
தனிமை மிக கொடுமையானது யாரும் விரும்பாதது யாருக்கும் நிகழக்கூடாதது. எத்தனையோ மனிதர்கள் சுற்றி இருக்கும் போதும் ஒருவன் தனிமையில் இருப்பது என்பது விருப்பம் அல்ல தேர்வு அல்ல அது ஒரு தேடலின் துயர முடிவு மானுடத்தின் பெருந்தோல்வி மொழியும் நாகரீகமும் வெட்கி தலைக்குனியும் தருணம். தனிமையை விரும்புவதாய் சொல்லும் அனைவரும் தங்கள் பாசாங்குகளையும் போலித்தனங்களையும் விலக்கி வைத்த பின் ஏற்படும் உண்மையான உறவை வென்றிடாதவர்கள்.