தனிமை மிக கொடுமையானது யாரும் விரும்பாதது யாருக்கும் நிகழக்கூடாதது. எத்தனையோ மனிதர்கள் சுற்றி இருக்கும் போதும் ஒருவன் தனிமையில் இருப்பது என்பது விருப்பம் அல்ல தேர்வு அல்ல அது ஒரு தேடலின் துயர முடிவு மானுடத்தின் பெருந்தோல்வி மொழியும் நாகரீகமும் வெட்கி தலைக்குனியும் தருணம். தனிமையை விரும்புவதாய் சொல்லும் அனைவரும் தங்கள் பாசாங்குகளையும் போலித்தனங்களையும் விலக்கி வைத்த பின் ஏற்படும் உண்மையான உறவை வென்றிடாதவர்கள். உண்மையில் யாருக்கும் தனிமை விதிக்கப்படுவதல்ல அனைவரும் பாசாங்கற்ற முகத்தையும் மனதையும் அவர்களுக்கே காட்டிடும் யாரோ ஒருவரை ஒரு முறையேனும் சந்திக்க தான் செய்கிறார்கள். பெரும்பாலும் அந்த சந்திப்புகள் மட்டுமே உறவை ஏற்படுத்துவது இல்லை எதாவது தடையோ காரணமோ கண்டுபிடித்து அதற்கு ஒரு பெயரும் வைத்து ஒதுங்கியே இருக்கிறார்கள். ஒரு புன்னகை மறுக்கப்பட்டிருக்கலாம் ஒரு கடும் பார்வை வீசப்பட்டிருக்கலாம் எப்போதேனும் வார்த்தைகள் கட்டுபாட்டை இழந்திருக்கலாம் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் உங்களுக்கானவரை நோக்கி செல்லுங்கள் வாழ்கை வசந்தமாகட்டும்..,
எல்லா ஆஸ்கரிலும் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கறுப்பு குதிரையாக எதாவது ஒரு படம் நிறைய விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு ஆச்சர்யப்படுத்தும். இந்த கறுப்பு குதிரைகள் சில சமயம் பயங்கரமாய் இம்ப்ரஸ் செய்து ஆச்சர்யப்படுத்தும் சில படங்கள் காசு கீசு குடுத்து வந்துருப்பாய்ங்களோன்னு சந்தேகப்படும் அளவிற்கு மொக்கை போடும் அவற்றுள் இந்த திரைப்படம் முதல் வகையை சேர்ந்தது. ஆஸ்கர் விருகளுக்கான பரிந்துரைகளை பார்த்த போது மற்ற படங்களின் பெயரேனும் தெரிந்து இருந்தது இதன் பெயரே அப்போது தான் கேள்விப்பட்டேன் அதே நேரத்தில் பார்த்த மாத்திரத்தில் பிடித்து போய்விட்டது. மூணு, ஆரோகணம் ஆகிய படங்களின் மூலம் நமக்கு அறிமுகமான Bi-Polar Disorder உள்ள நாயகன் அவருக்கு ஏற்ற(!!) பெண்ணை கண்டு வேற்றுமைகளை கடந்து இணைந்தார் என்பதை படுஜாலியாகவும் சுவாரஸியமாகவும் சொல்லி இருக்கும் படம் தான் Silver Linings Playbook.
மனைவியுடன் இருந்த ஆணை தாக்கிவிட்டு Bi-Polar Disorder வியாதிக்காக மனநல மருத்துவமனையில் எட்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார் பிராட்லி ஹூப்பர். அவர் முழுமையாக குணமாவதற்க்கு முன்னதாகவே நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வீட்டிற்க்கு அழைத்து வந்துவிடுகிறார் அவருடைய அம்மா. அவருடைய மனைவியை 500 அடிக்கு தூரத்திற்கு குறைவாக நெருங்க கூடாது என்ற Restraining உத்தரவுடன் வீட்டிற்க்கு வரும் பிராட்லி அவருடைய முழுநேர வேலையாக மனைவியை தேடுகிறார். சமீபத்தில் கணவனை இழந்த ஜெனிஃபர் லாரன்ஸை ஒரு விருந்தில் சந்திக்கிறார். கணவன் இழந்த சோகத்தை குறைப்பதற்க்காக டான்ஸ் பயிற்சியில் ஈடுப்படும் ஜெனிஃபருக்கு ஏகப்பட்ட ஆண்களுடன் பழக்கம் இருக்கிறது அதன் காரணமாக வேலையையும் இழக்கிறார். பிராட்லியின் அப்பாவாக வரும் ராபர்ட் டீ நீரோ ஒரு வெறித்தனமாக பெட் கட்ட கூடிய ஃபுட்பால் வெறியராக வருகிறார் அதுமட்டுமில்லாமல் அவருடைய மகன் ஒரு குறிப்பிட்ட சோஃபாவில் உட்கார்ந்து பார்த்தால் அவருடைய அணி வெல்லும் என காமெடியான நம்பிக்கைகள் வேறு உண்டு.
