அதே சமயத்தில் நம் ரசனையின் லெவலையும் அதிகப்படுத்தி விடுவார்கள்.
நல்லதொரு படத்தையும்...இயக்குனரையும் தெரிந்து கொள்ள உதவியதற்க்கு நன்றி.
Enna pa climax ipdi aaidichi :( :( .. but anyways nice to watch that song again and again...
டோரண்ட் லிங் கொடு நண்பா...
ரொம்ப ஆவலாயிட்டேன்...
@சிட்டுகுருவி
பாருங்க நண்பா..,
@ராஜ்
நன்றி நண்பா..
@உலக சினிமா ரசிகன்
ஆமா சார் ஜப்பானிய அனிமேஷன்கள் தனிதன்மை உடையவை..
@ஜகன்..,
ஆமாண்ணா.., ஒரே Peelingsss...,
@அகல் விளக்கு
http://kat.ph/5-centimeters-per-second-2007-dual-audio-720p-brrip-pirateboy-silver-rg-t6449993.html என்ஜாய் நண்பா..,