தன்னுடன் நடன போட்டியில் பங்கு பெறுவதாக இருந்தால் பிராட்லியை அவருடைய மனைவியிடன் சந்திக்க வைப்பதாக சொல்லி பயிற்சிக்கு வர வைக்கிறார். பயிற்சியில் எப்போதும் இருப்பதால் சரிவர அப்பாவுடன் சேர்ந்து பேட்ச் பார்க்க முடிவதில்லை. பயிற்சி காலத்தில் இருவருக்கு இடையிலும் ஒரு அழகான உறவு ஏற்படத் தொடங்குகிறது. ஒரு முக்கிய போட்டியின் போது மைதானதிற்கு வெளியே சண்டை போட்டதால் மேட்சிற்கு போகாமுடியவில்லை. அன்றுடீ நீரோ நிறைய பணத்தை தோற்கிறார். இழந்த பணத்தை மீட்பதற்க்காக மொத்த சொத்தையும் ஒரு போட்டியில் பந்தயம் கட்டுகிறார். அந்த போட்டியில் அவருடைய அணி வெல்வதோடு பிராட்லியும் ஜெனிஃபரும் கலந்து கொள்ளும் போட்டியில் பத்திற்க்கு ஐந்து மதிப்பெண்ணாவது வாங்கினால் டீ நீரோ இழந்த அத்தனையும் தருவதாக அவரிடம் பெட் கட்டும் நண்பர் வாக்கு கொடுக்கிறார். அந்த முக்கிய போட்டி என்ன ஆனது ? அந்த டான்ஸ் போட்டி என்ன ஆனது என்பதெல்லாம் உங்களுக்கே தெரியுமென்றாலும் படத்தில் பாத்துகோங்க.
திரைக்கதை தான் எந்தவொரு படத்திற்க்கும் அடிநாதம் என்றாலும் அதை நடிக்கும் நடிகர்களின் நடிப்பே அதன் முழுமையான வடிவத்தை கொடுக்க முடியும். அதற்க்கு உதாரணமாக இந்த படத்தில் வரும் ஒரு கதாப்பாத்திரம் கூட சோடை போகாமல் இந்த படத்தில் நடித்த எல்லோருமே பெர்ஃபாமென்ஸில் பின்னி எடுத்திருக்கின்றனர். படத்தின் இயக்குநர் ‘The Fighter’ படத்தை இயக்கிய David O. Russell அந்த படத்துகாக Christian Bale ஆஸ்கர் விருது வாங்கியது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். உறவுகளுக்கு இடையில் ஏற்படும் மெல்லிய உரசல்கள் அந்த உரசல்களின் ஊடே வெளிப்படும் அன்பு, அட்டகாசமான உரையாடல்கள் குறிப்பாக ஒன்லைனர்கள் என ஃபைட்டர் படத்தில் எதெல்லாம் ஈர்த்ததோ அதுஎல்லாமும் இந்த படத்திலும் இருக்கிறது ஆனால் அத்தனையும் வேறு மாதிரி இருக்கிறது.
Bradley Cooper கதையின் நாயகன் (:P) பேட்டாக நடித்து இருக்கிறார். மனைவியை நினைத்து ஏங்குவது, எப்படியேனும் அவரிடம் பேசிவிட வேண்டும் என தவிப்பது, அதீதமாய் கோபப்படுவது என கதாப்பாத்திரத்திற்க்கு எவ்வளவு நியாயக் செய்ய வேண்டுமோ அவ்வளவு நியாயம் செய்து இருக்கிறார் ஆனாலும் ரெண்டு பேர் சுலபாக அவரை ஓவர் டேக் செய்துவிடுகின்றனர் ஒருவர் படத்தின் ஹீரோயின் Jennifer Lawrence மற்றொருவர் அவருடைய அப்பாவாக நடித்து இருக்கும் Robert De Niro. Hunger Games படத்தில் உம்மனாமூச்சி Katniss ஆக நடித்தவர் இதில் அதற்கு 'Perfectly Opposite' கதாப்பாத்திரத்தில் கலக்கி இருக்கிறார். மனிதில் பட்ட எதையும் கொஞ்சமும் தயங்காமல் பேசுகிற, அடுத்தவர்களை அதிகாரம் செய்பவராக எல்லா ஆண்களுடனும் சுற்றி கொண்டிருப்பவராக ஓவர் ஆக்டிங் செய்வதற்க்கான சகல சந்தர்ப்பங்கள் இருந்தும் அப்படி ஏதும் நிகழாமல் நடித்திருக்கிறார்.ஏற்கனவே இந்த 14 விருதுகள் வாங்கிவிட்ட நிலையில் போட்டி கடுமையாக இருந்தாலும் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் தலை சிறந்த நடிகர்களுள் ஒருவரான Robert De Niro பிராட்லி ஹூப்பரின் தந்தையாக நடித்து இருக்கிறார். தந்தூரி சிக்கனை தயிர் சாதத்துடம் வைத்து சாப்பிடுவது போல Righteous Kill, New Year's Eve மாதிரியான மொக்கையான படங்களில் தான் சமீபகாலமாக டீ நீரோவை பார்க்க முடிந்த்து. அதுமாதிரி இல்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரின் நடிப்பு திறமையை வெளிப்படும் விதமாய் நல்ல கதாப்பாத்திரத்திலும் நல்ல படத்திலும் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. Philadelphia Eagles அணியின் (Rugby or American Football) அதிதீவிர ஆதரவாளராக எப்பவும் அதை பற்றியே பேசிக்கோண்டிருக்கும் ஸ்டேடியத்திற்க்குள் நுழைய தடை விதிக்கப்படும் அளவிற்க்கு வெறித்தனமாக தனது அணிக்காக சண்டை போடக்கூடிய கதாப்பாத்திரம் வயசானலும் சிங்கம் தான் மாதிரி அசால்ட்டாக நடித்திருக்கிறார். டீ நீரோ வுக்கும் சிறந்த துணை நடிகர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார் கடும் போட்டியின் காரணமாக கிடைப்பது கடினம் தான் என்றாலும் கிடைத்தால் ரொம்ப சந்தோஷம்.
சிறந்த திரைப்படம் உட்பட எட்டு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. பரிந்துரையிலையே சில சாதனைகளையும் செய்தும் இருக்கிறது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை என நடிப்புக்காக வழங்கப்படும் நான்கு விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது கடந்த முப்பது வருடங்களில் இந்த சாதனையை செய்யும் முதல் திரைப்படம் இது தான் அதுமட்டுமில்லாமல் ஆஸ்கர் வரலாற்றிலேயே எந்த படமும் இந்த இந்த நான்கு விருதுகளையும் வென்றதில்லை ஆகவே இந்த படம் இந்த நான்கு விருதுகளையும் வாங்கும் பட்சத்தில் அது ஆஸ்கர் வரலாற்றில் புதிய சாதனையாக இருக்கும். சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை (Adapted or Original) இந்த ஐந்து விருதுகளையும் சேர்த்து Big Five என்று சொல்லுவார்கள். இந்த ஐந்து விருதுகளையும் ஒரே படம் வெல்லும் அரிய நிகழ்வு மூன்று முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. இந்த படமும் இந்த ஐந்து விருதுகளுக்காகவும் நாமிநேட் செய்யப்பட்டுள்ளது இதற்கு முன்பாக 2004-ல் Million DOllar Baby தான் இந்த 5 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது ஆனால் மூன்றை தான் வெல்ல முடிந்தது.
சிறந்த திரைப்படத்திற்க்கான ஆஸ்கர் விருதை வெல்வதற்க்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும் பரிந்துரை பட்டியலில் கறுப்பு குதிரையாக வந்தது போல் விருது பட்டியலிலும் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் வந்து ஆச்சர்யபடுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்க்கு இல்லை :).